Bairavaa HD Official Trailer Vijay ,Keerthy Suresh ,Sathosh Narayanan

1:15 AM |
மேலும் வாசிக்க…

ராதிகா ஆப்தே, ‘ரஜினிகாந்தைப் போல் யாருமே இல்லை’ என புகழாரம் சூட்டியுள்ளார்..!!

3:54 AM |
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி வரும் படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கி ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் இப்படத்தின் டப்பிங்கில் கலந்துகொண்ட ரஜினி, தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார். அதன்பிறகு, மற்ற நடிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். டப்பிங் பணிகளோடு, டீசர் தயார் செய்யும் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


உழைப்பாளர்கள் தினமான மே 1-ந் தேதி கபாலி படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, ‘ரஜினிகாந்தைப் போல் யாருமே இல்லை என புகழாரம் சூட்டியுள்ளார்.

ராதிகா ஆப்தே நடிப்பில் தயாராகியுள்ள ‘போபியா’ இந்திப் படத்தின் டிரைலர் நேற்று மாலை மும்பையில் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவரிடம் ‘கபாலி’ படத்தில் நடித்தது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு செய்தியாளர்கள் கேட்டனர்.


அதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, ‘ரஜினி சாருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய உயர்ந்த தருணமாக இருந்தது. குறிப்பாக மலேசியாவில் நடந்த படப்பிடிப்பு மிகவும் நன்றாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் நடித்தது எனது வாழ்வின் மிகவும் சிறந்த அனுபமாகும்.

ரஜனியின் கபாலி பட நடிகையின் எல்லையற்ற கவர்ச்சி! அதிர்ச்சி வீடியோ 

ரஜினி சார் மிகவும் அற்புதமான மனிதர், அவரைப்போல் யாருமே இல்லை’ என தெரிவித்தார். இந்தப் படத்தில் ரஜினியுடன் நீங்களும் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 'இருக்கலாம்... பார்க்கத்தானே போகிறீர்கள்?’ என்று ராதிகா ஆப்தே கூறினார்.
மேலும் வாசிக்க…

தெறி' விஜய்யின் 4வது கெட்டப் என்ன தெரியுமா?வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..!!

1:56 AM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளிநாட்டிலும் நாளை இந்தியாவிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் கெட்டப் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் போலீஸ் உள்பட மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதை டிரைலரில் பார்த்தோம். ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி 'தெறி'யில் விஜய்க்கு நான்கு கெட்டப்புகள் என்றும் நான்காவது கெட்டப் இதுவரை விஜய் ஏற்காக வித்தியாசமான கெட்டப் என்றும், இந்த கெட்டப் விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், அட்லி உள்பட படக்குழுவினர் அனைவருமே தங்களுடைய 100% உழைப்பை இந்த படத்திற்காக கொடுத்துள்ளதால் அந்த உழைப்புக்குரிய பலனை நாளை முதல் அவர்கள் அறுவடை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

24 Official Trailer - Tamil | Suriya | Samantha | AR Rahman | 2D Entertainment | Vikram K Kumar

7:53 AM |
மேலும் வாசிக்க…

Pencil Official Trailer | G. V. Prakash Kumar, Sri Divya

11:10 PM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் 2 நிமிடம் டிரைலர் இதோ..!!

3:13 AM |
விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தை பற்றி நாளும் ஒரு புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளன. நேற்று, வருகிற 20-ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றிய அப்டேட்டை பார்த்தோம்.

இன்று இப்படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை, ஆடியோ வெளியாகும் மார்ச். 20-ந் தேதியே வெளியிடவுள்ளனர். ‘தெறி’ படத்தின் டிரைலர் 2 நிமிடம் ஓடக்கூடியதாக இருக்குமாம். டீசரைவிட டிரைலரில் கூடுதல் சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட, இந்த டிரைலருக்கு கூடுதல் வரவேற்பு இருக்கும் என படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறி டிரைலர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்..!!

10:59 PM |
அட்லீ இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இசை வெளியாகும் அதே நாளில் இப்படத்தின் டிரைலரும் வெளிவரும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் டிரைலர், இசை வெளியாகி ஒரு வாரம் கழித்து தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவரது இசையில் உருவாகியிருக்கும் 50-வது படமாகும். மேலும் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…

வேதாளம் ரிலீஸ் தேதி - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

2:42 AM |
சிவா-அஜித் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியிருக்கும் வேதாளம் படம் நவம்பர்10ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இப்படத்தின் டிரைலரை நாளை இரவு12மணியளவில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த டிரைலர் 2.32 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இப்போதே இப்படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டது. சேலத்தில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே அத்தனை டிக்கெட்டும் முடிந்து விட்டதாம். தற்போது இப்படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com