திரை உலகில் நுழைந்ததுமே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் அதிர்ஷ்ட வாய்ப்பு மலையாள நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்துள்ளது. கீர்த்திக்கு தமிழில் விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம், சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என இரண்டு படங்களே வெளிவந்திருக்கும் நிலையில் விஜய்யின் 60வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல் தெலுங்கிலும் நேனு சைலஜா படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அல்லது பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இருக்கலாம் என கூறப்படுகின்றது. பிரம்மோத்சவம் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்கின்றார்.
இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகைகளின் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் அதிக மதிபெண்களுடன் முன்னிலையில் உள்ளாராம்.மேலும் இயக்குனர் பாபி இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாணின் அடுத்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
Cinema
,
அஜித்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
பவன் கல்யாண்
,
விஜய்60
,
வேதாளம்