அஜித் படங்களில் எப்போது மாஸ் வசனங்களுக்கு பஞ்சமே இருக்காது. அஜித் ‘அது’ என்று இரண்டு எழுத்தில் சொன்னாலும் திரையரங்கில் விசில் பறக்கும்.
அந்த வகையில் வீரம், வேதாளம் என அஜித்துடன் இணைந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் இயக்கிய படத்தில் பல வசனங்கள் அஜித்திற்காகவே எழுதியது போல் இருக்கும்.
இந்த வசனங்கள் எப்படி உருவாகின்றது குறித்து இயக்குனர் சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் ‘நாங்க வீரம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்ற போது அஜித் சாரிடம் நிறைய விஷயம் குறித்து பேசினோம்.
அப்போது அவர் வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அஜித் வீடு கட்டி கொடுத்தது தெரிய வந்தது, அதை வைத்து தான் ‘நம்ம கூட இருக்கவங்கள் நம்ம பார்த்தால், நம்மை மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ வசனம் உருவானது’ என்று கூறியுள்ளார்.
                        Tags:
                      
Ajith
                          , 
                        
Cinema
                          , 
                        
அஜித்
                          , 
                        
சினிமா
                          , 
                        
வீரம்
                          , 
                        
வேதாளம்