Quick Bread Idli Recipe..!!

1:33 AM |
Ingredients

4 bread slices, white / wholegrain
1 cup idli rava / rice rava
salt to taste
1 cup thick curd, preferably sour
1½ cup water, or as required
pinch of baking soda
oil to grease idli plate

Instructions

firstly, take bread slices and cut the sides. this helps to prepare white idlis.

furthermore, grind to smooth powder like bread crumbs.
then transfer the bread crumbs to a large mixing bowl.
additionally, add a cup of idli rava.

also add salt to taste and a cup of thick curd.
furthermore, give a good mix.

add water as required to prepare idli batter consistency.
also add ¼ cup of water above the batter so that it doesn't dry up. do not worry if your battery is watery, as bread and idli rava will absorb water.

rest the batter for 20 -30 minutes.

then, give a good mix, add water if required.

adjust the consistency to of idli batter.

just before steaming add a pinch of baking soda and mix well till it turns frothy.

brush the plates with oil and pour the batter immediately into the idli plate. do not rest the batter.

as other idlis you have to steam it for 8-10 mins on medium flame. allow it to rest for 5 mins then unmould.


serve hot with coconut chutney and sambar.

மேலும் வாசிக்க…

பார்லர் செல்லாமலே கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்யனுமா? நீங்கள் அறிந்திராத 5 எளிய டிப்ஸ்

1:20 AM |
கூந்தல் வளைந்து, அலை போல இருப்பது சிலருக்கு பிடிக்காது. இன்னும் சிலருக்கு ஒரே மாதிரியான கூந்தல் அலுத்துவிடும், ஒரு மாற்றத்திற்காக சுருள் கூந்தலை நேராக்க விரும்புவார்கள்.
பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டுமே என விரும்பிய வகையில் நேர்படுத்தாமல் இருப்பார்கள். அவ்வாறு கெமிக்கல் மற்றும் அதிக வெப்பம் பாய்ச்சி செய்யப்படும் இந்த விதமான ஸ்ட்ரெடியிட்டனிங் கூந்தலுக்கு நல்லதல்ல.

கூந்தல் கொத்து கொத்தாக உதிரும். முடி வளர்ச்சி தடைபடும்.
இயற்கையான முறையில் கூந்தலை நேர்படுத்த இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பாருங்கள்.

முல்தானி மட்டி :
நிறைய பேர் முல்தானி மட்டி சருமத்திற்கு மட்டும்தான் என நினைக்கிறார்கள். இது கூந்தலுக்கும் உபயோகப்படுத்தலாம். முல்தானி மட்டி பொடியில் நீர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதனை தலைமுடியில் தடவுங்கள். பிறகு மெதுவாக ஒரு சீப்பில் சீவவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள். பிறகு பாருங்கள்

பால் மற்றும் முட்டை ;
1 கப் பாலில் 2 முழு முட்டையை ஊற்றி 1 நிமிடம் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவவும். தலைமுடியை கொண்டை போல் போட்டு 1 மணி நேரம் அப்படியே விடுங்கள். பிறகு ஷாம்புவினால் தலை முடியை அலசவும்.

சோளமாவு மற்றும் தேங்காய் பால் :
தேங்காய் பால் அதிக ஊட்டச் சத்தை தரும். 1 கப் தேங்காய் பாலில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், அரை மூடி எலுமிச்சை சாறு, மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு ஆகியவற்றை கலந்து அடுப்பில் வைத்தி சில நிமிடங்கள் சூடாக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற விடுங்கள். ஆறியதும் அதனை தலையில் தடவவும்.1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

வாழைப்பழம் மற்றும் தேன் :
ஒரு வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் யோகர்ட், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 3 ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை தலை முடியில் தடவி 1 மணி நேரம் காய விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசவும்

ஆளி விதை மற்றும் கற்றாழை :
ஒரு கப் நீரில் ஆளிவிதை 2 டீஸ்பூன் போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நீரில் சோற்றுக் கற்றாழை 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், 2 டீஸ்பூன் தேன் ஆகியவ்ற்றை கலந்து தலையில் தடவுங்கள்.காய்ந்தபின் தலைமுடியை அலசவும்.
மேலும் வாசிக்க…

பெண்களின் இந்த 6 முக்கிய அம்சங்கள் தான் ஆண்களைக் கவருகிறது என்று தெரியுமா?

