ஸ்ரேயாவுடன் டேட்டிங் சென்ற போது மாட்டிக்கொண்ட நடிகர்..!!

11:03 PM |
நடிகை ஸ்ரேயா என்று சொன்னால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தியிலும் பலருக்கு தெரியும். ஒரு காலத்தில் கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுசுடன் நடித்தவர் பிறகு பல நாளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் மற்ற மொழிகளில் நடித்திருந்தார்.

தற்போது சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருக்கும் இவர் பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் போனாராம்.

ராணாவுக்கு த்ரிஷாவுக்கும் ஏற்கனவே காதல் என நிறைய செய்திகள் அடிபட்டது. தற்போது அப்படி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஸ்ரேயா அவரோடு வெளியே செல்லும் போது பப்ளிக்காக ரசிகர்களுடைய கேமரா, பத்திரிக்கையாளர்களுடைய போட்டோவில் சிக்கிகொண்டாராம்.

அப்போது ஸ்ரேயா மட்டும் சிரித்து கொண்டே போஸ் கொடுக்க, ராணா முறைத்துக்கொண்டே போஸ் கொடுத்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் வாசிக்க…

சிம்புவுடன் தீடீர் நெருக்கம் காட்டி விஷாலை சீண்டிய வரலட்சுமி..!!

10:46 PM |
நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த காதலுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றி விழாவை, அப்படத்தின் நாயகன் சிம்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினர். இதில் த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன், ஏ.ஆர்.ரகுமான், படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, திரிஷா, சிம்பு, வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தனர். முக்கியமாக, சிம்புவும் வரலட்சுமியும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிம்புவும், வரலட்சுமியும் ‘போடா போடி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

சிம்புவிற்கும், விஷாலுக்கு ஆகவே ஆகாது. விஷாலிடம் இருந்து வரலட்சுமி விலகிய நிலையில், சிம்புவிடம் அவர் நெருக்கம் காட்டி வருவது, விஷால்  தரப்பிற்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அச்சம் என்பது மடமையடா - திரைவிமர்சனம்

12:12 AM |
சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே ஒருவித மேஜிக் கிரியேட் ஆகும். அப்படி ஒரு மேஜிக் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு மீண்டும் சிம்பு-கௌதம்-ரகுமான் என கூட்டணி அமைத்த படம் தான் அச்சம் என்பது மடமையடா.

ஆனால், இந்த படம் வருவதற்கு பல தடைகளை கடந்துவிட்டது, கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன் தொடங்கிய படம். இத்தனை வருடம் கழித்து வரும் இந்த அச்சம் என்பது மடமையடா மேஜிக்கை கிரியேட் செய்ததா? பார்ப்போம்.

என்னா மேட்டரு..?

சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் போல்.

சிம்பு தங்கையின் தோழியாக மஞ்சிமா, சிம்புவின் வீட்டிலேயே தங்கி படிக்கிறார், பிறகு சொல்லவா வேண்டும்? காதல், அரட்டை என ஜாலியாக செல்கிறது.

பிறகு சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார். ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோத, சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.

படம் எப்படி இருக்குது..?

சிம்பு இஸ் ரியல் கம்பேக் என்று சொல்ல வேண்டும், ஆரம்பத்தில் விடிவி கார்த்திக் போல் கையை ஆட்டுவது, தலையை ஆட்டுவது என இருந்தாலும், பொறுப்பு என்று வந்தவுடன் அவரிடம் வரும் முதிர்ச்சி நடிப்பிலும் நன்றாக தெரிகிறது. இதே மாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிங்க சிம்பு என்று சொல்ல தோன்றுகின்றது.

மஞ்சிமா தமிழுக்கு புதுவரவு, அவரை வைத்து தான் கதையே நகர்கிறது, அதை அவரும் உணர்ந்து நடித்துள்ளார். இதை தவிர நம்மை மிகவும் கவருவது சதீஷ், மொட்டை போலிஸ் ஒருவர்.

