நயன்தாராவின் மாஸ்டர் ப்ளான்..!!

12:43 AM |
இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர் நயன்தாரா.

அதை தொடர்ந்து வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார், அப்போது நயன்தாரா மார்க்கெட் வேறு, தற்போது வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

அட்லீ இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

நயன்தாரா இதை வைத்தே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டுவிட்டாராம், அது என்னவென்றால் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தால், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

2019-ல் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா..!!

11:29 PM |
நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்த போது நாயகி நயன் தாராவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானதால் அது உண்மை தான் என்று எல்லோரும் நம்பினார்கள்.

இருவரையும் சைமா விருது விழா உட்பட பல திரையுலக விழாக்களில் ஒன்றாக பார்க்க முடிந்தது. அவ்வளவு ஏன் சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைகளுக்கு கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு விக்னேஷ் சிவனை அழைத்து பண்டிகையை சீறும் சிறப்புமாக கொண்டாடியதெல்லாம் நடந்தது.

இப்படி இருவரும் காதலில் கண்டுண்டு கிடப்பது உலகமறிந்த விஷயமாகி விட சூர்யாவை வைத்து புதுப்படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ்சிவனுக்கு வாங்கிக் கொடுத்ததே நயன் தான் என்கிற ஒரு சீக்ரெட் செய்தியும் உண்டு.

இப்படி தனது காதலர் விக்னேஷ்சிவனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் கூடவே இருந்த நயன்தாராவை தனது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

நயனுக்கும் வயதாகிக் கொண்டே போவதால் வருகிற 2019-ம் ஆண்டில் எங்கள் திருமணம் என்று தனது நண்பர்களிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

முதல் இரண்டு காதலும் புட்டுக் கொண்டதில் ரொம்பவே அப்செட்டாகியிருந்த நயனுக்கு விக்னேஷ் சிவனின் இந்த முடிவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுடன் பிரச்னை இருந்தது திரிஷா பரபரப்பு பேச்சு..!!

11:23 PM |
தனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு பிரச்சனை இருந்ததாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

ஜோடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா. அந்த படத்தில் ரிச் கேர்ளாக வந்த த்ரிஷா மவுனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். 15 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நயன்தாரா.நானும், நயன்தாராவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் உள்ளோம். எங்களுக்கு இடையே நிறைய பிரச்சனை உள்ளது என்று கூறப்படுவது எல்லாம் மீடியா உருவாக்கியது என்கிறார் த்ரிஷா.

எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அது குறித்து நான் பேச விரும்பவில்லை.

அந்த பிரச்சனைக்கு தொழில் காரணம் அல்ல என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். எனக்கும், நயன்தாராவுக்கும் நன்கு தெரிந்த பொதுவான நண்பர்கள், நபர்களால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அப்படி இருந்தும் நாங்கள் மோதிக்கொள்ளவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பட ரிலீஸின்போது வாழ்த்துவோம் என்று த்ரிஷா கூறியுள்ளார்.

த்ரிஷா முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்த கொடி படம் ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா ராணியாக நடித்த காஷ்மோரா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மேலும் வாசிக்க…

முக்கிய புள்ளியிடம் பணம் கேட்கச் சென்ற நடிகை: பின்னர் நடந்ததே வேறு கதை..!!

12:04 AM |
பெண்களை குறி வைத்து செய்யப்படும் பாலியல்ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டன

அதே போல் பணக்காரப் பெண்களை குறி வைத்து, அவர்களை மயக்கி..படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் ஆண்கள் பெருகி விட்டார்கள்.

இவர்களைக் காக்க களம் இறங்கி விட்டார் நயன்தாரா. முதலில் கேரளாவில் இந்த அமைப்பைத்  தொடங்குகிறார்.

அதன் பின் பெரிய நடிகர்கள், வசதி படைத்தவர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் நன்கொடை கேட்க முடிவு செய்து கேரளாவின் ஒரு பெரிய ஹீரோவிடம்  உதவி கேட்டாராம்.

