தமிழகத்தை தாக்க வருகிறது 'அஸ்ரி'புயல்.... கடலோரப் பகுதிகளுக்கு கடும் எச்சரிக்கை..!

4:47 AM |
அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று கூறப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது.

இதன், தொடர்ச்சியாக வளி மண்டல மேலடுக்கில் நிலவும் காற்று சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது.

நீலகிரி 70 மிமீ, தாராபுரம் 50 மிமீ, பீளமேடு, போளூர், கோவை 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்.

மேலும், அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது. இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில் ‘அஸ்ரி’ (Asiri) என்று அழைக்கப்படும். இந்த பெயரை இலங்கை நாடு சூட்டியுள்ளது.
மேலும் வாசிக்க…

பல பேரிடம் பண மோசடி செய்து ஏமாற்றியதாக குஷ்பு கைது..!!

12:24 AM |
ஐ.ஏ.எஸ். அதிகாரி, வக்கீல், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரி, சினிமா நடிகை, என கூறி பல பேரிடம் பண மோசடி செய்துள்ள மோசடி பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் குஷ்பு சர்மா (25) பலே மோசடி பெண்ணான இவர் சமீபத்தில் பெங்களூரில் சங்கீத் யாங்கி என்னும் வக்கில் வீட்டுக்கு சென்று தானும் உச்ச நீதிமன்றத்தில் வக்கீலாக இருப்பதாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.

அப்போது சங்கீத் யாங்கி பெங்களூர் நகரில் உள்ள யூ.பி.சிட்டி மாலில் எனக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது என குஷ்புவிடம் கூற அதற்கு குஷ்பு சர்மா, எனது தந்தை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவருக்கும் யூ.பி.சிட்டி மாலில் பங்கு இருக்கிறது. எனவே, உங்களுக்கு இடம் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

இதற்காக அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை குஷ்பு பெற்று கொண்டார். பின்னர் சங்கீத் அவரை தொடர்பு கொண்ட போது குஷ்புவின் கைபேசி சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கீத் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

பின்னர் பொலிஸ் இது குறித்து விசாரித்ததில் அந்த குஷ்பு மிக பெரிய மோசடி ராணி என்பதும் வெறும் எட்டாம் வகுப்பு படித்து விட்டு ஐ.ஏ.எஸ், வக்கீல், இன்ஜினியர் என இதுவரை பல பேரை ஏமாற்றி பல முறை சிறைக்கு சென்றிருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது.

தற்போது அவர் தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதை உறுதி செய்த பொலிசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
இன்னும் அவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என தெரிந்து கொள்ள குஷ்புவிடம் தற்போது தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் காதலை உதாசீனப்படுத்திய சுவாதி... ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

11:49 PM |
பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் என் காதலை சுவாதி உதாசீனப்படுத்தினார்... இந்த ஆத்திரத்தில் சுவாதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கொலையாளி ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமார் நெல்லையில் நேற்று இரவு சிக்கினார். அப்போது போலீசிடம் இருந்து தப்பிக்க பிளேடால் கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார்.

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிகிச்சையில் முன்னேற்றமடைந்த நிலையில் ராம்குமாரிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றிருக்கின்றனர்.

அதில் ராம்குமார் கூறியுள்ளதாவது: 

நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தேன். படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.

பொறியியல் பட்டதாரி என அறிமுகம்

அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது. கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்தேன். நான் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். அதே நேரத்தில் சுவாதியும் வேலைக்கு புறப்பட்டு வருவார். அப்போது இருவரும் பேசிக் கொள்வோம். சுவாதியிடம் நான் பொறியியல் பட்டதாரி என அறிமுகம் செய்து பழகி வந்தேன். நாளடைவில் நான் அவரை காதலிக்க தொடங்கினேன்.

ஜவுளி கடை வேலையால் உதாசீனம்

இந்நிலையில் நான் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதும், ஜவுளிக்கடையில் வேலை செய்வதும் சுவாதிக்கு தெரியவந்தது.