கௌதம் படம் என்றாலே காதல், பிறகு ஆக்‌ஷன் என்பது தெரியும். ஆனால், நமக்கு ஆக்‌ஷன் என்ற ஐடியாவே இல்லாத போது நம்மை நோக்கி ஒரு குண்டு வந்தால் என்ன செய்வோம்? என்பதை இரண்டாம் பாதியில் பதட்ட பட வைத்துள்ளார். கொஞ்சம் அவருடைய கமர்ஷியல் எல்லையை மீறியுள்ளார். குறிப்பாக சிம்புவின் பெயரை கிளைமேக்ஸில் சொல்லும் காட்சி தியேட்டரே அதிர்கிறது.

சட்டை காலருக்கும், முடிக்கும் இடையில என்னமோ பண்ணுதுன்ற காதல் வசனமாக இருந்தாலும் சரி, லைஃபில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமான்னு தான் கேள்வி என்ற உணர்ச்சிப்பூர்வமான வசனமும் சரி கௌதம் சூப்பர்.

படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரகுமான். பாடல்களிலும் சரி, பின்னணியிலும் சரி செம்ம ஸ்கோர் செய்துவிட்டார். ஒளிப்பதிவு நாமே ஒரு ட்ரிப் சென்ற அனுபவம்.

விசில்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்கின்றது.

சிம்பு-மஞ்சிமா காதல் காட்சிகள்.

கௌதம் படத்தில் இதுவரை இல்லாத கமர்ஷியல் அம்சம், குறிப்பாக கிளைமேக்ஸ்

முதல் பாதியிலேயே அனைத்து பாடல்களும் வருவது ஒரு தரப்பு ஆடியன்ஸிற்கு சலிப்பை ஏற்படுத்தலாம், மேலும், சிம்பு கால்ஷிட் பிரச்சனையா தெரியவில்லை, பர்ஸ்ட் ஆபில் உடல்வாகு மாறி மாறி வருகின்றது.

சில லாஜிக் மீறல்கள், வழியில் பார்த்தவுடன் சாவி இருக்கா, இல்லையா என்று தெரியவில்லை பைக், கால் டாக்ஸி என சிம்பு எடுத்து ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்.

மொத்தத்தில்  கௌதம் மேனன் ரசிகர்களையும் தாண்டி, மேலும் சிலரையும் இந்த ட்ரிப் ரசிக்க வைக்கும்.
மேலும் வாசிக்க…

சிம்புவை கண்டாலே போதும் இறுக்கி கட்டிப்பேன்... : வைரலாகும் வீடியோ

11:41 PM |
என்னாதான் சிம்பு பல தோல்விப்படங்களை கொடுத்தாலும்.. ஒரு சில ஆண்டுகள் சினிமாவுக்கு தலை காட்டாமல் இருந்தாலும் அவருக்கு என ஒரு ரசிகர் வட்டம் இருக்கத்தான் செய்கிறது... இதை பல மேடைகளில் சிம்புவே சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார்.

எனக்கு சினிமா தேவையில்லை.. இருந்தும் நான் சினிமாவில் இன்னும் நடிக்க விரும்புவது என்னை நம்பி இருக்கும் என் ரசகிர்களுக்காகவே என அண்மையில் கூட சிம்பு வெளிப்படையாக சொல்லியிருந்தார்.

உண்மைதான்.. அந்த ரசிகையின் வீடியோவும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு அல்லவா
 

மேலும் வாசிக்க…

சிம்புவிற்கு இப்படி ஒரு ஷாக் கொடுத்துவிட்டாரே ஹன்சிகா???

12:00 AM |
சிம்பு-ஹன்சிகா ஒருவருக்கொருவர் காதலித்தது அனைவரும் அறிந்ததே. பின் இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் பிரிந்தார்கள்.

இருவரும் தனித்தனியாக தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹன்சிகா தற்போது போகன் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் காதல் திருமணம் செய்வீர்களா என்று இவரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு இவர் ‘காதல் ஒரு அழகான உணர்வு, அது என் வாழ்வில் வந்து சென்றுவிட்டது, கண்டிப்பாக காதல் திருமணம் செய்ய மாட்டேன்.