12:11 AM |
ஒரு ஆண் பெண்ணைப் பார்த்ததும் காதலில் விழுவதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. சொல்லப்போனால் ஆண்களால் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே அவர்களைக் கணிக்க முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

அதன் படி, ஒவ்வொரு முறையும் ஆண்கள் பெண்களை கவனிக்கும் போது, ஆண்களுக்குள் ஓர் இனப்பெருக்க பயிற்சி மதிப்பீடு நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்கள் பெண்களின் முக்கிய அம்சங்களைப் பார்த்து கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவர்கள்.

இந்த முக்கிய அம்சங்கள் தான் ஒரு பெண்ணை கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறது. ஏனெனில் அந்த முக்கிய அம்சங்கள் அவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையுடன் தொடர்புடையது.

இங்கு அறிவியல் கூறும் ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அழகிய வளைவுகள்
ஆய்வுகளில் விலா எலும்புகளுக்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதி சிறியதாகவும், பரந்த இடுப்பையும் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்களாம். உதாரணமாக, சிறந்த இடுப்பு விகிதம் 7:10 ஆகும்.

ஆண்கள் இம்மாதிரி அழகிய வளைவுகளைக் கொண்ட பெண்களால் கவரப்படுவதற்கு காரணம், இந்த அம்சம் கொண்ட பெண்களின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்பதால், அவர்களை அறியாமலேயே அம்மாதிரியான பெண்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

வாயாடி பெண்கள்
உரத்த குரலில் படபடவென்று பேசும் பெண்கள் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதனால் தான் ஆண்கள் அமைதியாக இருக்கும் பெண்களை விட, வாயாடி பெண்களின் மீது காதலில் விழுகிறார்கள்.

இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், உரத்த குரலானது பெண்களின் இளமை மற்றும் பெண்மையை அறிந்து கொள்ள உதவுகிறதாம்.

உயிரியல் ரீதியாக இளமை என்பது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சாதகமாக இருப்பதை வெளிக்காட்டும். அதனால் தான் ஆண்கள் அவர்களை அறியாமலேயே வாயாடி பெண்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.


நீளமான மற்றும் அழகான கூந்தல்
குட்டையான கூந்தலைக் கொண்ட பெண்களை விட, நீளமான கூந்தலைக் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான்.

இதற்கு காரணம் நீளமான பட்டுப் போன்ற கூந்தல் பெண்களின் ஆரோக்கியமான உடலை வெளிக்காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்களே ஆண்களைக் கவர கூந்தலை நீளமாக வளர்த்து வாருங்கள்.

புன்னகை
பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும் மற்றொரு முக்கிய அம்சம் புன்னகை. எப்போதும் புன்னகைக்கும் முகத்துடன் இருக்கும் பெண்கள் தான் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

வெறும் புன்னகை மட்டும் இருந்தால் போதாது, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருந்தால் தான், அது ஆண்களைக் கவர உதவும். எனவே பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ளுங்கள்.

அளவான மேக்கப்
மேக்கப் போட்டு ஆண்களைக் கவர்ந்துவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஆய்வின் படி, ஆண்கள் மேக்கப் போடாமல் இயற்கை அழகுடன் இருக்கும் பெண்களின் மீது தான் காதல் வயப்படுவதாக தெரிய வந்துள்ளது.

எனவே இனிமேல் பல அடுக்கு மேக்கப் போடுவதைத் தவிர்த்து, இயற்கை அழகில் ஜொலிக்க ஆரம்பியுங்கள். இதனால் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிவப்பு
பொதுவாக கருப்பு நிறத்திற்கு அடுத்தப்படியாக, சிவப்பு கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட உதவும் ஓர் நிறம். மானுடவியல் ஆய்வுகளின் படி, சிவப்பு நிற ஆண்களை எளிதில் கவர உதவுவதாக கூறுகின்றன.

ஆகவே பெண்களே நீங்கள் சைட் அடிக்கும் ஆணை எளிதில் கவர நினைத்தால், சிவப்பு நிற உடை, சிவப்பு நிற நெயில் பாலிஷ், சிவப்பு நிற லிப்ஸ்டிக் என்று ஒரே சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுங்கள்.

மேலும் வாசிக்க…

இரவில் தனியாக செல்லும் பெண்கள் எப்படி தம்மை தற்காத்துக் கொள்ளலாம்..!!

