How to Make an Electric Table Fan using Bottle - Easy Way

12:25 AM |
மேலும் வாசிக்க…

உங்கள் இன்டர்நெட்டின் வேகம் குறைவாக உள்ளதா?? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்!!

4:14 AM |
உலகில் பெரும்பாலான இடங்களில் பயன்ப்படுத்தும் ஒன்று தான் இன்டர்நெட். இதை பற்றி தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உபயோகப்படுத்துவார்கள்.

இன்டர்நெட் இருந்தால் போதும் குழந்தைகள் உணவு, தண்ணி கூட வேண்டாம் என்று அதில் ஆர்வம் ஆகிவிடுவார்கள். அந்த அளவிற்கு மனிதனின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆனால் இதில் இருக்கும் சிரமம் என்னவென்று பார்த்தால் அடிக்கடி இன்டர்நெட்டின் வேகம் குறைந்து விடும்.

அதற்கு இனி கவலை வேண்டாம். இந்த காணோளியில் எப்படி இன்டர்நெட்டின் வேகத்தை அதிகப்படுத்தலாம் என்பதை பாருங்கள். பிறகு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மேலும் வாசிக்க…

Facebook Profile படங்களுக்கு பதிலாக வீடியோ வைப்பது எப்படி..???

6:09 AM |
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டுதான் உள்ளது. பேஸ்புக்ல நாம் விரும்பிய படங்களை ப்ரோபைல் படமாக வைத்து அழகு பார்த்தோம். பின்னர் கவர் போட்டோ வந்தது. அதிலும் நமக்கு பிடித்தது போல விதவிதமாக கவர் படங்களை வைத்து மகிழ்ந்தோம். இப்போது வீடியோவை ப்ரோபைல் படமாக வைக்க முடியும். இந்த புதிய வீடியோ ப்ரோபைல் வசதியை பேஸ்புக்ல சென்ற ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அன்றே அறிவித்து இருந்தது. பேஸ்புக் நியூஸ்ரூம்லேயும் இதனை பற்றிய ஒரு வீடியோ இடம் பெற்றது. இப்ப கடந்த மார்ச் 22 2016 அன்று உலகம் முழுவதும் அனைவருக்கும் இந்த வசதியை பேஸ்புக் வழங்கி இருக்கிறது. எப்படி செட் செய்வது பார்க்கலாமா?

முதலில் உங்கள் மொபைல் கேமராவில் 7 செகண்ட் (வினாடிகள்) கொண்ட ஒரு வீடியோவை தயார் செய்யுங்கள். ஆம் அதிகம் சைஸ் உள்ள வீடியோவை லோட் செய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் பேஸ்புக் ஏழே வினாடிகள் மட்டுமே அனுமதி,

அடுத்து இங்கே கிளிக் செய்து Play Storeல உள்ள Facebook v69 டவுன்லோட் செய்யுங்கள் அல்லது இங்கே கிளிக் செய்து புதிய Facebook v71.0.0.0.20 பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.



அடுத்து Facebook App திறந்து உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்யுங்கள். வழக்கம் போல ப்ரோஃபைல் படம் மாற்றும்போது இப்போது மேலே படத்தில் உள்ளது போல நான்கு ஆப்சன் வரும். ஏற்கனவே வீடியோ எடுத்து வைத்து இருந்தால் இரண்டாவதாக உள்ள Upload video or Photo டச் செய்து தயாரித்து வைத்த வீடியோவை தேர்வு செய்யுங்கள் அல்லது முதலில்  உள்ள Take a New Profile Video டச் செய்து உங்களையோ அல்லது உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு வீடியோ எடுங்கள். உங்கள் வீடியோ ஏழே வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். முடிவாக Save செய்து உங்கள் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து பார்த்தால் வீடியோ ஓடுவதை பார்க்கலாம்.