அம்மா பார்க்கும் பையனை தான் திருமணம் செய்துக்கொள்வேன்’ என கூறியுள்ளார். இதனால், இனி சிம்பு-ஹன்சிகா இணைவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.
மேலும் வாசிக்க…

ஒரே ரூம்…! ஒரே பொண்ணு..! அனிருத்..பார்ட்னர்..! கூத்தும் கும்மாளமும்..!

1:45 AM |
கோடம்பாக்கம் முழுவதுமே இதுதான் பேச்சு..! சிம்பு எப்போதோ பெரிய இடத்திற்கு வந்திருக்க வேண்டியவர். கூட நட்பு மட்டுமே அவரின் இமேஜை காலி பண்ணியது.

அவரது அப்பா போலவே சகல திறமையும் கொண்டவர். அதை உணரவிடாமல் செய்வது நண்பர்கள் தான்.

பீப் சாங்கில் சிம்புவின் பெயர் கெடக் காரணமே அனிருத் தான்.அவருக்கு சகல பழக்கவழக்கங்களும் உண்டு.

பெண்தோழிகள் அதிகம். அதே போல் சிம்புவையும் பழக்கி விட்டார். இந்த இளமை என்பது கொஞ்ச நாள் தான்.இப்போதே சாதித்தால் தான் உண்டு.

இப்போதே சம்பாதித்தால் தான் உண்டு. ஆனால் சிம்பு அதை உணர்வதே இல்லை.பாவம் அவரின் பெற்றோர்கள் சிம்புவின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

சிம்பு எப்போதும் ஓட்டல்வாசம் தான்..! அங்கு கூத்தடிப்பதற்காகவே ஒரு ஜால்ரா க்ரூப் உண்டு.

ஆன்ட்ரியா போன்ற நடிகையர்கள் எப்போது அழைத்தாலும் வந்து பார்த்துவிட்டு போவார்கள்.

அது அவர்களுக்கு பொழுது போக்கு. ஆனால் பெரிய இடத்தில் இருக்க வேண்டிய சிம்பு தான் தன் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்..!

இப்படி சிம்பு பற்றித் தான்  எங்கும் பேச்சு..!!
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன் அழுகை: ஆக்ஷனில் குதிக்கும் விஷால்..!!

2:15 AM |
சிவகார்த்திகேயனின் புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார்.

என்னடா இவன் அடிக்கடி அழுகிறான் என நினைக்க வேண்டாம், உண்மையாக இருப்பதால் அழுகிறேன் என்றார். சிவகார்த்திகேயன் அழுதது குறித்து தான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


விஷால்

சிவகார்த்திகேயன் போன்று நானும் கஷ்டப்பட்டுள்ளேன். அவரது புகாரின்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சிம்பு

சிவகார்த்திகேயனுக்கு விஷால் மட்டும் அல்ல சிம்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார். மிரட்டியவர்கள் யார் என எனக்கும் தெரியும். கடுமையாக உழையுங்கள், மற்றதை கடவுளிடம் விட்டுவிடுங்கள் என சிம்பு அறிவுரை வழங்கியுள்ளார்.

மதன்கள்

'வேந்தர் பிலிம்ஸ்' மதனும், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும் சிவகார்த்திகேயனுக்கு புதுப்படத்திற்காக முன்பணம் கொடுத்ததாக கூறுகிறார்கள். இதை சிவா மறுக்கிறார் என அழுகை குறித்து பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள்

சிவகார்த்திகேயன் மேடையில் அழுததை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்கிறார்கள், சிலர் அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

தனுஷை விட நான் கீழ தான் - சிம்பு..!!

1:56 AM |
நடிகர் சிம்பு இன்று Periscope மூலம் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இதில் ஒரு தனுஷ் ரசிகர் , உங்களை தனுஷுடன் ஒப்பிட்டு பேசுவதை உங்க ரசிகர்களிடம் நிறுத்த சொல்லுங்க, அவர் திறமைக்கு இப்போ எங்கேயோ இருக்கிறார் என்றார். அதற்கு பதிலளித்த சிம்பு,

"தனுஷோட வளர்ச்சியில் எனக்கு சந்தோஷம் தான், நான் அவரை விட கீழ என்று நீங்கள் நினைத்தால் ஓகே, அவரை மட்டுமில்ல மற்ற நடிகர்களை விடவும் நான் கீழ தான். அதனால் என்ன பிரச்சனை இப்போ, அவருடைய உழைப்பால் இந்த உயர்வுக்கு வந்து இருக்கிறார், அதை பார்த்து என்றுமே நான் பொறாமை பட மாட்டேன்.

