நடிகர் தனுஷின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. அவரது பர்சனல் வாழ்கையும் சரி திரையுலக வாழ்கையும் சரி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக போய்க்கொண்டிருக்கிறது. அவரது அண்ணன், மனைவி, மாமனார் என எல்லோருமே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள்.
அப்படி இருக்கும்போது கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கள் மகன் தனுஷ் 16 வயதில் வீட்டைவிட்டு ஓடியதாகவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் குழந்தை முதலே தனுஷ், கஸ்தூரி ராஜாவுடன் இருந்ததற்கான ஆதாரமாக அவர்களின் பழைய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Tags:
Cinema
,
ஆதாரம்
,
கஸ்தூரி ராஜா
,
சினிமா
,
தனுஷ்
,
மகன்