கவனத்தில் கொள்க: உங்கள் மொபைலில் பழைய பதிப்பு இருந்தால் வேலை செய்யாது. மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து அப்டேட் செய்ய மறவாதீர்கள். இப்போதைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பேஸ்புக் ஆப்ஸ் மட்டுமே இந்த வசதி விரைவில் கணினியில் வீடியோ அப்லோட் செய்ய அனுமதிப்பார்கள்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.
மேலும் வாசிக்க…

IMO வின் ஆபத்து...! imo உபயோகிப்போர் கவனத்திற்கு...!!!

7:27 AM |
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்.

இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்.

உதாரணமாக நாம் சவாரிக்கு உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும் இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது.

குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே கால் சென்றுவிடும் இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக கால் செய்துவிட்டது என்று மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் கால் செய்ய முயற்ச்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது.

எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்.

சவாரிக்கு எடுக்கும் ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள்...

சைத்தான் எவர் மூலமாகவும் வழிகெடுப்பான் எனவே பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்.

இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர் invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்று விடும் இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்புத் தொகையிலிருந்தே
(BALANCE) பணம் வசூலிக்கப்படும் விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை.!!!

இதை அதிகம் பகிருங்கள் .!!
மேலும் வாசிக்க…

பேஸ்புக் தளத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான Buttons இனி பயன்படுத்தலாம்.!!

6:26 PM |
 பேஸ்புக் தளத்தில் உள்ள ஒரு பதிவை எமக்கு பிடித்திருந்தால் லைக் (Like) செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயமே.


என்றாலும் வருத்தத்துக்குரிய ஒரு தகவல் பகிரப்படும் போது அல்லது ஆச்சரியமான பதிவுகள் பகிரப்ப்படும்போது அல்லது வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் பகிரப்படும் போது அதனை "Like" செய்வதென்பது அவ்வளவு பொருத்தமான ஒரு செயற்பாடு அல்ல.


எனவே அதிகமானவர்களால் பேஸ்புக் தளத்தில் Dislike செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டது.

எனினும் Dislike என்பதற்கு பதிலாக மேற்குறிப்பிட்டது போன்ற எமது உணர்சிகளை வெளிப்படுத்தக்கூடிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த  வருடம் அறிவித்திருந்தது.


மேலும் இந்த வசதியை அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கி சோதித்து வந்தது.



தற்பொழுது உலகில் இருக்கும் அனைத்து பயனர்களாலும் இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் தளத்தில் தோன்றும் பதிவுகளில் உள்ள லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான மேலதிக பட்டன்கள் தோன்றும் இனி அதில் பொறுத்தமான பட்டனை தெரிவு செய்து உங்கள் உணர்வை வெளிப்படுத்தலாம்.

லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்களுக்கு இந்த வசதி தோன்றவில்லை எனின் கவலை வேண்டாம் அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ உங்களுக்கு இந்த வசதி கிடைத்து விடும்.

ThQ - Tamilinfotech.com
மேலும் வாசிக்க…

கூகுள் க்ரோம் மூலம் Facebook மற்றும் Gmail போன்ற கணக்குகளில் Password - HACK செய்வது எப்படி?

7:43 PM |
இணையத்தை உபயோகிக்கும் பலர் பெரும்பாலும் இணையத்தை அணுக உபயோகிக்கும் உலாவி கூகுள் க்ரோம். சிறப்பான வேகத்தையும் தரமான வசதிகயும் கூகுள் க்ரோம் தமது பயனர்களுக்கு வழங்குவதால் இந்த உலாவியை பலரும் தமது கணணி மற்றும் ஸ்மார்ட் போன்களில் நிறுவி உபயோகித்து வருகின்றனர்.

ஆகவே இன்றைய பதிவில் கூகுள் க்ரோம் உடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் கூகுள் க்ரோம் மூலம் பேஸ்புக் அல்லது ஜிமெயில் போன்ற தளங்களுக்கு லொகின் செய்ய எமது கடவுச்சொல்லை டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்தினால் உலாவியின் மேலே வலது மூலையில் கீழ் காட்டியுள்ளவாறு ஒரு வாசகம் தொன்றும்.