இப்போ எனக்கு இருக்கும் யோசனை என் ரசிகர்களை மேலும் சந்தோஷ படுத்த வேண்டும். அவ்வளவு தான் என்றார்.
மேலும் வாசிக்க…

தல அஜித் பற்றி எதிர்மறையான கருத்து ? கொந்தளிக்கும் சிம்பு! வீடியோ

12:22 AM |
மேலும் வாசிக்க…

சிம்புவுக்கு படத்தில் ஏகப்பட்ட லிப்லாக்? AAA வின் அடுத்த சர்ச்சை

12:50 AM |
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் AAA படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் கலக்கவுள்ளார். இந்நிலையில் இன்று இப்படத்தின் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தின் அறிமுக டீசரை வெளியிட்டது படக்குழு.

இந்த டீசர் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தின் மாஸ்ஸை காட்டுகிறது. மேலும் இந்த டீஸரிலே ஷ்ரேயாவுடன் லிப்லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. AAA படக்குழுவில் விசாரித்த போது, சிம்புவுக்கு இப்படத்தில் மூன்று, நான்கு லிப்லாக் காட்சிகள் உள்ளதாம்.

மேலும் இப்படத்தை தற்போதுள்ள இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இடம்பெற செய்துள்ளாராம் இயக்குனர் ஆதிக்.
மேலும் வாசிக்க…

AAA Teaser | Madura Michael Character | STR, Shriya Saran, Yuvan Shankar Raja, Adhik ravichandran

10:59 PM |
மேலும் வாசிக்க…

இந்திய நடிகர், நடிகைகள் கூறிய சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்..!!

12:25 AM |
சில சமயங்களில் மனம் திருந்தியோ அல்லது சில காரணங்களாலோ, காதல் வலியின் காரணத்திலோ பிரபலங்கள் தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கூறிவிடுவது இயல்பு. சிலர் இதை டிவி நிகழ்ச்சி, பேட்டிகளில் கூட பதிவு செய்திருக்கின்றனர்.

 சிலர், தாங்கள் ஈர்ப்பு கொண்டவர் மீதான தகவல்களையும், சிலர் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், சிலர் தங்கள் முன்னாள் காதல் பற்றியும் கூறியுள்ளனர். அப்படி பிரபலங்கள் பதிவு செய்து சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்...

ரன்பீர் கபூர்! 

"ஆம், நான் ஒருவரை ஏமாற்றினேன்..." 

கத்ரீனா கைஃப்புடன் உறவில் இருப்பதற்கு முன்னர், ரன்பீர் தீபிகா படுகோனேவுடன் உறவில் இருந்தார். கிட்டத்தட்ட இந்த ஜோடி இரண்டு வருடங்கள் காதலித்து வந்தனர். இந்த பிரிவிற்கு கத்ரீனா தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. ரன்பீரும் ஒருமுறை நான் ஏமாற்றியது உண்மை என கூறியிருந்தார்.

வித்யா பாலன்!

"என் புதிய வீட்டிற்காக நான் லஞ்சம் கொடுத்தேன்..." 

மும்பையில் ஒரு புது வீட்டை வாங்க தான் லஞ்சம் கொடுத்ததாக வித்யா கூறியிருந்தார். மேலும், இது போன்ற காரியத்தில் இன்னொரு முறை ஈடுபட மாட்டேன் என்றும் கூறினார்.

சோனம் கபூர்!

"எனக்கு கொழுப்பு இருக்கிறது, பிகினி உடை அணிய முடியாது."

தனக்கு செலுலைட் (Cellulite) இருக்கிறது என்னால் பிகினி அணிய முடியாது என சோனம் கூறினார். செலுலைட் என்பது கொழுப்பு காரணமாக தொடை, இடுப்பு, போன்ற இடங்களில் குழிகள் போன்று உருவாவது.