3:13 AM |
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்குமே இல்லை. தினம்தினம் பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, கொலை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அப்படிப்பட்ட நிலைமை வந்தால் எப்படி பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ளலாம்...

நள்ளிரவில் பெண்கள் தனியாக ஆட்டோ, டாக்சி ஏற நேர்ந்தால் என்ன செய்வது? ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பாக அதனுடைய ரெஜிஸ்ட்ரேசன் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தொடர்பு கொண்டு டிரைவருக்கு புரியும் விதத்தில் அவரை பற்றியும், ஆட்டோ பற்றிய விவரங்களையும் தெரிவித்து விடுங்கள். உங்கள் தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்காவிட்டாலும் கூறுவது போல் நடிக்கவாவது செய்யுங்கள். இதன் மூலம் ஆட்டோ டிரைவர் தான் ஏதேனும் தவறாக நடக்க முயற்சித்தால் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்துகொள்வார். அவரே உங்களுக்கு பாதுகாப்பாகவும் மாறி விடுவார் அந்த சமயத்தில்.

இரவில் நீங்கள் துரத்தப்பட்டால்? ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ, கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள். அப்படி இல்லை என்றால் ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள். அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பார்கள். மேலும் அங்கு கேமராவும் இருக்கும். அதனால் யாரும் உங்களை எதுவும் செய்ய இயலாது.

ஒரு பெண் தன்னுடைய இரவு பணி முடிந்து அப்பார்மெண்ட் வீட்டிற்கு ஒரு முகம் தெரியாத ஆணுடன் லிப்டில் நுழைய நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? சிம்பிள்... லிப்டிற்குள் நுழைந்து விடுங்கள். நீங்கள் 13ஆவது மாடியை அடைய வேண்டும் என்றால் லிப்டின் எல்லா பட்டன்களையும் அழுத்தி விடுங்கள். இதன் மூலம் எல்லா மாடிகளிலும் லிப்ட் திறந்து மூடுவதன் மூலம் உங்கள் மீதான தாக்குதலை தவிர்க்கலாம்.

ஆட்டோ டிரைவர் போக வேண்டி இருக்காத சாலையில் நுழையும் போது நீங்கள் அபாயத்தில் இருப்பதாக உணர்ந்தால் என்ன செய்வீர்கள்? உங்களுடைய பணப்பையின் கைப்பிடியை உங்களது துப்பட்டாவில் முடிந்து கொள்ளுங்கள். அதனை அவனுடைய கழுத்தில் இறுக்கி பின்னால் தள்ளுங்கள். அவன் கண்டிப்பாக உதவியற்ற நிலைக்கு தள்ளப்படுவான். ஒருவேளை பர்ஸ் இல்லையென்றால் அவனுடைய காலரைப் பிடித்து இழுங்கள். அவனுடைய சட்டை காலர் பட்டனே அவனுக்கு எமனாக மாறிவிடும்.

எப்பொழுதும் பேனா கத்தி,பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றையும் உங்களது கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.இதனால் நாமே நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
மேலும் வாசிக்க…

கருப்பாக இருப்பவர்களுக்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பியூட்டி டிப்ஸ்..!!

4:16 AM |
கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* 3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
மேலும் வாசிக்க…

The Video is Only For Awareness Purposes

6:21 PM |
மேலும் வாசிக்க…

பூந்தி லட்டு : விரிவான செய்முறை விளக்கங்களுடன்..!!

2:15 AM |
தேவையான பொருட்கள் 
250 கிராம் கடலைமா
400 கிராம் சீனி
50 கிராம் பெரிய கல்லுசீனி
100 கிராம் கயு
25 கிராம் ஏலக்காய்
1/2 லீற்றர் எண்ணை
8 கப் தண்ணீர்
1/2 சுண்டு அவித்த கோதுமை மா
சிறிதளவு உப்பு
1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
மஞ்சள் கலறிங்

செய்முறை:
முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும்.

பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.

அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தாச்சிக்கு மேல் பிடித்தவாறு, மாவை சிறிதுசிறிதாக விட்டால் அவை தாச்சியில் உள்ள எண்ணெயில் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும்.
(மாவை விடும்போது எண்ணெய் நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடாகவோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்)

தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி போடுவதை நிறுத்திவிட்டு, தாச்சியில் உள்ள பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும்.

பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான பதத்தில்) எடுத்து, வடிதட்டில் போட்டு எண்ணை வடியும் வரை தாச்சியில் பிடித்து வடித்தெடுக்கவும்.

பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கஜூவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும்.

அத்துடன் சீனியை 3 கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்த பாணி காச்சவும்.

பாணிடை தண்ணீரக்குள் விட்டுப் பார்க்கும் போது கரையும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும்.
அத்துடன் கயு ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு  பூந்தியில் சேரும்வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும்.

கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து பரவலாக அடுக்கவும். பின்னர் அதற்கு மேல் பெரிய கல்லுச் சீனியை தூவி அழகுபடுத்தி பரிமாறலாம்.

பூந்தியை பொரிப்பதற்கு என்ன எண்ணெய் என்றாலும் பாவிக்கலாம். நெய் விஷேசமானது.

இனிப்பு பண்டங்களுக்கு நெய் சுவையைக் கூட்டிக் கொடுக்கும்.
ஆனால் நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். எண்ணெயில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.
பச்சைக் கற்பூரம் இந்தியாவில் சேர்ப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர் பாவிப்பதாக தெரியவில்லை. கராம்பு அனேகம் பேருக்குப் பிடிக்கும்.  பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள்.

தேவையாயின் பச்சைக் கற்பூரத்தையும், கராம்னையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை வாசனைக்காக சேர்ப்பவை
மேலும் வாசிக்க…

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

10:23 PM |
தேவையானப்பொருட்கள்: 

கோதுமை ரவா - 1 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் பொடித்தது - ஒன்றரை கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்  

செய்முறை: 

* வெறும் வாணலியில், கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்து குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* குக்கரை திறந்து, வெந்த ரவை மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வெல்ல பாகையும் விட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி, கிளறி விடவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும்.

* ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.

* கோதுமை ரவை இனிப்பு பொங்கல் ரெடி.
மேலும் வாசிக்க…

வென்னிலா மில்க் ஷேக் செய்வது எப்படி??

2:20 AM |
தேவையான பொருட்கள்:
வென்னிலா எசன்ஸ் – 3 டீஸ்பூன்
சர்க்கரை – 3/4 கப்
பால் – 1/2 லிட்டர்
வென்னிலா ஐஸ் க்ரீம் – 1 கப்
பாதாம், பிஸ்தா – சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் பால், வென்னிலா ஐஸ் க்ரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வென்னிலா மில்க் ஷேக் ரெடி!!!
மேலும் வாசிக்க…

என்றென்றும் இளமை வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் தவிர்க்கக்கூடாத உணவுகள்!

1:24 AM |
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள்.
இதற்காக பல்வேறு விதமான க்ரீம்கள், மாதம் ஒரு முறை அழகு நிலையம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

அவ்வாறு நீங்கள் சென்றாலும், செல்கள் தேய்மானம் அடைந்து தோல்கள் விரைவில் சுருங்கிவிடும் எனவே நீங்கள் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொண்டாலே என்றென்றும் இளமை தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும்.

அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டிஆ க்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

மாம்பழம்

கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும்.

இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டாகரோட்டீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

கீரை

கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

எனவே கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் இருக்கலாம்.

ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

முட்டை

முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.

குடைமிளகாய்

குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டாகரோட்டீன் அதிகம் உள்ளன.

பால்

பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.

இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இளமையோடு இருக்கலாம்.

தக்காளி

தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும்.

ஆகவே இவற்றை சாப்பிட்டால் இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.

உடற்பயிற்சி

உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சி.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.

நிம்மதியான தூக்கம் வரும், எந்த பக்கவிளைவும் இல்லாதது.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி.

வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.

ரத்த ஓட்டம் சீராகும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், மற்றவர்களுடன் உரையாடிய படியே நடக்கும்போது மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

காலை ஆறு மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிடுங்கள்.

சுகமான காற்று முகத்தில்படும் போது, புத்துணர்ச்சி கிடைக்கும்.

பிறகு, அரை மணி நேரம் கழித்து பால், காபி, டீ என ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம்.