இது என்னவென்றால் நாம் லொகின் செய்யும் குறிப்பிட்ட தளத்தினுடைய எமது பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல்லை எமது உலாவியில் சேமித்து வைப்பதற்கான அனுமதியை கேட்கும் வாசகம் ஆகும்.

இவ்வாறு நாம் எமது பயனர் கணக்கு விபரங்களை எமது உலாவியில் சேமித்து வைத்தால் அடுத்த முறை குறிப்பிட்ட பேஸ்புக் தளத்தையோ அல்லது ஜிமெயில் தளத்தையோ எமது கணனியில் இருந்து லொகின் செய்யும் போது பயனர் கணக்கு கடவுச்சொல் போன்ற விபரங்களை டைப் செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக குறிப்பிட்ட தளத்தின் URL-ஐ மட்டும் டைப் செய்து லொகின் செய்து கொள்ள முடியும்.

இந்த வசதியை கூகுள் க்ரோம் பயனர்களின் நேரத்தை சேமிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த வசதியை எமக்கு தெரியாமல் மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி எமது பேஸ்புக் கணக்கின் அல்லது மற்றைய ஏதேனும் ஒரு ஆன்லைன் கணக்கின் கடவுச்சொற்களை தெரிந்து கொள்ள முடியும்.

எவ்வாறு என்றால் நாம் எமது நேரத்தை சேமிப்பதாக நினைத்து கூகுள் க்ரோம்-இல் சேமித்து வைக்கும் கடவுச்சொற்களை மற்றவர்களால் பார்க்க முடியும்.

இவ்வாறு சேமித்து வைத்து இருக்கும் கடவுச்சொற்களை கீழே வழங்கப்பட்டுள்ள 'க்ரோம் பாஸ் வேர்ட் வீவர்' மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
உங்களது கூகுள் க்ரோம் உலாவியை திறவுங்கள்.

அதிலே Settings பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே show advanced settings என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அதிலே Password and forms என்று இருப்பதில் Manage password என்பதை கிளிக் செய்யுங்கள்.



அடுத்து கீழ் காட்டியுள்ளவாறு ஒரு திரை தோன்றும்.

இங்கே தான் உங்களுடைய சேமித்து வைக்கப்பட்ட அனைத்து கடவுச்சொற்களும் காணப்படும். இதிலே காட்டப்படிருக்கும் ஏதேனும் ஒரு தளத்தினுடைய பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட்ட அந்த தளத்தை கிளிக் செய்து Show என்று இருப்பதை கிளிக் செய்தால் போதும்.



இப்போது உங்களது பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல் போன்றவைகள் துல்லியமாக காட்டப்படும். 

ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது ஆன்லைன் கணக்குகளை யாரேனும் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களது கூகுள் க்ரோம் உலாவியில் கடவுச்சொல்லை சேமித்து வைப்பதில் இருந்து தவிர்த்து கொள்ளுங்கள்.

ThQ - Techinthamil.info
மேலும் வாசிக்க…

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கை பயிரிட நாசா முடிவு செய்துள்ளது..!!

2:13 AM |
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.இதேவேளை செவ்வாய்க்கு மனிதனை அனுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செவ்வாயில் உருளைக்கிழங்கை பயிரிட நாசா முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் உதவியுடன் ஆய்வு செய்து வருகிறது.

அங்குள்ள சூழ்நிலை மற்றும் தட்பவெப்பம் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பயிரிட தயாராகிக் கொண்டிருக்கிறது.மேலும் 4500 ரகங்களில் செவ்வாய் கிரகத்தில் பயிரிடுவதற்காக 100 விதமான உருளைக்கிழங்கு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை பயிரிடுவதற்காக லிமாவில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஆன்டெஸ் மலைப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் விஞ்ஞானத்தின் மாபெரும் சாதனையாக ஜின்சியா என்ற மலர்கள் பூத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு.!!

4:25 AM |
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.

ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1:  மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices With Removable Storage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2:  பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.
மேலும் வாசிக்க…

ஸ்கைப்பில் எந்த மொழியில் பேசினாலும் தமிழ் மொழியில் கேட்கலாம்..!!