ஷாருக்கான்!

"எனக்கு நண்பர்களை எப்படி உருவாக்கி கொள்வது என தெரியாது!"

காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் ஷாரூக் தனக்கு நண்பர்களை உருவாக்கிக் கொள்ள தெரியாது. அவர்களுடன் சரியாக தொடர்பில் இருக்கவும் தெரியாது என கூறியிருந்தார்.

ஆலியா பட்!

"ஹிரித்திக்கை கேன்வாஸில் கேப்ச்சர் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ..."

பெரிய ஆர்டிஸ்ட் இல்லை எனிலும் ஹிரிதிக்கை வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார் ஆலியா. இதில் ஹிரித்திக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

சிம்பு!

"நான் ஒருவரை ஏமாற்றினேன், என்னை ஒருவர் ஏமாற்றினார்..."

சிம்பு ஒருமுறை காதலில் நான் ஒருவரை ஏமாற்றினேன், ஒருவர் என்னை ஒருமுறை ஏமாற்றினார் என கூறியிருந்தார். இந்த இரண்டு காதலும் யாருடனானது என்பது பலரும் அறிந்தது தான்.

கரீனா கபூர்!

"நான் எனது ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன்.."

தான் உடுத்தும் ஜீன்ஸை பெரும்பாலும் துவைக்க மாட்டேன். அப்படியே தான் மறுமுறையும் உடுத்துவேன் என கரீன கூறியிருந்தார்.

ஹிரித்திக் ரோஷன்!

"உளறுவது எனது சிறுவயதில் நரகம் போன்று இருந்தது"

ஹிரித்திக் சிறுவயதில் பேசுவதில் சில கோளாறுகள் கொண்டிருந்தார். அவரால் சரியாக பேச முடியாது. உளறுவது போன்று இருக்கும். இதனால் இவரது நண்பர்கள் இவரை கேலி கிண்டல் செய்வார்கள். இதனால், காலப்போக்கில் பேசும் போது நிதானமாகவும், கவனமாகவும் பேச துவங்கினார் ஹிரித்திக்.


மேலும் வாசிக்க…

மீண்டும் முருங்கை மரம் ஏறிய சிம்பு: பழைய படி விளையாட்டை தொடங்கிய கொடுமை..!!

2:57 AM |
சிம்பு நடித்த எந்த படத்தின் தயாரிப்பாளரும் நிம்மதியாக படம் எடுத்து வெளியிட்டு லாபம் பார்த்ததாக சரித்திரம் கிடையாது. ஆனாலும் சிம்புவை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுப்பார்கள். "சிம்பு தம்பி எங்ககிட்ட வம்பு பண்ணாது" என்ற படத்தை ஆரம்பிப்பார்கள்.

"நான் பழைய சிம்பு இல்லை நிறைய மாறிட்டேன்" என்று அவரும் நடிக்க ஆரம்பிப்பார். கடைசியில் நிலைமை மாறிவிடும். அப்படி நம்பி போய் கடைசியாக கஷ்டப்பட்டவர்கள் பாண்டிராஜும், கவுதம் மேனனும்.அச்சம் என்பது மடமையடா படத்தில் ஒரே ஒரு பாட்டுதான் பாக்கி இருந்தது. அதற்கே அவரை படாதபாடுபடுத்தி இப்போதுதான் முடித்துக் கொடுத்தார்.

அடுத்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மாட்டினார். திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்தார். தலைப்பைபோல சிம்பு இருப்பார் என்ற நம்பினார்.

ஆனால் தலைப்பின் கடைசி வார்ததை போல மட்டும்தான் அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.படப்பிடிப்பு தேனியில் தொடங்கி சரியாகத்தான் போய்கொண்டு இருந்தது. தமன்னா, ஸ்ரேயா படத்துக்குள் வந்தார்கள். சிம்பு 60வயது முதியவராக நடிக்கிறார் என்றெல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.