எல்லா விவரமும் கேட்ட அந்த நபர், "சரி தருகிறேன் மகளே, ஆனால் உன் காதலன் எவ்வளவு தந்தார்..? " என்று கேட்க ஆடிப் போனாராம் நயன்..!

அவரும் இயக்குனர் தானே..? முதலில் அவரிடம் சில இலட்சங்கள் வாங்கிகொண்டு என்னிடம் வா..! என்று கூறி அனுப்பி விட்டாராம் அவர்
அவமானத்துடன் கேரளாவில் இருந்து புறப்பட்டாராம் நயன்..?

மேலும் வாசிக்க…

நயன்தாரா கல்யாணம் எப்போது என்று வெளியான தகவல்..!!

11:58 PM |
நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை. இந்த வருடம் அவர் நடித்த நிறைய படங்கள் ஹிட்டானது.

கூடவே காதல் குறித்த செய்திகளும் ரசிகர்கள் மனதை ஹிட்டாக்கியது. சிம்புவுடன் காதல் பின் வம்பாகி பிரபு தேவாவுடன் காதல் என செய்திகள் பறந்தது.

பின் விலகிப்போன இவர் நானும் ரௌடி படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் என்று சொல்லப்பட்டு செய்திகள் வந்தன.

ஆனாலும் எதுவும் சொல்லாமல் இருக்கும் இவர்களால் மௌனம் சம்மதம் என ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவனையும் அவரது அம்மாவையும் வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்த நயன்தாரா இந்த முறையாவது காதல் வெற்றி பெறவேண்டும் என நினைக்கிறாராம்.

விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு அவரை பிடித்து வீட்டதனால் அடுத்தவருடம் திருமணம் நடக்கும் என்று கிசுகிசுக்கப்படுறது. நயன்தாரா தற்போது 3 கோடி வரை சம்பளம் வாங்குவதனால் படத்தில் தொடந்து நடிப்பாரா என பேசப்படுகிறது.

ஏற்கனவே சமந்தா திருமணத்திற்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது அனுஷ்காவிற்கு விரைவில் பிரபல தொழிலதிபரோடு திருமணம் செய்வதாக வந்த செய்தியை தொடர்ந்து தற்போது நயன்தாரா பெயரும் சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

பிரபு தேவா , தமன்னா கல்யாணம்..? கதறிய நயன்தாரா..!!

12:57 AM |
கடந்த இரு வாரங்களாக கோலிவுட், பாலிவுட், மாலுவுட், ஹாலிவுட் வரை பிரபு தேவா, தமன்னா பற்றித்தான் சூடான விவாதங்கள். அந்த மனுஷனுக்கு மட்டும் எப்படியா லட்டு லட்டா வந்து மாட்டுது. என்கிற ரேஞ்சுக்கு காதில் புகை வர பேசுகிறார்கள் சினிமா புள்ளிகள்.

திருமணம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இந்த விஷயத்தில் அதிகமாகவே பாதிக்கப் பட்டது நயன் தானாம்.

கொதித்துப் போய் தமன்னாவை நேரடியாகவே தொடர்பு கொண்டு அத்தனை விஷயங்களையும் கண்ணீரோடு போட்டு உடைத்தாராம்.

லூசாடி நீ சம்பாதிச்ச மொத்த பணமும் பறி போய்டும் என்று கதற, தமன்னா ஜெர்க் ஆகிவிட்டாராம்.

இரண்டு நாட்கள் பிரபுவிடம் பேசாமல் தவிர்க்கிறாராம். அங்க பிரபு தவிக்கிறாராம்..!
மேலும் வாசிக்க…

வருங்கால மாமியாருக்கு விருந்து கொடுத்து அசத்திய பிரபல நடிகை..!!

12:24 AM |
நடிகை நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனின் அம்மாவை எப்படி சரி செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். நயன் எங்கு சென்றாலும், அவரில்லாமல் செல்வதில்லை.

விக்னேஷ் சிவனின் அம்மா முன்னாள் காவல்துறை அதிகாரியாம். சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பணி புரிந்தவராம். அப்போது அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்த பல ரவுடிகளை அடக்கியவர் என்று கூறப்படுகிறது.