11:20 PM |
ஸ்கைப் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனலாம். உலகம் எங்கும் இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோ கால் செய்ய இது உதவும். சாஃப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது டெமோ வெர்ஷன் வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆங்கிலத்தில் பேசி எதிர்முனையில் ஜெர்மன் மொழியில் கேட்டு டெமோ வெர்ஷனை துவக்கி வைத்தனர். இனி பேச மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது.

அதாவது ஸ்கைப்பில் நீங்கள் ஒருவருடன் தமிழில் உரையாடினால் அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்றால் Language Mode ல் English என்று அவர் மாற்றினால் போதும். அவருக்கு நீங்கள் பேசும் மொழி ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த ஆண்டுக்குள் இதற்கான அப்டேட் அனைத்து ஸ்கைப் அக்கவுன்ட் யூஸர்ஸூக்கும் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசி கமெராவில் புதிய புரட்சி..!!

2:43 AM |
அப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக இக் கைப்பேசியின் கமெரா இரண்டு வில்லைகளை (Dual Lens) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்காக சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானின் Largan Technology நிறுவனம் என்பவற்றிலிருந்து இரட்டை வில்லை கமெராக்களைப் பெற்று அப்பிள் நிறுவனம் பரிசோதித்து வருகின்றது.

இதேவேளை தற்போது iPhone, iPad என்பவற்றில் பயன்படுத்தப்படும் கமெராக்களில் 60 சதவீதமானவை தாய்வானைச் சேர்ந்த Largan Technology நிறுவத்தினால் வடிவமைக்கப்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இக்கைப்பேசியில் வேகம் கூடிய Apple A10 வகை Processor உம் இணைக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

Shooting an Indian Wedding on the iPhone 6s Plus

1:21 AM |
மேலும் வாசிக்க…

அப்பிள் ஐபோன்களில் விரைவில் LiFi தொழில்நுட்பம் அறிமுகம்..!!

1:42 AM |
அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஐபோன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் ஆகச் சிறந்த தொழில்நுட்பமும், வருங்காலத்தை கணித்து புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அவை இருப்பதுதான்.

இதன் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்புத் தொழில்நுட்பமான லை-பை (LiFi) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொழில்நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் operating system களில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக வினாடிக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

கணணியில் இருக்கும் Hard Disk-ஐ RAM ஆக மாற்றி கணணியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி???

11:59 PM |
கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்று கூறப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memory என்பதாகும். RAM தான் நம்முடைய கணிணியின் வேகத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.

பொதுவாக இதன் அளவு 512 MB முதல் 8 GB-இக்கும் அதிகமான அளவில் கிடைக்கிறது. இப்போது இன்னும் அளவில் அதிகரிக்கப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான திறன் கொண்ட Ram வகைகளும் சந்தைக்கு வந்து விட்டது.

இப்படி இருக்கும் RAM-ன் பயன்பாட்டைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம். நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disk சென்று ஏதாவது ஒரு தகவலை தேடும் போது, கணணியானது குறிப்பிட்ட அந்த தகவலை வழங்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த தாமதத்தை தவிர்க்கவும், விரைவாக கணினியில் இருந்து தகவலைப் பெறவுமே கணனிகள் RAM-ஐ கொண்டுள்ளது.
RAM ஆனது Hard disk-லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை ஏற்கனவே தன்னுள் சேமித்துவைத்துக்கொண்டு நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது.


இதனால் தான் நாம் எமது கணனியில் பெரிய அளவிலான RAM-ஐ இணைத்து உள்ளோம். ஆகவே நமது கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் கணனியில் இருந்து உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கிறது. இதையும் மீறி கணினியின் வேகம் குறைவடைய பல வாய்ப்புக்கள் உள்ளது.

Hard Disk-கின் ஒரு குறிப்பிட்ட அளவு மெமரியை எப்படி RAM ஆக உபயோகித்து கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்வது என்று பார்ப்போம்.