தேனி பகுதி ஷெட்யூல் திட்டமிட்டபடி சரியாக முடிந்தது. தயாரிப்பாளரும் மிகவும் சந்தோஷம் அடைந்தார்."சமீபத்தில் சென்னை பகுதி ஷெட்யூல் ஆரம்பித்ததும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு கெஸ்ட் அவுஸை லட்சக்கணக்கில் வாடகை கொடுத்து படப்பிடிப்புக்கு குழுவினர் தயாராக இருந்ததால் சிம்புவை காணோம்.

அவர் தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை. பல நாள் காத்திருந்ததில் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம். வேறு வழியே இல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். தயாரிப்பாளர்கள் சிம்புவின் தந்தையை அழைத்து அன்பாக கண்டித்ததால் இப்போது படப்பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்" என்கிறார் தயாரிப்பு தரப்பு நிர்வாகி ஒருவர். படம் முடிவதற்குள் இன்னும் என்னென்ன பிரச்னைகள் வருமோ என்ற கவலையோடு இருக்கிறார் தயாரிப்பாளர்
மேலும் வாசிக்க…

நயன்தாரா ஒரு அப்பாவி..! வரிசையாக ஏமாற்றும் காதலர்கள்..!!

2:54 AM |
உண்மையிலேயே நயன்தாரா படு அப்பாவி என்கிறார்கள். அவரது விசுவாசிகள் மற்றும் நண்பர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர்.

ஒருவரை பிடித்து விட்டது என்றால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். எதை வேண்டுமானாலும் இழப்பார். சிம்புவுடன் காதலில் இருந்தபோது விலை உயர்ந்த பொருட்கள், வைர ,பிளாட்டின மோதிரங்கள் பரிசாக அளித்தாராம்.

வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போனால் அங்கு கிடைக்கும் காஸ்ட்லி பொருட்களை தேடி தேடி வாங்கி வந்து கொடுக்கும் பழக்கம் அவருக்கு உண்டு.

அதன் பின் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்த போது அவர் அமெரிக்காவில் ஆரம்பிக்க இருந்த நடனப் பள்ளிக்கு சில கோடிகளை இழந்தார் என்று பேசப்பட்டது..

உதயநிதியும் விரட்டி விரட்டி காதலித்தார். ஆனால் பட்டும் படாமல் பழகி விட்டு கழண்டு கொண்டார் என்கிறார்கள்.

அதன் பின் வெறுத்து போய் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். மீண்டும் தமிழ் படங்களில் பிசியானார்.

அப்போது நானும் ரவுடிதான் படத்தில் கமிட் ஆக படம் முடிவதற்குள் அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

இப்போது காதலனுக்காக சொந்த படம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சொந்த படம் நன்றாக நடந்து முடிந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தினாலும்

இன்னொரு புறம் படம் ஏதாவது ஆனால் சம்பாதித்த மொத்த பணமும் போய் விடும் என்று பதறுகிறார்கள் அவரின் நண்பர்கள்.

பாவம் தான்..!
மேலும் வாசிக்க…

அதிர்ச்சியில் கோடம்பாக்கம் - முதலிரவே கொண்டாட முடியாத சிம்பு..!!

1:31 AM |
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ட்ரிபிள் ஏ. இந்த படத்தின் கதை முதலிரவே கொண்டாட முடியாமல் தவிக்கும் இளைஞனின் கதையாம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு இந்த கதையில் நடிப்பதால் கோடம்பாக்கம் அதிர்ந்து கிடக்கிறதாம்.

ஏற்கனவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை நாயகனாக வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது இது மாதிரி கதையில் சிம்புவை நடிக்க வைத்து ட்ரிபிள் ஏ என பெயர் வைத்துள்ளதால் இந்த படமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என இப்பொழுதே கிசுகிசுக்கப்படுகிறது.

முன் ஜென்மத்தில் இரண்டு நாய்கள் உல்லாசமாக இருக்கும் போது கல்லெறிந்து அதனை இடையூறு செய்த இளைஞன், இந்த ஜென்மத்தில் திருமணமாகியும் முதலிரவு கொண்டாட முடியாமல் தவிக்கும் கதை தான் இந்த படம் என தகவல்கள் வருகின்றன. இந்த படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்க இருப்பது கூடுதல் தகவல்.