8 மணிக்கு 3 இட்லி, தோசை, இடியாப்பம் என எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். மதியம் 1 மணிக்கும், இரவில் 8 மணிக்கும் சாப்பிட வேண்டும்.

கண்டிப்பாக 10 மணிக்கு மேல் தூங்கிவிட வேண்டும். இதுபோன்று கடைப்பிடித்தால் கண்டிப்பாக முதுமையிலும் இளமையாக வாழலாம்!
மேலும் வாசிக்க…

கிறிஸ்மஸ் டூட்டி ஃபுரூட்டி கப் கேக்..!!

11:45 PM |
தேவையான பொருட்கள்:
கலவை: 1
மைதா – 3/4 கப்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
டூட்டி ஃபுரூட்டி – 1/4 கப்
உப்பு – 1 சிட்டிகை
கலவை: 2
சர்க்கரை – 1/3 கப்
எணணெய் – 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்
கலவை: 3
கெட்டியான தயிர் – 1/4 கப்
வினிகர் – 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

செய்முறை: 
முதலில் ஒரு பௌலில் கலவை 2-இல் கொடுக்கப்பட்ட சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் சிறு பௌலில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃபுரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, 2 முறை சலித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் 1 டேபிள் ஸ்பூன் டூட்டி ஃபுரூட்டியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் மற்றொரு பௌலில் கலவை 3-இல் கொடுக்கப்பட்ட தயிர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் கலவை 1, கலவை 2 மற்றும் கலவை 3 ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு 180 டிகிரி C-யில் மைக்ரோ ஓவனை சூடேற்ற வேண்டும். பின் பேக்கிங் ட்ரேயில் பேப்பரால் செய்யப்பட்ட கப் கேக் லைனரை வைத்து, அதற்குள் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள டூட்டி ஃபுரூட்டியை தூவி, மைக்ரோ ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து,
மேலும் வாசிக்க…

உடல் பருமனை குறைக்க நடிகைகள் கடைபிடிக்கும் டயட்..!!

1:59 AM |
உடல் பருமனை குறைக்க நாம் ஒருபக்கம் முயற்சி செய்தாலும் கூட, மறுபக்கம் தானாக அது ஏறத்தான் செய்கிறது.ஆனால், நடிகைகள் மட்டும் காலாகாலமாக எவ்வளவு வயதானலும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அது எப்படி? அது ஒன்றும் பெரிய மாய வித்தை கிடையாது அவர்கள் கடைபிடிக்கும் டயட் தான் அவர்களது உடல் எடை கூடாமல் இருக்க உதவுகிறது

சோனாக்ஷி சின்ஹா

இவர் புரதச்சத்து நிறைந்த உணவை அதிகம் இவரது உணவுமுறையில் சேர்த்துக் கொள்கிறார். மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்கிறார். தினமும் மூன்று கப் கிரீன் டீ குடிப்பது இவரை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறதாம். வயிறு நிறைய உணவை உட்கொள்ளாமல், சிறிது, சிறிதாக பிரித்து உட்கொள்ளும் பழக்கத்தை சோனாக்ஷி சின்ஹா கொண்டிருக்கிறார். மற்றும் தினமும் நிறைய நீர் குடிக்கிறார்.

கத்ரீனா கைப் 

காலை எழுந்ததும் மூன்று கிளாஸ் நீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கத்ரீனா கைப். இது உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறதாம். புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவை தான் இவர் விரும்பி உண்கிறார். மேலும் உடல் வறட்சி ஏற்படாமல் இருக்க தினமும் எட்டு கிளாஸ் நீர் பருகுகிறார் கத்ரீனா கைப்.

ஆலியா பட் 

எண்ணெய் மாற்றும் ஜங்க் உணவுகளில் இருந்து தள்ளியே இருக்கிறார் ஆலியா பட். ஃப்ரஷான காய்கறி, பழங்களை விரும்பி சாப்பிடுகிறார். ஜூஸ், நட்ஸ் போன்ற உணவுகள் இவருக்கு பிடித்தமான உணவுகள். மேலும் இரவு உணவை, உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறார் ஆலியா பட்.

கஜோல் 

வயது ஏறினாலும், எடை ஏறாமல் பார்த்துக் கொள்கிறார் கஜோல். ஃப்ரஷான காய்கறி, பழங்கள் சாப்பிடுவது, தினமும் அதிகமாக நீர் பருகுவது போன்றவை தான் இவரது டயட் இரகசியம் என்கிறார்.

