சிவா-அஜித் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியிருக்கும் வேதாளம் படம் நவம்பர்10ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் இப்படத்தின் டிரைலரை நாளை இரவு12மணியளவில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த டிரைலர் 2.32 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இப்போதே இப்படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டது. சேலத்தில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அத்தனை டிக்கெட்டும் முடிந்து விட்டதாம். தற்போது இப்படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
அஜித்
,
சிவா
,
சினிமா
,
டிரைலர்
,
வேதாளம்
,
வேதாளம் ரிலீஸ் தேதி