காதலை ஏற்க மறுப்பு

இதனால் அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவரிடம் சென்று எனது காதலை சொன்னேன். ஆனால் அவர் என்னை உதாசீனமாக பேசினார். தொடர்ந்து என்னை சந்திப்பதை தவிர்த்தார்.

கெஞ்சிப் பார்த்தேன்...

காலையில் வேலைக்கு செல்லும்போது அவரது தந்தையை ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அதனால் வழியில் அவரை சந்தித்து பேச முடியவில்லை. எனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று 2 முறை அவரிடம் பேசினேன். அப்போது எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி சுவாதியிடம் கெஞ்சினேன்.

2 நாட்களாக பின் தொடர்ந்தேன்...

ஆனால் அவர் உனக்கும், எனக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை, பின்னர் ஏன் பின்னாடி சுற்றுகிறாய் என கூறி என்னை திட்டினார். இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். எனது பேக்கில் புத்தகங்களுடன் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு 2 நாட்களாக சுவாதியை பின் தொடர்ந்தேன்.

சரமாரியாக வெட்டினேன்

கடந்த 24-ந் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி ரயிலுக்கு காத்திருந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன்.. இவ்வாறு ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் வாசிக்க…

சிரித்து கொண்டே சாவு வாக்குமூலம் கொடுத்து விட்டு இறந்த தமிழ் காதலர்கள்..!!

1:03 AM |
மேலும் வாசிக்க…

இந்திய அணியின் தோல்வி எதிரொலி : தற்கொலை செய்துகொண்ட என்ஜினியரிங் மாணவி.!!

7:42 AM |
உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள இயலாத காரணத்தால் மத்தியப் பிரதேசத்தில் என்ஜினியரிங் பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மேலும் வாசிக்க…

காற்சட்டை பொக்கற்றுக்குள் இருந்த கையடக்கத்தொலைபேசி தீப்பற்றி எரிந்தது (காணொளி)

1:58 AM |
நபரொருவரின் காற்சட்டை பொக்கற்றுக்குள் இருந்த கையடக்கத்தொலைபேசியொன்று தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று.

பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் காணொளியும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.




மேலும் வாசிக்க…

ரஷியாவில் வெடித்துச் சிதறிய துபாய் விமானம்: 61 பேர் பரிதாபமாக பலி..!!

3:28 AM |
துபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தடம் எண்:FZ981 கொண்ட, போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், ரஷியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் முதல்முறை தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

சற்று நேரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகி அந்த விமானம் தரையை தொட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த விமானம் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த விமானத்தில் வந்த 55 பயணிகள், விமானி உள்ளிட்ட 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 61 பேர் இந்த விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்தையடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க…

திருப்பதி ஏழுமலையான் கோவிலை ரஞ்சிதாவுடன் தரிசித்த நித்தியானந்தா..!!

9:57 PM |
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சீடர்கள் புடைசூழ சுவாமி தரிசனம் செய்தனர்.

பெங்களூருவில் உள்ள நித்யானந்தா மடத்தின் பீடாதிபதி சுவாமி நித்யானந்தா, கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலிலும் (வாயுலிங்கேஸ்வர்), திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் நடிகை ரஞ்சிதா மற்றும் சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று முன்தினம் ஜடாமுடியுடன் காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்திருந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அவர்களும் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.
புதிய தோற்றத்தில் ஜடா முடியுடன் வந்திருந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் காண ஏராளமானோர் கூடிவிட்டனர். பத்திரிகையாளர்களும் அவர்களை அந்த தோற்றத்தில் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

ஆனால், நித்யானந்தாவின் சீடர்கள் செய்தியாளர்களை புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். இதனால், பத்திரிகையாளர்களுக்கும் நித்யானந்தாவின் சீடர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் காரில் புறப்பட்டு திருமலைக்கு சென்றனர்.
இந்நிலையில், நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். 16 சீடர்களுடன் வந்திருந்த அவர்கள், வரிசையில் நின்று நைவேத்ய பிரேக் தரிசனத்தில் ஏழு மலையானை வழிபட்டனர்.