இதனால், ஆரம்பத்தில் நயனுக்கு அவர் மேல் பயம் இருந்ததாம். ஆனால், பழக பழக அவர் இனிமையானவர் என்று புரிந்து கொண்டாராம்.மேலும், தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, வருங்கால மாமியாரை, சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து விருந்தும் கொடுத்தாராம்.
மேலும் வாசிக்க…

“நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை” நடிகை ஸ்ரீதிவ்யா அதிரடி..!!

1:09 AM |
“காஷ்மோரா படத்தில் நடித்தபோது நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை” என்று நடிகை ஸ்ரீதிவ்யா கூறினார்.

படவிழா

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கிறார்கள். கோகுல் டைரக்டு செய்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசும்போது, “மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான ‘பாகுபலி’ படம் திரைக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரமாண்ட படமாக காஷ்மோரா தயாராகி உள்ளது. நயன்தாரா மிக சிறந்த நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபிப்பார். இதற்கு முன்பு எல்லா படங்களிலும் ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நகரத்து பெண்ணாக வருகிறார்” என்றார்.

ஸ்ரீதிவ்யா பேட்டி

பாடல் வெளியீட்டு விழா முடிந்ததும் விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“காஷ்மோரா படத்தின் கதையை டைரக்டர் கோகுல் என்னிடம் சொன்னபோது நயன்தாரா கவுரவ வேடத்தில்தான் வருகிறார் என்றார். அதனால் எனக்கு அவரைப்பார்த்து பயம் ஏற்படவில்லை. அவருக்கு அதிக காட்சிகள் இருக்குமோ என்று மிரளவும் இல்லை. எனது கதாபாத்திரம் எனக்கு திருப்தியாக தோன்றியது. வித்தியாசமாகவும் இருந்தது. இந்த படத்தில் காதல் இல்லை. நானும் நயன்தாராவும் ஒரே நாள்தான் இணைந்து நடித்தோம்.

நயன்தாரா

முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது என்னிடம் நன்றாகவே பேசினார். அவர் அழகாக இருந்தார். இதுவரை பல படங்களில் பாவாடை தாவணியில் நடித்து விட்டேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது என்று சொன்னார்கள். இந்த படத்தில் ‘மாடர்ன் கேர்ள்’ ஆக வருகிறேன். நான் அதிக சம்பளம் கேட்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறு. அப்படி யாரிடமும் கேட்கவில்லை. நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் தோன்ற விரும்புகிறேன்.”

இவ்வாறு ஸ்ரீதிவ்யா கூறினார். பட விழா நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கினார். டைரக்டர் கோகுல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் வாசிக்க…

ஜோடியாக சுற்றுகிறார்கள் பிரபுதேவா–தமன்னா திடீர் நெருக்கம் காதலிப்பதாக பரபரப்பு..!!

11:21 PM |
பிரபுதேவாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் படவுலகில் பரபரப்பு தகவல் பரவி உள்ளது.

ஜோடி
தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரபுதேவா தமிழ் மற்றும் இந்தி படங்களை டைரக்டு செய்து வந்தார்.

இருவரும் தமிழ், இந்தியில் தயாரான ‘தேவி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் பிரபுதேவாவின் நடனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தமன்னா பேசி வந்தார். தமன்னாவும் திறமையாக நடனம் ஆடுகிறார் என்று பிரபுதேவா புகழ்ந்தார்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.

தமன்னா இதற்கு முன்பு தான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். இதற்காக அவர் மீது சினிமா சங்கங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தேவி பட நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

நெருக்கம்
பிரபுதேவாவுக்கும் தமன்னாவுக்கும் படப்பிடிப்பின்போது நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் இருவரும் பட விழாக்களில் ஜோடியாக சுற்றுகிறார்கள் என்றும் பட உலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெலுங்கு டைரக்டர் ஒருவர் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபுதேவா ஏற்கனவே நயன்தாராவை காதலித்து தோல்வி அடைந்தவர். இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள். இதற்காக நயன்தாரா மதம் மாறவும் செய்தார். பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

பிரபுதேவாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை வற்புறுத்தி வருகிறார்கள்.