மேலும் வாசிக்க…

ஸ்ரேயாவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்..!!

12:11 AM |
விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில், லட்டு லட்டு ரெண்டு லட்டு -என்ற பாடலுக்கு அவருடன் குத்தாட்டமாடியவர் ஸ்ரேயா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று நடித்து வந்தவர் கார்த்தி நடித்த தோழா படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர்,

இப்போது சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடித்துள்ள வேடத்தில் நடிக்க திரிஷா உள்ளிட்ட பல நடிகைகள் மறுத்து விட்டபோது, ஸ்ரேயா எந்தவித தயக்கமும் இன்றி நடித்துக்கொடுத்துள்ளார்.

அதோடு, மொத்தம் 16 நாட்களாக திண்டுக்கல்லில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ரேயா படத்தை முடித்துக்கொடுத்ததும் அங்கிருந்தபடியே மும்பை பறந்து விட்டாராம்.

மேலும், இந்த டிரிபிள் ஏ -படத்தில் அப்பா சிம்புவின் மனைவியாக நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு இரட்டை குழந்தை பிறக்குமாம். அந்த இரண்டு குழந்தைகளும் பின்னர் இரண்டு சிம்புக்களாக நடித்துள்ளார்களாம்.

அந்த வகையில், இரண்டு சிம்புக்களும் குழந்தையாக இருக்கும்போது அவர்களிடம் பாசம் கட்டும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா, பலமுறை ஸ்பாட்டில் கைதட்டல் வாங்கினாராம். அந்த அளவுக்கு குழந்தை சிம்புக்களிடம் பாசத்தை கொட்டி நடித்துள்ளாராம் ஸ்ரேயா.
மேலும் வாசிக்க…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு..!!

12:20 AM |
கண்ணே கலைமானே, ஆடைகட்டி வந்த நிலவோ என்று கண்ணியமாக காதலையும் பெண்ணையும் சித்தரித்த சினிமாவில், லூசுப்பெண்ணே, எவன்டி உன்னை பெத்தான், கைல கெடச்சா செத்தான் என்று கண்ணியத்தை காலில் போட்டு மிதித்தவர் சிம்பு.  

அவரே இயற்றி பாடிய பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையை சட்டையாக அணிந்தவை.   அனைத்தின் உச்சமாக அவரது பீப் பாடல் அமைந்தது. அவர் பாடாமல் விட்ட இடங்கள் ஆபாசமான அர்த்தத்தை தந்து இளசுகளையும் முகம் சுழிக்க வைத்தது. போலீஸ், கேஸ், கோர்ட் என்று சிம்பு இழுத்தடிக்கப்பட்டார்.

ஆனாலும், அவர் திருந்துவதாக இல்லை.   தற்போது நடித்துவரும் அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் சிம்பு. அதன் சில வரிகள் வெளியாகியுள்ளன.

 என்னைவிட்டு   யாரையாச்சும் நீ   கல்யாணம்தான்   பண்ணிகிட்டா   கொன்னேபுடுவேன்..   - என்று தொடங்கும் அந்தப் பாடல் கடும் வெறுப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.    ஒருதலை காதல் காரணமாக தமிழகத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்.

அவர்களின் மீது ஆசிட் வீசப்படுகிறது. ஒருதலை காதலர்களின் தொல்லை அதிகரித்துவரும் இந்த சூழலில், என்னை கல்யாணம் பண்ணாவிட்டால் கொன்றுவிடுவேன் என்ற சிம்புவின் பாடல் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றும் செயல்.  

சினிமாவில் நாயகன் எவ்வளவு தறுதலையாக இருந்தாலும் நாயகி அவனை காதலித்தாக வேண்டும். அந்த தாக்கத்தில்தான் தெருவோடு போகிற பொறுக்கிகள், என்னை காதலி என்று பெண்களை வற்புறுத்துகிறார்கள். மறுத்தால் கொலை செய்கிறார்கள்.