ஆனால் திருப்பதியில், ரஞ்சிதா துறவி கோலத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் விபூதி அணிந்து வந்திருந்தார். நித்யானந்தாவும், ஜடாமுடி இல்லாமல் காவி உடை அணிந்து காவி தலைப்பாகை அணிந்து இருந்தார்.

சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் பார்க்க ஏராளமானவர்கள் திரண்டு விட்டனர். சிலர் புகைப்படமும் எடுத்தனர்.

ஆனால், புகைப்படம் எடுக்கவிடாமல் நித்யானந்தாவின் சீடர்கள் வளையம் போல நின்று நித்யானந்தாவுக்கும், ரஞ்சிதாவுக்கும் பாதுகாப்பு அளித்தனர்.
கோயில் வளாகத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் நித்யானந்தாவின் சீடர்கள் ஏற்படுத்திய பரபரப்பு, ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்த பக்தர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

அப்போது செய்தியாளர்கள் நித்யானந்தாவிடம் பேட்டி காண முற்பட்டனர். ஆனால் நித்யானந்தாவோ, சிரித்து கொண்டே எதுவும் பேசாமல் காரில் ஏறி சென்றுவிட்டார்.
மேலும் வாசிக்க…

நாகர்கோவிலில் 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கி மாணவர் சாவு ஓடும் பஸ்சில் இறங்க முயன்ற போது பரிதாபம்.!!

5:57 AM |
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றபோது 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாலிபர்

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். பஸ்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதி பஸ் நிலையத்தில் கிடையாது. இதுபோன்ற காரணங்களால் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் நுழையவே திக்குமுக்காடி செல்வது வழக்கம். இதுபோக பிரேக் பிடிக்காத அரசு பஸ்களால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சம்பவமும் நிகழ்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் வடசேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு பஸ் ஒன்று அண்ணா பஸ் நிலையத்துக்குள் வந்தது. அந்த பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது ஒரு வாலிபர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றதாக தெரிகிறது. இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார்.

பஸ்களின் இடையில் சிக்கி சாவு

அப்போது பஸ் நிலையத்தில் 1-வது நடைமேடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கும், கன்னியாகுமரி சென்ற பஸ்சுக்கும் இடையில் வாலிபர் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். இதை பார்த்த பஸ்சின் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பஸ்களின் இடையில் சிக்கிய வாலிபர், நசுங்கியபடி உயிருக்காக போராடினார்.

அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பயணிகள் அலறினர். என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து பஸ்சை இயக்கி அப்புறப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

மாணவர்

இதுபற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் யார்? என்பது தெரியாமல் இருந்தது. அதைத்தொடர்ந்து வாலிபர் வைத்திருந்த பர்சை போலீசார் சோதனையிட்டனர்.

அதில் ஒரு வாக்காளர் அட்டை இருந்தது. அதில், தடிக்காரன்கோணம் பால்குளத்தை சேர்ந்த மோகன் மகன் அனில்குமார் (வயது 22) என்பது எழுதப்பட்டிருந்தது. இதனால் பலியானவர் அனில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியான அனில்குமார் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் விடுமுறை நாட்களில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வேலையை முடித்து விட்டு நேற்று ஊருக்கு செல்வதற்காக அண்ணா பஸ்நிலையம் வந்த போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் பஸ்களுக்கு இடையில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் வாசிக்க…

இந்திய பெண்ணின் தெய்வீக அழகில் மயங்கிய ஆப்பிள் நிறுவனம்..!!

12:10 AM |

தீபாவளி பண்டிகையின்போது யதார்த்தமாக தீப ஒளியுடன் எடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனம் தனது குளோபல் விளம்பரங்களில் பயன்படுத்த தேர்வு செய்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் ஆஷிஷ். இவரது மனைவி ரைனா நானயா. கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஆஷிஷ் தனது மனைவி ரைனா சிகப்பு வர்ண புடவையில் கையில் தீபத்துடன் இருப்பது போல தனது ஐ போன் 6ல் புகைப்படங்களை எடுத்தார். அந்த புகைப்படம் மிக அழகாகவும் ரைனாவை தெய்வீக கலையுடன் ஒரு தேவதை போல காட்டியது.