தமன்னாவையும் இதுவரை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வரவில்லை. பிரபுதேவாவிடம் அவர் மனதை பறிகொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் ரகசிய காதல் விவகாரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பேசப்படுகிறது.
மேலும் வாசிக்க…

பப்ளிசிட்டிக்காக நயன்தாரா காலை பிடிச்சேனா? - கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

1:28 AM |
நடிகையும், இயக்குனரும், டி.வி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து கூறியதாவது:-  
நான் என்ன கட்ட பஞ்சாயத்து நடத்துறேனா? என் நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொருவரையும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களாவே நினைக்கிறேன். என்னால் முடிஞ்ச உதவிகளை செய்து வருகிறேன்.

பப்ளிசிட்டிக்காக நான் எதுவும் செய்வதில்லை. எனக்கு சமூகம் மீது அக்கறை உள்ளது. சுமுகமான முறையில் பிரச்சனையை தீர்த்து வைத்து உதவி செய்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் சாலையோரத்தில் ஒரு பாட்டி, தன்னம்பிக்கையுடன் இருப்பதை எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன்.  

உடனே, பப்ளிசிட்டிக்காக செய்யறீங்களான்னு கேட்டால், என்ன சொல்வது?   நான் என் படத்துக்காக நயன்தாரா காலை பிடிச்சு, என் படத்தின் டிரைலரை ரிலீஸ் பண்ணுங்கமா என்றும் அவங்களோட சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தால், அது பப்ளிசிட்டி என்று கூறினார்.
மேலும் வாசிக்க…

நயன்தாராதான் என் பொண்டாட்டி - விறகுவெட்டி சொன்ன பகீர் தகவல்.!!

11:54 PM |
ஒரு ஊரில் மிகவும் ஏழ்மையான மற்றும் கடுமையாக உழைக்கும் மாரியப்பன் என்ற ஒருவன் விறகு வெட்டிக் வேலைப் பார்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

அவனின் அந்த நேர்மையான உழைப்பைக் கண்டு, கடவுள் ஒரு நாள் அவனின் முன் தோன்றி, அவனுடைய நேர்மையான உழைப்பை பாராட்டி அவனுக்கு தங்கக் கோடாரி ஒன்றை பரிசாக அளித்தது.

அந்த தங்கக் கோடாரி 20 கிலோ இருந்தது. மாரியப்பன் அந்த கோடாரியை விற்று பெரும் பணக்காரனாக மாறினான்.

மாரியப்பனின் இந்த வளர்ச்சியைப் பார்த்து, அதே ஊரில் வசிக்கும் பெரிய செல்வந்தர் ஒருவர் தன்னுடைய அழகு தேவதையான, அருமை மகள் வள்ளியம்மாளை, மாரியப்பனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.

திருமணம் முடிந்த மாரியப்பன் தன் மனைவி வள்ளியம்மாளை அழைத்துக் கொண்டு பதினெட்டாம் பெருக்கின், பவானி ஆற்றின் கிளை வாய்க்காலில் இருவரும் சென்று அமர்ந்து சித்திரான்னங்களை சாப்பிட்டவாறு, ஜோக் அடித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போழுது மாரியப்பன் கூறிய ஒரு ஜோக்கிற்காக வள்ளியம்மாள் சிரித்தபடியே தவறி அந்த வாய்க்காலில் விழுந்து விட்டாள்.

மாரியப்பனுக்கு நீச்சல் தெரியாததால் ஒன்றும் புரியாமல் கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து என்று கூச்சலிட்டான்.

அப்போது கடவுள் அவன் முன் தோன்றி, இப்போ எதடா தொலைச்ச என்று கேட்டார்.

அதற்கு மாரியப்பன் நான் என்னுடய பொண்டாட்டிய தொலச்சிட்டேன் சாமீ என்றான்.