அந்த மனோபாவத்தை இந்த பாடல் அங்கீகரிப்பது போலுள்ளது.    த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற விடலை படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒரு சிம்புவையே தாங்க முடியவில்லை. இதில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் காம்பினேஷன் வேறு.   என்னென்ன அநாகரிகங்கள் வரப்போகிறதோ.
மேலும் வாசிக்க…

நயன்தாராவால் பலர் அச்சத்தில்..!!

12:47 AM |
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளது தயாரிப்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளிலும் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வருகிறார்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் 40 மற்றும் 50 லட்சங்களாகதான் இருந்தது. சில படங்களிலேயே அது ரூ.1 கோடியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த ‘மாயா’,‘நானும் ரவுடிதான்’, ‘தனி ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ உள்ளிட்ட படங்கள் வசூலை குவித்தன. கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா, ஜீவாவாவுடன் நடிக்கும் திருநாள் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நயன்தாராவை அணுகி முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர கால்ஷீட் கேட்டதாகவும் அந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பதறி போன தயாரிப்பாளர் நடிகையை மாற்றும் யோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற நடிகைகளின் அதிகபட்ச சம்பளம் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ஸ்ரேயாவிற்கு நடந்த திருமணம் கோலிவுட்டில் பரபரப்பு..!!

1:22 AM |
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் பின் மார்க்கெட் இழந்து தமிழ் படங்களில் நடிப்பதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸை சிம்பு நடிக்கும் AAA படத்தின் மூலம் தொடங்கிவுள்ளார்.

இந்த படத்தில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி உள்ளது.

ஸ்ரேயா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளிவர, சமூக வலைத்தளங்களில் இவருக்கு உண்மையாகவே திருமணமாகிவிட்டது என்பது போல் கருத்துக்கள் கூறி வந்தனர், பின் அது படத்திற்கான ஷுட்டிங் என்பது தெரிய வந்தது.
மேலும் வாசிக்க…

நயன்தாரா இப்படி நடிக்க மறுத்தாரா?!! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

12:09 AM |
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளார்.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உயர்ந்து இருக்கிறார்.

 ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது தமிழில் திருநாள், இருமுகன், காஷ்மோரா ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும் இரண்டு புதிய தமிழ் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக பாபுபங்காரம் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த தெலுங்கு படம் நயன்தாராவின் திடீர் கெடு பிடிகளால் திரைக்கு வர முடியாமல் முடங்கி இருப்பதாக படக்குழுவினர் ஆவேசப்படுகின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.

 நயன்தாரா-வெங்கடேஷ் தொடர்பான பாடல் காட்சியொன்றும் சில வசன காட்சிகளும் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. இவற்றை முடித்து விட்டு இந்த மாதம் இறுதியில் பாபுபங்காரம் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர்.

பாடல் காட்சியில் நயன்தாராவுக்கு அரைகுறை ஆடைகள் உடுத்த கொடுத்து கவர்ச்சியாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நயன்தாரா திடீர் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே அந்த படத்துக்காக கொடுத்த கால்ஷீட் திகதிகள்  முடிந்து விட்டன என்றும் பாடல் காட்சிக்காக கூடுதல்திகதிகள் ஒதுக்கி தர முடியாது என்றும் கூறிவிட்டாராம். மூத்த நடிகரான வெங்கடேசுடன் கவர்ச்சி உடையில் நடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முடியாமல் படக்குழுவினர் தவிக்கின்றனர். இது நயன்தாரா-வெங்கடேஷ் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளதாக தெலுங்கு பட உலகினர் முணுமுணுக்கின்றனர். நயன்தாராவை சமரசப்படுத்தி பாடல் காட்சியில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.

ஏற்கனவே சிம்புவின் இது நம்ம ஆளு படத்திலும் இதே போன்று கால்ஷீட் முடிந்த பிறகு பாடல் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திப்பதாக குற்றம் சாட்டி அதில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா இப்போது நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம். காதல் காட்சிகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன். கவர்ச்சி ஆடைகள் அணிய மாட்டேன் என்றெல்லாம் கூறுகிறாராம்.

காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். கவர்ச்சியாக நடிக்க வேண்டாம் என்று காதலர் வற்புறுத்துவதாகவும் அதனாலேயே கவர்ச்சியாக நடிக்க அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com