ஆஷிஷ், பின்னர் அந்த புகைப்படத்தை ஐபோன் 6ல் எடுக்கப்பட்டதாக #ShotOniPhone6S என ஹேஸ்டேக் உருவாக்கி இணையதளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த ஆப்பிள் நிறுவனம் அந்த புகைப்படத்தை தனது விளம்பர நோக்கத்துக்காக தேர்வு செய்திருக்கிறது. இந்த போட்டியில் உலகம் முழுக்க இருந்து மிகச்சிறந்த புகைப்பட கலைஞர்கள் 41 பேர் 53 புகைப்படங்களையும் அனுப்பி இருந்தனர். ஆனால் ரைனாவின் புகைப்படம் தேர்வாகியிருப்பதாக டைம் மேகசின் தெரிவித்துள்ளது.

தற்போது ரைனாவின் புகைப்படங்களை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்து விட்டது. இதனைத் தொடர்ந்து ரைனாவுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏராளமானோர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.

இது குறித்து ஆஷிஷ் தெரிவிக்கையில், ”தீபாவளிப் பண்டிகையின் போது ரைனா எனது தாயாருக்கு தீபங்களை ஏற்ற உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த நான், கையில் தட்டு நிறைய தீபங்ளுடன் ரைனா வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். தீப ஒளியில் அவரது முகம் தெய்வீக கலையுடன் பிரகாசித்தது. அதனை அப்படியே எனது ஐபோனில் புகைப்படமாக பதிவு செய்தேன். ஒரு கணவராக காதலுடன் பதிவு செய்த அந்த புகைப்படம் இப்போது உலகையே வென்று விட்டது ” என்றார்.

மேலும் வாசிக்க…

பெண்களே இது உங்களுக்கான செய்தி கொஞ்சம் உஷாராக இருங்கள்…??

8:46 AM |
ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!

Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது.

மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம்.

அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.

மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்என்கின்றனர் மருத்துவர்கள்.

இதைப் போன்றநிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..!

மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம்இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.

மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும்குடிக்காதீர்கள்…!

ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம்இவை ஏற்றப்படலாம்….!

குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப் பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன் பாடு அதிகரித்துள்ளது.

அத்துடன் வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் பட்டுள்ள இம் மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத் தக்கது விரைவில் முழுமை விபரம்…..!!

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!!
நன்றி…பொது நலம் கருதி வெளியிடுவோர்…
மேலும் வாசிக்க…

மர்ம நோயால் உயிருக்கு போராடும் கல்லூரி மாணவி: மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிரம்..!!

2:38 AM |
இலங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ் என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ல பல்கலைகழகம் ஒன்றில் கண் தொடர்பான படிப்பினை இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி  வித்யா அல்போனஸ்க்கு கடந்த சில வாரங்களாக திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவருக்கு லூக்கிமியா என்னும் ரத்த புற்றுநோயால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவியிடம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாணவியின் உடல் நலம் பலவீனமாக அறிந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக குருத்தணு மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாணவியின் சகோதரர் குருத்தணு கொடுக்க முன் வந்தார்.இதையடுத்து அவரது சகோதரரின் குருத்தணுவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் வெறும் 50 சதவீதம் மட்டுமே மாணவியின் குருத்தணுவுடன் ஒத்துப்போனது.எனவே அவருக்கு குருத்தணு தானம் பெறுவதற்காக,  குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர். (குருத்தணு) Stem cell தானம் செய்பவர்கள் To sign up to the donor list go to www.anthonynolan.org if you’re 16-30. For more information phone the charity on: 0303 303 0303  அழைப்பு  விடுத்துள்ளனர்.

இது குறித்து மாணவி வித்யா அல்போனஸ் கூறியதாவது:

ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். அதனை பார்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் அனுப்பிய செய்திகள் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவது நன்மை ஏற்படும்"

இவ்வாறு  மாணவி வித்யா கூறினார்.
மேலும் வாசிக்க…

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி..!!!