அதற்கு கடவுள் ஒருவன் வாழ்க்கையில் தொலைக்க க்கூடாததை நீ தொலைத்துள்ளாய் உனக்கு நான் உதவி செய்ய மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்தார்.

எனவே மாரியப்பன் கடவுளின் காலில் விழுந்து, சாமீ, வள்ளியம்மாள் இல்லையென்றால் எனக்கு வாழ்வே இல்லை என்று நானும் வாய்க்காலில் குதித்து சாகிறேன் என்று குதிக்கப் போனான்.

அப்போது கடவுள் அவனை தடுத்து உனக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அந்த வாய்க்காலில் மூழ்கி நயந்தாராவை காட்டி இவள் உன் மனைவியா? என்று கேட்டார்.

அதற்கு மாரியப்பன் ஆமாம் இது தான் என் மனைவி வள்ளியம்மாள் என்று கூறிவிட்டான்.

கடவுள் கோபத்துடன், அட பாவீ. பணம் வந்ததும் உண்மையை மறந்து பொய் கூறுகிறாயா என்று கேட்டார்.

அதற்கு மாரியப்பன் சாமீ என்னை மன்னியுங்கள்..ஏனென்றால் நீங்கள் முதலில் நயந்தாராவை காட்டுவீர்கள் நான் இல்லை என்று பதில் சொன்னால், பின் தமன்னாவை காட்டுவீர்கள் அதற்கு நான் இல்லை என்று சொன்னால், முடிவில் என் மனைவி வள்ளியம்மாளை காட்டுவீர்கள்.

அதற்கு நான் ஆமாம் சாமீ இவள் தான் என் மனைவி வள்ளியம்மாள் என்று கூறினால்......

நான் உண்மையை மட்டும் பேசியதால் எனக்கும் முன்பு கொடுத்த தங்கம், வெள்ளி, இரும்பு என்ற மூன்று கோடரிகளையும் என்னிடமே கொடுத்தது போலவே இந்த முறையும் நீங்கள் இந்த மூன்று பேரையும் நீயே வைத்துக் கொள் என்று கூறிவிட்டால், நான் என்ன செய்வது சாமீ…

ஒன்றை வைத்து சமாளிப்பதே கஷ்டமாக இருக்கும் போது நான் மூன்றையும் எப்படி சமாளிப்பேன் அதனால் தான் பொய் கூறிவிட்டேன் என்று மாரியப்பன் கடவுளிடம் கூறினான்.

மாரியப்பன் கூறியதை கேட்டதும் கடவுள் சிரித்தபடியே, வள்ளியம்மாளை மாரியப்பனிடம் ஒப்படைத்து, அவனை பாராட்டி, இருவருக்கும் ஆசிர்வாதம் அளித்து கடவுள் மறைந்துவிட்டார்.
மேலும் வாசிக்க…

கடைசியாக பிரபல நடிகைகள் தமிழில் நடித்த படங்களின் ரிசல்ட்..!!

1:04 AM |
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். இந்நிலையில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா என ஒரு சிலரே பல வருடமாக கலக்கி வருகின்றனர். இதில் கடைசியாக பிரபல நடிகைகள் தமிழில் நடித்த படங்களின் ரிசல்ட்டை நீங்களே பாருங்கள்...

த்ரிஷா

நாயகி- flop
என்னை அறிந்தால்- hit
தூங்காவனம்- average
அரண்மனை-2- hit
பூலோகம்- average

அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி- flop
ருத்ரமாதேவி- flop
பாகுபலி- mega hit
என்னை அறிந்தால்- hit
லிங்கா- flop

நயன்தாரா
இருமுகன்- superhit
திருநாள்- average
இது நம்ம ஆளு- above average
நானும் ரவுடி தான்- superhit
மாயா- hit

தமன்னா
தர்மதுரை- hit
தோழா- hit
வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க- average
பாகுபலி- megahit
வீரம்- superhit

காஜல் அகர்வால்
பாயும் புலி-flop
மாரி- average
ஜில்லா- hit
அழுகுராஜா- flop
துப்பாக்கி- superhit

ஸ்ரீதிவ்யா
மருது- average
பென்சில்- flop
பெங்களூர் நாட்கள்- flop
ஈட்டி- hit
காக்கிசட்டை- average