உங்களது கணணியில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை சென்றடையுங்கள்.
My computer-ஐ Right click செய்து properties > Advanced System Settings > Advanced > Settings


அடுத்து தோன்றும் முகப்பில் Advanced-ஐ கிளிக் செய்யுங்கள்.
அங்கே Virtual Memory-இல் Change என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து கீழே காட்டப்பட்டிருப்பது போல் Automatically manage... எனும் டிக்கை எடுத்து விடுங்கள். அடுத்து உங்களது கணனியின் C டிரைவ்-ஐ தெரிவு செய்யுங்கள்.

கீழே நான் குறிப்பிட்டு காட்டியிருப்பது போல் C டிரைவ்-இலிருந்து 6141 MB அளவு வரை RAM ஆக உபயோகிக்கலாம்.


அடுத்ததாக கீழே காட்டப்பட்டிருப்பது போல் Custom Size என்பதை தெரிவு செய்யுங்கள்.

அங்கே Recommended என்பதில் காட்டப்பட்ட மெமரி அளவை நான் கீழே காட்டியிருப்பது போல் டைப் செய்யுங்கள். Initial Size, Maximum Size என்று இருக்கும் இரண்டிலும் மெமரி-யின் அளவை டைப் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்து Set என்பதை செய்யுங்கள்.
இறுதியாக OK என்பதை கிளிக் செய்யுங்கள்

குறிப்பு

Recommended என்பதில் காட்டப்பட்டிருக்கும் மெமரி-யின் அளவை விட அதிகமாக வைத்து Virtual Memory உருவாக்க வேண்டாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. இப்போது உங்கள் கணணியை ஒரு முறை Restart செய்து விட்டு மறுபடியும்  உபயோகிக்க தொடங்குங்கள். நிச்சியமாக உங்களது கணனியின் வேகத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.



மேலும் வாசிக்க…

சிக்கியது வீடியோ ஆதாரம் இணையத்தில் கசிந்த 'ஆப்பிள்' ரகசியம்..!!

1:51 AM |
சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவி சார்ந்த வீடியோ ஆதாரம் ஒன்று ரகசியமாக கசிந்ததோடு இணையத்தில் வேகமாக பரவியும் வருகின்றது. அதன் படி ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வந்த புதிய கருவி குறித்து ரகசியமாய் கசிந்த சில தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.

இணையத்தில் கசிந்திருக்கும் வீடியோவானாது இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 4 இன்ச் திரை கொண்டிருக்கும் என்றும் எல்டிஈ, ஆப்பிள் பே, ஏ8 பிராசஸர், 1.2 ஜிபிக்கு நிகரான ரேம் மற்றும் 1624 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம் என்பதை குறிக்கின்றது.

மேலும் இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் ஒரே நிறம் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இதன் விலையை பொருத்த வரை இந்தியாவில் ரூ.37,139.82 வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலும் வாசிக்க…

ஃபேஸ்புக் மெசன்ஜர் : யாரும் அறிந்திராத ரகசிய அம்சங்கள்..!!

12:06 AM |
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை மாதத்திற்கு 800 மில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அனைத்து வித மொபைல் தேவைகளுக்கும் மெசன்ஜர் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜரில் நீங்கள் அறிந்திராத சில பயன்பாடுகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். ஃபேஸ்புக் மெசன்ஜர் பயன்படுத்துபவர்கள் ஸ்லைடர்களில் வழங்கப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.


ஸ்டான்டு அலோன் வெப்சைட்
ஃபேஸ்புக்கில் நியூஸ் ஃபீடிஇன் தலையிடுதல் இல்லாமல் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாட முடியும். செயலியை போல் இது மிகவும் சுத்தமாகவும் எளிமையாகவும் இருக்கும். ஆனால் இது இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றது.


மெசன்ஜரை பயன்படுத்த ஃபேஸ்புக் தேவையில்லை
உங்களிடம் ஃபேஸ்புக் கணக்கு இல்லையென்றால் நீங்கள் "Not on Facebook" என்பதை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இந்த செயலியையும் அதன் அம்சத்தையும் எடுத்து கொள்ள மெசன்ஜர் செயலியை பயன்படுத்துங்கள்.