3:24 AM |
நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார்.

ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ‘2.0’, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிறது. கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தன. இதற்காக ரஜினிகாந்த் அந்த நாட்டில் பல வாரங்கள் முகாமிட்டு நடித்துக்கொடுத்தார். தினமும் தன்னை காண வந்த ரசிகர்களையும் சந்தித்தார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பை சமீபத்தில் மீண்டும் மலேசியாவில் நடத்தினர். ரஜினிகாந்த் இதில் பங்கேற்று நடித்து கொடுத்துவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பினார். தொடர்ந்து ‘2.0’ படவேலைகளில் ஈடுபட்டார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தீவிரமாக நடித்ததாலும், இதற்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் சோர்வாக காணப்பட்டார். இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள அறை எண் 101-ல் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.

ரஜினிகாந்துக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைகள்தான் நடந்தது என்றும் அவர் உடல் நலத்தோடு இருக்கிறார் என்றும் மாலையே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதுபோலவே சிகிச்சை முடிந்து மாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

ஏற்கனவே கடந்த 2011 ஏப்ரல் மாதம் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்துக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறினர்.

இதைதொடர்ந்து சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் அந்த ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். டாக்டர் குழுவினர் அவருக்கு உயர்தர சிகிச்சை அளித்தனர்.

தீவிர சிகிச்சைக்குப்பிறகு பூரண குணம் அடைந்து சென்னை திரும்பினார். ராணா படம் கைவிடப்பட்டது. அதன்பிறகு கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். தொடர்ந்து லிங்கா படத்திலும் நடித்தார்.
மேலும் வாசிக்க…

பேஸ்புக் இலவச அடிப்படை சேவை ரத்து : கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்.!!

4:28 AM |
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனத்தின் இலவச அடிப்படை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த 8 ஆம் திகதி புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.

அதன்படி, இணையதள சேவையைப் பொறுத்து, மாறுபட்ட கட்டணம் வசூலிப்பதற்கும், இலவச சேவைகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சேவை வழங்கும் நிறுவனம், பிற நிறுவனங்களுடன், நபர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, இணைய தள சம நிலை சேவையை பாதுகாக்கும் வகையில் எடுத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் தகவல்களுக்கு, எந்த இணையதளமாக இருந்தாலும், எந்த செயலியைப் பயன்படுத்தினாலும், சம கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ்சுடன் இணைந்து பேஸ்புக் உள்ளிட்ட சில அடிப்படை சேவைகளை இலவசமாக வழங்கி வந்த "ப்ரி பேசிக்ஸ்" திட்டம் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீரோ ரேட்டிங் பிளான் மாற்றம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டிராய் விதித்துள்ள இந்த தடை ஏமாற்றம் அளிப்பதாக பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் தனது இலவச அடிப்படை சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சலில், "இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலவச பேசிக்ஸ் திட்டம் இனி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

இலங்கைப் பெண்ணிடம் அசிங்கப்பட்டாரா கோஹ்லி???

1:04 AM |
இலங்கைப் பெண்ணொருவர் , இந்திய அணி வீரர் விராத் கோஹ்லி , அவரது முகாமையாளரிடையே இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவமொன்று தொடர்பில் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

சம்பவத்தன்று இந்திய அணி வீர ர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஹோட்டலில் அந்நாட்டில் வசிக்கும் இலங்கைப் பெண் காலை உணவு உண்ணச் சென்றுள்ளார்.

இதன்போது அங்குவந்துள்ள கோஹ்லியின் முகாமையாளர் “ காலை உணவின் போது இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த இலங்கைப் பெண் காலை உணவின்போது என்ன முடியாது? எனக் கேட்டுள்ளார்.

