சிம்பு, நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் இதுநம்ம ஆளு. இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தை தயாரிக்க டேக் எண்டர்டைன்மென்ட் நிறுவனத்திடம் ரூ.2.50 கோடியை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் டி.ராஜேந்தர் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை, படம் வெளியாவதற்கு முன்பு வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த பணத்தை திருப்பித் தராததால், இது நம்ம ஆளு படத்தை வெளியிட தடை கேட்டு ஐகோர்ட்டில் டேக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, கடன் தொகையை கொடுத்து விடுவதாக டி.ராஜேந்தர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜராகி, கடன் வாங்கிய அசல் தொகையை மட்டும் கொடுத்து விட்டு படத்தை வெளியிட எதிர்மனுதாரர் கோரிக்கை வைக்கிறார்.இதை ஏற்க முடியாது. எனவே, கடன் தொகை, வட்டியுடன் சேர்த்து ரூ.3.31 கோடியை கொடுக்கவும், அதன்பின்னரே படத்தை வெளியிட வேண்டும் என்றும் டி.ராஜேந்தருக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
இதற்கு டி.ராஜேந்தர் தரப்பின் கருத்தை தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 4ந்தேதிக்கு தள்ளி வைத்தார்
Tags:
Cinema
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சினிமா
,
டி.ராஜேந்தர்
,
நயன்தாரா