யுபெரை கோரவும்
மெசன்ஜர் மூலமாக நீங்கள் யுபெர் காரை புக் செய்ய முடியும். உரையாடளுக்கு உள்ளே மோர் ஐகானை தேர்வு செய்து டிரான்ஸ்போர்டேஷனை டேப் செய்யவும். நீங்கள் அங்கிருந்து லாக் இன் செய்து யுபெரை கோர வேண்டும்.


க்ரூப் கான்வெர்சேஷனை பின் செய்யவும்
நீங்கள் ஒரே குழுவுடன் சாட் செய்தால், உரையாடலை பின் செய்ய முடிந்தால் தேடுவதற்கு நீங்கள் ஸ்க்ரோல் செய்ய தேவையில்லை. செயலியின் கீழ் உள்ள க்ரூப் பொத்தான் மீது க்ளிக் செய்தால் மேலே ஓரத்தில் இடது பக்கத்தில் பின் பொத்தானை காண்பீர்கள்.


உரையாடலை ம்யூட் செய்யவும்
ஒரு குறிப்பிட்ட உரையாடலை மெசேஜின் மேல் உள்ள பெயரை க்ளிக் செய்து ம்யூட் செய்யவும். நீங்கள் ம்யூட் செய்ய வேண்டிய நேரம், காலம் மற்றும் நோட்டிபிகேஷனையும் தேர்வு செய்யவும்.



கட்டணம் செலுத்தலாம்
உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் pay செய்வதற்கென்று சில செயலிகள் உள்ளன. ஆனால் உங்கள் போனில் போதிய இடம் இல்லையென்றால் கவலை வேண்டாம் மெசன்ஜர் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இதன் மூலம் பணம் இல்லாமலேயே கட்டணம் செலுத்த  முடியும்.


ஃபேஷியல் ரிகஃக்னீஷன் பயன்படுத்தி போட்டோக்களை பகிரலாம்
உங்கள் நண்பர்களுக்கு சுலபமாக போட்டோக்களை அனுப்ப மெசன்ஜர் செயலி உதவுகின்றது. இந்த போட்டோ மேஜிக் அம்சமானது ஃபேஷியல் ரிகஃக்னீஷன் ( facial recognition ) பயன்படுத்துகின்றது. இந்த செயலி போட்டோவை ஷேர் செய்ய உதவுகின்றது. உங்கள் கேமரா ரோலில் உங்கள் நண்பருடன் புதிய படம் வந்தால் இது உங்களுக்கு நோட்டிஃபை செய்கின்றது.


உங்கள் இடத்தை பகிரலாம்
மற்ற குறுந்தகவல் செயலியை போன்று இதிலும் உங்கள் லொகேஷனை பகிர முடியும். இதில் வரும் அம்சமானது உங்கள் லொகேஷனை தெரியப்படுத்தவும், அல்லது ஒரு இடத்தை தேடவும் பயன்படுகின்றது.



GIFs அனுப்பவும்
உங்கள் செயலியில் உரையாடலின் கீழ் பல முறை டேப் செய்யவும். அதில் பலவித செயலிகள் உங்களுக்கு கிடைக்கும். அவற்றை GIPHY நிறுவி கொள்ள முடியும். நிறுவியவுடன் உரையாடலின் கீழ் உள்ள GIF ஐகானை தேர்ந்தெடுத்து GIFஐ தேடி மெசன்ஜருக்கு நேராக அனுப்பலாம்.


உங்கள் சாட் ஸ்கிரீனை கஸ்டமைஸ் செய்யவும்
மெசேஜ் த்ரெட்ஸ் ( Message threads ) இருப்பதை போன்று நீங்கள் கஸ்டமைஸ் ( customize ) செய்யலாம். நீங்கள் உரையாடலில் இருக்கும் போது திரையின் மேல் உங்கள் நண்பர்களின் பெயரின் மேல் nicknames, color மற்றும் emojiக்கு என்று ஆப்ஷன்களை காண முடியும்.


மேலும் வாசிக்க…

LCD TV செய்யும் தொழில்நுட்பத்தைப் பாருங்கள்..!!