இதற்கு கோஹ்லியின் முகாமையாளர் “ படங்கள்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு இலங்கைப் பெண் “படங்கள்? யாருடன் எனக் கேட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட கோஹ்லி , “ இல்லை நீங்கள் என்னுடன் படம் எடுக்க வருவதாக நினைத்துக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கைப் பெண் “ நான் ஏன் உங்களுடன் படம் எடுத்துக்கொள்ள வேண்டும், எனக் கேட்டுள்ளார்.
இதன்போது கோஹ்லியின் முகம் அதிர்ச்சியில் உறைந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு படி மேலே சென்ற இலங்கைப் பெண் கோஹ்லியைப் பார்த்து “ நீங்கள் யார்? , நீங்கள் என்ன பிரபலமானவரா? “ எனக் கேட்டு அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் ஒரு படி மேலே சென்று ஹோட்டலின், உணவக முகாமையாளரிடம் இந்திய இளைஞன் தன்னை தொந்தரவு செய்வதாக முறைப்பாடும் செய்துள்ளார்.

இத்தகவலை குறித்த பெண்ணின் கணவரே பேஸ்புக்கில் பதிந்துள்ளார்.




மேலும் வாசிக்க…

நீயா? நானா? – கோபிநாத் – ஒரு கசப்பான உண்மை!

7:49 PM |
நீயா நானா நிகழ்ச்சி பற்றியும் அதை தொகுத்து வழங்கும் கோபிநாத் பற்றியும் ஒரு விரிவான அலசல் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்லி மீடியாக்களின் போக்கு பற்றி கவலைப்பட்டிருந்தார் ஒரு நண்பர்.
தங்கள் அணியினருக்கு கவனமாக பலமுறை வாய்ப்பு மறுக்க பட்டதாகவும் ஒருதலை பட்சமாக பேசுவதாகவும் சொல்லியிருந்தார். சில இடங்களில் நிகழ்ச்சி பற்றியும், கோபிநாத் பற்றியும் வசை பாடப்பட்டிருந்தது.

அப்பதிவிற்கு மொத்தம் 47 பின்னூட்டங்கள். ஆச்சர்யமாக இருந்தது! அத்தனை பின்னூட்டங்களும் அப்பதிவிற்கு சாதகமாகவே இருந்தது. ஒரு பின்னூட்டம் கூட மாற்று கருத்து கொண்டதாக இல்லை. யாருமே மாற்று கருத்து சொல்லவில்லையா? அல்லது மாற்று கருத்து சொல்லப்பட்டவர்கள் கவனமாக தவிர்க்கப்பட்டர்களா?

பொதுவாக இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்த வரை துளியும் சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரை வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துக்களோடு ஒப்பிடும் போது விஜய் டிவியின் நீயா? நானா? எப்பவுமே டாப் தான்.

சமூகம் சார்ந்த கருத்துக்களை விவாதிக்கும் போது ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களையே மனதில் கொள்ள வேண்டும். இரண்டு அணியினரிடமும் இருந்து கூறப்படும் சாதக பாதக அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். நமது பேச்சு திறனையும் சிந்திக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம். அதை விடுத்து எந்த அணி சிறந்தது என்று பார்த்து கொண்டிருக்கக்கூடாது. இது அதற்கான நிகழ்ச்சியும் இல்லை.

சில விளக்கங்கள்:

விஜய் டிவியின் நீயா? நானா? “பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?”,“பெண்களின் கூந்தலில் இருப்பது உண்மையான மயிரா?, போலி மயிரா?”என்பது போன்ற பொருள் பொதிந்த மயிர் பிளக்கும் விவாதங்களே அதிகம் ஒலி/ளி பரப்பியிருப்பதாக அறிகிறேன். – பதிவர்.
அனைவரும் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். நீயா? நானா? நிகழ்ச்சி ஒன்றும் சமூக மாற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் நிகழ்ச்சி இல்லை. புதிய சிந்தனைகளை உள்ளடக்கி அனைத்து தரப்பு மக்களையும் கவருவதற்காகவும் ஒளி பரப்பப்படும் நிகழ்ச்சியே. இதில் பல்வேறு தலைப்புகளை கொண்டு விவாதம் நடத்தப்படுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

மேற்கூறிய தலைப்புகளில் எத்தனை நிகழ்சிகளை பார்த்தீர்கள்?


நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் என்பவர் பல்வேறு கருத்துகள் மக்களை சென்றடைய செய்யும் திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோ மக்களை மடையர்களாகவும், தங்களை நாயகர்களாகவும் நினைக்கின்றனர்.- பதிவர்.
மக்களின் வாழ்க்கை போன்ற முக்கியமான பிரசினைகளை உங்கள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்து மக்களுக்கு தவறான தகவல்களை தருவதற்கு பதில், உங்கள் வழக்கமான பாணியில் “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?” “கூந்தல் இயற்கையானதுதானா?” என்பது போன்ற தலைப்புகளிலேயே விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்!. – பதிவர்.

நீயா? நானா? நிகழ்ச்சி முட்டாள்கள் மட்டுமே பார்ப்பது. கோபிநாத் அவர்களில் மிகப்பெரிய முட்டாள். – பின்நூட்டமிட்டவர்களில் பலர்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி எடுத்து நிகழ்ச்சியை டக்கென முடித்து விடுவார். – பின்னூட்டம்.

கோபிநாத்தை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், மிக சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், சிறந்த மேதை என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. பதிவர் நண்பர் யாரை மனதில் கொண்டு சொன்னார் என்பது தெரியவில்லை.

நண்பர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் காணொளியை பார்த்தேன். இரு அணியினருக்கும் விவாதங்கள் சரியாகவே நடந்தது. ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. விஷயங்கள் தெரிந்தவர், பேச்சு திறமை மிக்கவர் அதிகம் பேசுகிறார். அவ்வளவே!

( நண்பர் நிகழ்ச்சியின் பெரும் பகுதி முன் வரிசையில் அமர்ந்து கொண்டு காலை மட்டுமே ஆட்டிக்கொண்டிருந்தார். பேசவும் முற்படவில்லை. இறுதி வரை அவர் பேசினாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை )
இவர் எதை வைத்துக்கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டவில்லை என்று கூறுகிறார் என்பதும் தெரியவில்லை.

இந்த மாதிரியான டாக் ஷோ வில் நேரத்தை கடத்தாமல் உரிய நேரத்தில் நிறுத்தி அப்படியே சமாளித்து முட்டித்து வைக்கும் திறனும் வேண்டும்.
அந்த (தேவையான) இடங்களில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் இருப்பதில் தவறேதும் இல்லை.

பின்னூட்டம் மட்டுமே இடும் நாம், எதுவுமே பேசாமல் முன்வரிசையில் அமர்ந்து கொண்டு காலை மட்டுமே ஆட்டிக்கொண்டிருந்த நாமே நம்மை இவ்வவளவு அறிவாளிகளாய் பார்க்கும் போது, தொலை நோக்கு பார்வை கொண்ட, பேச்சாற்றல் மிக்க, தொகுப்பாளரான அவரும் அறிவாளியாகத்தான் இருப்பார் என்றே நினைக்கறேன்.

குறிப்பு 1:

கோபிநாத் பெற்ற விருதுகள்:
American Government Invitation to participate in International Visitors Programme (2004)
Young International award by “India Today” Magazine (2007)
Best Anchor of the State by “ஆனந்த விகடன்” (2007,2008)
Invited for the International Health Conference, Sydney (2007)
Outstanding Young Indian by Junior Chamber International(JCI)(2008)

இவ்விருதுகள் சாதாரண குப்பனுக்கோ அல்லது சுப்பனுக்கோ கொடுத்துவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் வாசிக்க…

ரகசிய கேமராவை எப்படி தெரிந்து கொள்வது..??

12:24 AM |
பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்  போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப் புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ள இரகசிய  கேமராவை தெரிந்து கொள்வது எப்படி?

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்து விட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை  ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம்  எடுக்கும் போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்து  விட்டு அறையிலுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்
படம் எடுங்கள்.

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப் பட்டிருப்பின் அது இருட்டுப் புகைப்படத்தில் சிகப்பு நிற  புள்ளிகளாகத் தெரியும்.

