தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஆபாசமாக மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆபாச மிரட்டல்களின் பின்னணியில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்த நடிகரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க நயன்தாரா தரப்பு முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது.
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்க பிரபல தெலுங்க நடிகர் ஒருவர் மேடைக்கு அழைக்கப்பட்டார்.
ஆனால், நயன்தாரா திடீரென்று மைக்கை வாங்கி இந்த விருதை இயக்குனரும், தன்னுடைய காதலருமான விக்னேஷ் சிவன் கையால் வாங்க விரும்புவதாக கூறினார். இது அந்த தெலுங்கு நடிகருக்கு அவமானமாய் போய்விட்டதாக கருதி அவர் தான் இந்த ஆபாச மிரட்டலின் பின்னணியில் இருக்கிறார் என சந்தேகிக்கின்றனர்.
Tags:
Cinema
,
சிறந்த நடிகை
,
சினிமா
,
தெலுங்கு நடிகர்
,
நயன்தாரா
,
விக்னேஷ் சிவன்
,
விருது