12:55 AM |
மேலும் வாசிக்க…

உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது..!!

7:34 PM |
பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள்.

தற்போது வரை வாட்ஸ் ஆப்-க்கு ஓராண்டுக்கு பிறகு பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1 டாலர் சந்தா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் ஆப்பின் அனைத்து பதிப்புகளுக்கு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் ஆப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

வாட்டர் ப்ரூஃப் போனை விடுங்க, ஜேக் தண்ணீர் மூலம் போனை சார்ஜ் செய்யும்..!!

2:54 AM |
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மைஎஃப்சி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் மிகவும் அட்டகாசமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இன்று அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் இந்த கருவியானது உப்பு நீர் மற்றும் காற்றை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்டிருக்கின்றது. இது எப்படி அனைவருக்கும் பயன் தரும் என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.

சிஇஎஸ் 2016
சந்தையின் மிக முக்கிய கண்காட்சியான சிஇஎஸ் ( நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சி )  மொபைல் போன் பயனர்களுக்காக ஜேக் எனும் பிரத்யேக சார்ஜர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


சார்ஜர்
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மைஎஃப்சி நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய வகை சார்ஜர் தண்ணீரை கொண்டு மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.







பவர் கார்டு
இந்த சார்ஜரில் க்ரெடிட் கார்டு அளவில் பவர் கார்டு மற்றும் சிறிய போர்ட் வழங்கப்பட்டுள்ளதால் இதன் அளவு ஸ்மார்ட்போன் போன்றே இருக்கின்றது.




மின்சாரம்
பவர் கார்டில் இருக்கும் உப்புநீர் காற்றுடன் இணைந்து ரசாயன மாறுதல்களுக்கு பின் மின்சாரத்தை தயாரிக்கும். இந்த மின்சாரத்தை போனிற்கு பயன்படுத்த சீரான கேபிள் மூலம் சார்ஜரில் இணைத்தாலே போதுமானது.



விற்பனை
தற்சமயம் வரை இந்த கருவி விற்பனைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

iOS 9.3 இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை வெளியிட்டது அப்பிள்..!!

11:55 PM |
அப்பிள் நிறுவனமானது iOS 9.3 இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை பரிசோதனைக்காக வெளியிட்டுள்ளது.

எனினும் இதனைப் பயன்படுத்துவதற்கு அப்பிளின் பப்ளிக் பீட்டா டெஸ்ட்டிங் புரோகிராமில்(Apple’s Public Beta testing program ) இணைவது அவசியமாகும், அல்லது பதிவு செய்யப்பட்ட மேம்பாட்டாளராக (Developer) ஆக இருத்தல் வேண்டும்.

இப்புதிய பதிப்பில் Night Shift Mode எனும் புதிய வசதி, WiFI Assist இற்கான புதிய வசதி என்பன உட்பட மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இதன் அசல் பதிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

உங்கள் Android மற்றும் iPhone-ல் Delete செய்யப்பட்ட file-களை எப்படி பாதுகாப்பாக Recover செய்வது

10:37 PM |
உங்கள் Android போனில் இருக்கும் Photos, Videos, Audio அல்லது ஏதேனும் ஒரு File தவறுதலாக அளிக்கபட்டுவிட்டதா? இன்றைய பதிவில் Android போனில் இருந்து அழிக்கப்பட்ட கோப்புக்களை எப்படி மீண்டும் மீட்டு கொள்வது என்று பார்ப்போம்.

நமது அன்றாட வாழ்வில் முக்கியமான ஒரு பங்கை வகிக்கும் இந்த ஸ்மார்ட் போன்களிலேயே நாம், பல்வேறு தரவுகளை சேமித்து வைத்து இருக்கிறோம். இதில் அன்றாடம் நீங்கள் எடுத்து கொள்ளும் Selfie முதல் வங்கி கணக்கு Password வரை உள்ளடங்கும்.

இவ்வாறு தினம்தோறும் உங்களோடு பயணிக்கும் இந்த ஸ்மார்ட் போனிலிருந்து ஏதாவது முக்கியமான தகவல் ஒன்று தவறுதலாக அழிந்து விட்டால் அதை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டெடுப்பது என்று கூறுகிறேன்.