இதை வைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள்  பொருந்தியுள்ளதை அறியலாம்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள Share பட்டன் மூலம் Whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.
மேலும் வாசிக்க…

இவர்கள் இரட்டையர்கள் ஆனால் வெவ்வேறு ஆண்டில் பிறந்தவர்கள்

11:20 PM |
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 2015 முடிந்து 2016 ம் ஆண்டு பிறக்கும் வேளையில் ஒரு தம்பதியருக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது.

கலிஃபோரினியா அருகே சான் டியகோ என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மேரிபெல் என்பவருக்கு, 2015 டிசம்பர் மாதம் 31ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

நள்ளிரவில் 2015ஆம் ஆண்டு முடியும் கடைசி விநாடிகளில் மேரிபெல் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார், அப்போது நேரம் 11.59 ஆகும்.

அடுத்த 2வது நிமிடத்தில் மேரிபெல் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.,அப்போது 2016 பிறந்து விட்டது. அதாவது 12.01 மணிக்கு குழந்தையை ஈன்றார்.

2015 ஆம் ஆண்டு முடிந்து, 2016 புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு அதிசயத்தக்க நிகழ்வாகி விட்டது.

அதாவது இரட்டை குழந்தைகளின் பிறந்த ஆண்டு வெவ்வேறாக இருக்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி தற்போது உலகம் முழுக்க பரவி பிரபலமாகி வருகிறது.




மேலும் வாசிக்க…

அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற நெகிழ்ச்சிகரமான சம்பவம்..!!

11:23 PM |
தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப்பில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் குமார். இவரது மகள் சுருதி.

நகோதர் எனும் சிறு நகரத்தில் வசித்து வரும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு தேர்வானார்.

சிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதி முதல் முயற்சியிலேயே நீதிபதி தேர்வில் சித்தியடைந்துள்ளார்.

தனது மகளின் இலட்சியம் நிறைவேறியது குறித்து சுரிந்தர் குமார் கூறுகையில்,

இதையும் விட மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, ‘சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க…

பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்; 3 ஆயிரம் பேர் பட்டதாரிகள்..!!

2:33 AM |
இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம்.

இது மட்டுமல்ல,  இதில் 3 ஆயிரம் பேர் டிப்ளமோ அல்லது ஏதாவது டிகிரி, போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பட்டம் பெற்ற பிறகு, நல்ல வேலை கிடைக்காத காரணத்தினால் பல பட்டதாரிகள் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலை தேர்வு செய்தது குறித்து தினேஷ் என்பவர் கூறுகையில், '' 12-ம் வகுப்பு படித்து விட்டு, ஒரு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்தேன். தினமும் 100 ரூபாய்தான் சம்பளமாக கிடைத்தது. இதையடுத்தே பிச்சையெடுக்கத் தொடங்கினேன். தற்போது ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறேன் '' என்கிறார்.

பி. காம் தவறிய மற்றொரு பிச்சைக்காரரான சுதிர் பாபுலால்,  தற்போது அகமதாபாத்தில் பிச்சை எடுத்து வருகிறார். ஒருநாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் வேலை பாத்தாலும் மாதம் 3 ஆயிரம் ருபாய்தான் பாபுலாலுக்கு சம்பளமாக கிடைத்துள்ளது. இதனால் அவரது மனைவி கூட  பிரிந்து சென்று விட்டாராம். தற்போது ஆற்றாங்கரையில் தங்கிக் கொண்டு பிச்சை எடுக்கும் அவருக்கு,  தினமும் 150 ரூபாய் வருவாய் கிடைக்கிறது .

தசரத் பார்மர் என்ற எம். காம் பட்டதாரிக்கு அரசு வேலையில் சேர வேண்டுமென்பதே லட்சியம். ஆனால் கிடைத்த தனியார் பணியையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 3 குழந்தைகளுக்கு தந்தை வேறு. தற்போது குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறார். அறக்கட்டளை ஒன்றுதான் இவர்களுக்கு உணவளித்து காப்பாற்றி வருகிறது.

இந்தியாவில் பணியில் கிடைக்கும் குறைவான சம்பளமும், நிலையில்லாத வேலையும் படித்த பட்டதாரிகளை கூட பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com