ஹன்சிகா
மனிதன்- hit
உயிரே உயிரே- flop
போக்கிரிராஜா- flop
அரண்மனை 2- hit
புலி- flop

ஸ்ருதிஹாசன்
வேதாளம்- megahit
புலி- flop
பூஜை- average
3-flop
7ம் அறிவு- super hit

சமந்தா
24- hit
தெறி- megahit
தங்கமகன்- flop
10 என்றதுக்குள்ள- flop
கத்தி- megahit

நித்யாமேனன்
இருமுகன்- hit
முடிஞ்சா இவன பிடி- flop
24-hit
ருத்ரமாதேவி- flop
ஓ காதல் கண்மணி- super hit

எமி ஜாக்ஸன்
தெறி- mega hit
கெத்து- flop
தங்கமகன்- flop
ஐ- super hit
தாண்டவம்- flop

இதை வைத்து பார்க்கையில் தமிழ்சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதில் நயன்தாரா மற்றும் தமன்னாவிற்கிடையே தான் கடும்போட்டி.
மேலும் வாசிக்க…

நயன் – விக்னேஷ் சிவன் ரகசியமாக கோவிலுக்கு சென்றது ஏன்? – விபரம் உள்ளே..!!

12:08 AM |
நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்-நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக கோலிவுட்டில் பரவலாக செய்தி பரவி வந்தது. அந்த படப்பிடிப்பின்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதையெல்லாம் உறுதிப்படுத்தும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் திடீரென கும்பகோணம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளனர்.

இருவரும் கோவிலுக்கு சென்றது பல்வேறு தரப்பிலும் வெவ்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இருவரும் எதற்காக கும்பகோணம் கோவிலுக்கு சென்றார்கள் என்று விசாரிக்கையில், விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நல்ல வெற்றியை பெற இருவரும் சேர்ந்து கும்பகோணம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா ஒரு அப்பாவி..! வரிசையாக ஏமாற்றும் காதலர்கள்..!!

2:54 AM |
உண்மையிலேயே நயன்தாரா படு அப்பாவி என்கிறார்கள். அவரது விசுவாசிகள் மற்றும் நண்பர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர்.

ஒருவரை பிடித்து விட்டது என்றால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாராம். எதை வேண்டுமானாலும் இழப்பார். சிம்புவுடன் காதலில் இருந்தபோது விலை உயர்ந்த பொருட்கள், வைர ,பிளாட்டின மோதிரங்கள் பரிசாக அளித்தாராம்.

வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போனால் அங்கு கிடைக்கும் காஸ்ட்லி பொருட்களை தேடி தேடி வாங்கி வந்து கொடுக்கும் பழக்கம் அவருக்கு உண்டு.

அதன் பின் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்த போது அவர் அமெரிக்காவில் ஆரம்பிக்க இருந்த நடனப் பள்ளிக்கு சில கோடிகளை இழந்தார் என்று பேசப்பட்டது..

உதயநிதியும் விரட்டி விரட்டி காதலித்தார். ஆனால் பட்டும் படாமல் பழகி விட்டு கழண்டு கொண்டார் என்கிறார்கள்.

அதன் பின் வெறுத்து போய் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். மீண்டும் தமிழ் படங்களில் பிசியானார்.

அப்போது நானும் ரவுடிதான் படத்தில் கமிட் ஆக படம் முடிவதற்குள் அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

இப்போது காதலனுக்காக சொந்த படம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சொந்த படம் நன்றாக நடந்து முடிந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தினாலும்

இன்னொரு புறம் படம் ஏதாவது ஆனால் சம்பாதித்த மொத்த பணமும் போய் விடும் என்று பதறுகிறார்கள் அவரின் நண்பர்கள்.

பாவம் தான்..!
மேலும் வாசிக்க…

இந்த 'குயில்' இனி பாடாது - திரையுலகில் அதிர்ச்சி..!!

10:46 PM |
பிரபல பின்னணி பாடகி ஜானகி கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாக உள்ளது. அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது.