முதலாவதாக உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து ஏதேனும் ஒரு File தவறுதலாக அழிந்து விட்டால், உடனடியாக உங்கள் போனை பாவிப்பதை நிறுத்துங்கள். அதாவது, உங்கள் போனில் புதிய ஆடியோ வீடியோ அல்லது வேறு ஏதேனும் File-களை புதிதாக சேமிப்பதை நிறுத்துங்கள்.

ஏனெனில், உங்கள் போனில் இருந்து ஏதேனும் ஒரு File அழிந்து விட்டால், அது முழுமையாக இல்லாமலாகி விட்டது என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட File, உங்கள் மெமரி கார்டு அல்லது போன் மெமரியில், அதே இடத்தில் மறைந்து காணப்படும்.

இதுவே Delete செய்யப்படும் File-களுக்கான நியதி. ஒரு File Delete செய்யப்பட்டவுடன், அது உடனடியாக, அழிக்கப்பட்டு விடாமல், குறிப்பிட்ட அதே இடத்தில் மறைந்து காணப்படுமாறே Program செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மறைந்து காணப்படும் File-களையே Data Recovery மென்பொருட்கள் இலகுவாக மீட்டெடுத்து தருகின்றது.

ஆனால் ஒரு File Delete செய்யப்பட்டவுடன் நீங்கள் இன்னொரு புதிய File-ஐ உங்கள் போனில் Save செய்யும் போது, புதிய File ஆனது, ஏற்கனவே Delete ஆகி இன்னும் உங்கள் போனில் மறைந்து காணப்படும் அந்த பழைய File-ஐ Replace செய்தே உங்கள் போனில் சேமிக்கப்படும்.

இவ்வாறு Delete செய்யப்பட்ட File Replace செய்யப்படும் போது, Data Recovery மென்பொருட்களுக்கு Delete செய்யப்பட்ட File-களை மீட்டெடுப்பது கடினமான காரியம் ஆகிறது. இதனாலேயே நான் உங்களை, ஒரு Delete செய்யப்பட்ட File-ஐ மீட்டெடுக்கவேண்டுமாயின், உடனடியாக உங்கள் போனில் புதிய File-களை சேமித்து கொள்வதை தவிர்க்க கூறினேன்.
இந்த விதியை பின்பற்றிய பின்னர், ஏதேனும் சிறந்த Data Recovery மென்பொருளை பயன்படுத்தி மிக இழகுவாக Delete செய்யப்பட்ட File-ஐ மீட்டெடுத்து கொள்ள முடியும்.

Delete செய்யப்பட்ட File-களை மறுபடியும் மீட்டெடுத்து கொள்ள சிறந்த மென்பொருளாக, கீழே குறிப்பிட்டுள்ள மென்பொருட்கள் காணப்படுகிறது.
Recuva Data Recovery Tool

Fonepaw Android Data Recovery

7 Data Android Recovery

இவற்றில் ஏதேனும் ஒரு Data Recovery மென்பொருளை Download செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஸ்மார்ட் போனை கணனியுடன் USB Cable மூலம் தொடர்புபடுத்தி, Install செய்த Data Recovery மென்பொருள் மூலம் Scan செய்யுங்கள்.

ஒரு சில நிமிடங்களில் Scan முடிவடைந்து, Data Recovery மென்பொருளால் மீட்டெடுக்க முடியுமான File-களை உங்களுக்கு பட்டியலிட்டு காட்டும். Scan முடிவடையும் நேரமானது நீங்கள் Scan செய்யும் Device-இன் அளவை பொறுத்தே உள்ளது.

Delete செய்யப்பட்ட File-களை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் Recuva Data Recovery மென்பொருளானது மிகப்பிரபல்யமான ஒன்றாகும். இதனால், உங்கள் Delete செய்யப்பட்ட File-களை மீட்டெடுத்துகொள்ள முதலாவதாக Recuva மென்பொருளை முயற்சித்து பாருங்கள்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com