நடிகை கவுதமியை அடுத்து நடிகை சீதா தனது லிவ் இன் பார்ட்னரான நடிகர் சதீஷை பிரிய முடிவு செய்துள்ளாராம்.
நடிகை கவுதமி உலக நாயகன் கமல் ஹாஸனை திருமணம் செய்யாமலேயே அவருடன் லிவ் இன் முறைப்படி கடந்த 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கமலை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டார்.கவுதமியை அடுத்து நடிகை சீதாவும் தனது லிவ் இன் பார்ட்னரை பிரிய முடிவு செய்துள்ளாராம். 1980களில் முன்னணி நடிகையாக இருந்த சீதா நடிகர் பார்த்திபனை திருமணம் செய்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக சீதா பார்த்திபனை விட்டு பிரிந்தார். விவாகரத்திற்கு பிறகு சீதா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சதீஷை திருமணம் செய்யாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்.
சதீஷ் சீதாவிடம் பண மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சதீஷை பிரிய முடிவு செய்துள்ளாராம் சீதா.
Tags:
Cinema
,
கண்ணழகி
,
கவுதமி
,
சதீஷ்
,
சினிமா
,
சீதா
,
பார்த்திபன்
,
லீவ் இன் பார்ட்னர்