கரீனா கபூர் 

பிரியாணி என்றால் கரீனா கபூருக்கு மிகவும் பிரியம். இவர், "ஒருவர் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் அதற்கு ஏற்ற உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்தாலே போதுமானது" என்கிறார். இவர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம், கொஞ்சமாக உணவு உட்கொள்ளும் முறையை பின்பற்றுகிறார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

அனைவரையும் போல ஐஸ்வர்யா ராயும் கூட கார்போஹைட்ரேட் குறைவான உணவு மற்றும் புரதம் அதிகமுள்ள உணவை தான் தேர்வு செய்கிறார். அதிகமாக பசி எடுக்காமல் இருக்க நிறைய தண்ணீர் பருகுகிறார் ஐஸ். மேலும் ஜங்க் ஃபுட்ஸ் பக்கம் தனது தலையை கூட திருப்புவதில்லையாம் ஐஸ்.
மேலும் வாசிக்க…

பண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா???

1:50 AM |
பண்டிகை காலங்களில் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது, அவர்களின் பாராட்டைப் பெற வேண்டுமென்று பல பெண்கள் நினைப்பார்கள். அதிலும் அத்தை அல்லது மாமா பையன் இருந்தால், அப்போது செய்யும் மேக்கப்பிற்கு அளவே இருக்காது. ஆனால் அப்படி மேக்கப் போட்டு வீட்டில் உள்ளோரை பயமுறுத்துவதற்கு பதிலாக, முகத்தின் பொலிவை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டால், சருமம் பளிச்சென்று மின்னும். இங்கு சருமத்தின் நிறம் மற்றும் பொலிவை அதிகரிக்க உதவும் சில எளிமையான ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகம் அழகாக ஜொலிக்கும்.

பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக் 

பாலில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பேக் 

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து, அரைத்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருமைகள் அகலும்.

வாழைப்பழ மாஸ்க் 

ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும ஆரோக்கியமும் மேம்படும்.

ஆரஞ்சு தோல் மற்றும் சந்தனப் பொடி 

ஆரஞ்சு தோலை உலர வைத்து பொடி செய்து, அதில் சிறிது சந்தனப் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கி, முகம் பளிச்சென்று மின்னும்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்

 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒன்றாக கலந்து, அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கும்.

பப்பாளி மற்றும் தேன் பேக்

 பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, முகத்தை கழுவ, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்
மேலும் வாசிக்க…

எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்..!!

12:26 AM |
கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். இவைகளை எப்போது தான் வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்துவோம்.

அப்படி பணம் செலவழித்து கண்ட பொருட்களைப் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.


எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

ஈ
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

 மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்துவிடும்

பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசுவிரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.


மேலும் வாசிக்க…

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க..!!

2:11 AM |
பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

* மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைக­ளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்

* எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.

* மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

* கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சை சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்

* கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 1–2 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.



மேலும் வாசிக்க…

Ombre Nail Art for Beginners || SuperWowStyle

6:26 PM |
Easiest way to do Ombre Nail Art for Beginners - with SuperWowStyle, A no tools nail art with no drawing!








மேலும் வாசிக்க…

Beauty Tips Orange Peel Pack Face Mask for Oily skin..!!

1:26 AM |


Beauty Tips Orange Peel Pack Face Mask for Oily skin..!!






மேலும் வாசிக்க…

How to Remove Tan from Face & Body l * Instant & Naturally * - Secret of Indian Skin Lightening..!!

12:22 AM |

How to Remove Tan from Face & Body l * Instant & Naturally * - Secret of Indian Skin Lightening..!!




மேலும் வாசிக்க…

உங்களுக்கு முடி உதிர்வா ? ஒரு மாதத்தில் தீர்வு காண இந்த வீடியோவைப் பாருங்கள்..!!

11:47 PM |

உங்களுக்கு முடி உதிர்வா ? ஒரு மாதத்தில் தீர்வு காண இந்த வீடியோவைப் பாருங்கள்..!!

Natural Skin & Hair Care : How to Reduce Hair Loss



மேலும் வாசிக்க…

Homemade Face Mask for Skin Whitening..!!

3:14 AM |

Homemade Face Mask for Skin Whitening..!!


மேலும் வாசிக்க…
2015 Thediko.com