1957ம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு படம் மூலம் பாடகியானவர் எஸ். ஜானகி. சுமார் 60 ஆண்டுகளாக பாடி வரும் அவர் 10 கல்பனகல் என்ற மலையாளப் படத்திற்காக ஒரு தாலாட்டுப் பாடலை பாடியுள்ளார். மலையாள தாலாட்டுப் பாடல் தான் நான் பாடிய கடைசி பாட்டு. அதன் பிறகு நான் படங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ பாட மாட்டேன்.

எனக்கு வயதாகிவிட்டது. பல மொழிகளில் பாடிவிட்டேன். இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று ஜானகி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளவர் ஜானகி. அது ஏன் கடைசியாக மலையாள பாடல் என்று கேட்டதற்கு, நானாக தேர்வு செய்யவில்லை. அதுவாக நடந்துள்ளது.

இசை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த வேளையில் என் மனதுக்கு நெருக்கமான தாலாட்டு பாடலே என்னை தேடி வந்துள்ளது என்கிறார் ஜானகி. ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் வந்த தந்தையும் யாரோ என்ற பாடல் தான் ஜானகி கடைசியாக பாடிய தமிழ் பாடல் ஆகும்.

ஜானகி எஸ்.பி.பி. ஜோடிக் குரல் பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. இந்நிலையில் ஜானகியின் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

இருமுகன் விமர்சனம் - Irumugan Review

11:11 PM |
நடிகர்கள் : விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, ரித்விகா, பாலா, கருணாகரன் மற்றும் பலர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : ஆர்டி. ராஜசேகர்
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீநிவாசன்
இயக்கம் : ஆனந்த் சங்கர்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : ஷிபுதமீன்ஸ்

கதைக்களம்…

ஒரு 75 வயது முதியவர் தனி ஆளாக இந்தியன் எம்பஸியின் அலுவலக ஊழியர்களை தாக்குகிறார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகிறது.

அவரால் எப்படி சாத்தியமானது? அவர் பயன்படுத்திய ஹின்ஹேலரில்  இவ்வளவு பெரிய சக்தி உருவானது எப்படி? என அறிய விக்ரமின் உதவியை நாடுகின்றனர்.

விக்ரமை நாட என்ன காரணம்? அவரின் பிளாஷ்பேக் என்ன? அந்த ஹின்ஹேலரி பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டர்களில் தன்னை மீண்டும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

உடல் அமைப்பில் மாற்றம் இல்லையென்றாலும் உடல் அசைவில் மாற்றம் செய்து ரசிக்க செய்திருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்கிறார். ஹின்ஹேலரை முகர்ந்த பின் வரும் சண்டைகளில் கூடுதல் பலம் தெரிகிறது.

லவ் கேரக்டரில் ஜொலிக்கிறார் விக்ரம். ஆனால் வளவளவென பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது.

வெறும் கிளாமர் மட்டுமில்லை தன்னாலும் ஆக்ஷனிலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நயன்தாரா.

இவரின் கேரக்டர் ஜஸ்ட் ஒரு பாடலில் முடிந்துவிடுகிறதே என் சோர்வடையும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் வந்து சூடேற்றுகிறார்.

திறமையான நடிகை நித்யா மேனனை இதில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவர் இறக்கும்போது கண்கலங்க வைக்கிறார்.

கபாலி ரித்விகாவின் நிலைமை அந்தோ பரிதாபம்.

நாங்களும் இருக்கிறோம் என நாசர், கருணாகரன், தம்பிராமையா வந்து செல்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் படம் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் ஒரு மெலோடி தேவையா?

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா சிறைச்சாலை முதல், ஹேலேனா பாடல்கள் வரை கண்களுக்கு விருந்து.

படத்தின் ப்ளஸ்…

விக்ரமின் இரு மாறுபட்ட நடிப்பு

வித்தியாசமான வில்லன் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள்

மெடிக்கல் துறை மற்றும் எக்ஸ்போர்ட் துறையில் நடக்கும் ஊழல்களை சுட்டி காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்….

லவ்வுல்ல சருக்கலாம். இந்த லவ்வையே சருக்க வச்சிட்ட போன்ற வசனங்கள் அடிக்கடி வருவது சலிப்பை தட்டுகிறது.

அகிலன் மற்றும் லவ் – இரு குரலிலும் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

இன்று செல்போன் உபயோகிப்பவர்கள் பாஸ்வேர்ட்டு போட்டு லாக் செய்துதான் வைக்கின்றனர். ஆனால் விக்ரம் ஈசியாக மற்றவரின் போனை எடுத்து பேசுவது எப்படி எனத் தெரியவில்லை.

முதல்பாதி விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இந்த இருமுகனுக்கு ஹின்ஹேலரை விட எக்ஸ்ட்ரா பவர் கிடைத்திருக்கும்.

இயக்குனர் பற்றி…

அரிமா நம்பியில் கவனம் ஈர்த்த ஆனந்த் சங்கர் இதில் வித்தியாசமான கதையை கையாண்டு இருக்கிறார்.

ஸ்பீடு ஹின்ஹேலர் என்ற புதிய டெக்னிக்கை சொல்லி, அதற்கு ஹிட்லரின் வரலாறையும் சொல்லியிருப்பது கவனிக்க வைக்கிறது.

ஒரு ஸ்டைலிஷ்ஷான கதையை சில லாஜிக் மீறல்களோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இருமுகன்… ஸ்பீடு மகன்
மேலும் வாசிக்க…

நயன்தாரா சினிமாவுக்கு வர முதல் செய்த தொழில் என்ன தெரியுமா?

11:00 PM |
மேலும் வாசிக்க…

நயன்தாராவால் பலர் அச்சத்தில்..!!

12:47 AM |
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளது தயாரிப்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளிலும் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வருகிறார்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் 40 மற்றும் 50 லட்சங்களாகதான் இருந்தது. சில படங்களிலேயே அது ரூ.1 கோடியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த ‘மாயா’,‘நானும் ரவுடிதான்’, ‘தனி ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ உள்ளிட்ட படங்கள் வசூலை குவித்தன. கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா, ஜீவாவாவுடன் நடிக்கும் திருநாள் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நயன்தாராவை அணுகி முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர கால்ஷீட் கேட்டதாகவும் அந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பதறி போன தயாரிப்பாளர் நடிகையை மாற்றும் யோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற நடிகைகளின் அதிகபட்ச சம்பளம் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுக்கு ஆபாச மிரட்டல் செய்த தெலுங்கு ஹீரோவால் பரபரப்பு..!!

12:34 AM |
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஆபாசமாக மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆபாச மிரட்டல்களின் பின்னணியில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்த நடிகரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க நயன்தாரா தரப்பு முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது.  

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்க பிரபல தெலுங்க நடிகர் ஒருவர் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

 ஆனால், நயன்தாரா திடீரென்று மைக்கை வாங்கி இந்த விருதை இயக்குனரும், தன்னுடைய காதலருமான விக்னேஷ் சிவன் கையால் வாங்க விரும்புவதாக கூறினார். இது அந்த தெலுங்கு நடிகருக்கு அவமானமாய் போய்விட்டதாக கருதி அவர் தான் இந்த ஆபாச மிரட்டலின் பின்னணியில் இருக்கிறார் என சந்தேகிக்கின்றனர்.
மேலும் வாசிக்க…

உண்மையா நயன்தாராவுக்கு காதலனே கிடையாதாம்..!!

1:40 AM |
தமிழ் சினிமாவின் ஹாட் குயின் நயன்தாரா. இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் ஜோடி சேர்ந்து தான் நடித்திருக்கிறார்.

தற்போது முதன்முறையாக ஜோடி இல்லாமல் சோலோவாக டோரா படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இப்படத்தில் திகில், மர்மம், சஸ்பென்ஸ் ஆகியவை ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் என்றும் ரொமான்ஸ், காமெடிக்கு படத்தில் இடமில்லை என்று இயக்குனர் தாஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் இந்த படத்தில் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com