கடந்த வாரம் அந்த புலானாய்வு வார இதழ் அந்த செய்தியை வெளியிட்ட போது மொத்த தமிழ் நாடும் அதிர்ந்தே போனது. சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம் முதலில் தற்கொலை என்று போலீஸ் கூறியது.
ஆனால், போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் தெளிவாக கூறி விட்டது. கை நரம்பை கட் பண்ணிக் கொண்டதால் தான் மரணம் என்று கூறி விட்டார்கள்.
அதே நேரம் அறையில் நிறைய மது புட்டிகளும்..சிகெரெட் பாக்கெட்களும் குவிந்து கிடந்திருகிறது.அது மட்டுமல்ல நிறைய பேர் சேர்ந்து குடித்ததற்கான தடயங்களும் சிக்கி இருக்கிறது.
மெல்ல அக்கம் பக்கத்தினரிடம் போலீஸ் விசாரணையில் இறங்கினர். நடிகை சபர்ணாவிற்கும் ஒரு ஸ்டண்ட் நடிகருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருகிறது.
அவர் தான் சபர்ணாவின் பெற்றோர்களிடம் இருந்து சபர்ணாவை பிரித்து தனியே வீடு எடுத்துக் கொடுத்துள்ளார்.
செலவு வாடகை போன்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டார் என்கிறார்கள். சமீப காலமாகவே சபர்ணாவிற்கு நடிக்க வாய்ப்பு ஏதும் இல்லையாம்.
அதனால் முழுக்கவே அந்த ஸ்டண்ட் நடிகரை நம்பியே காலம் தள்ளியுள்ளார் சபர்னா. அடிக்கடி டெல்லி போவாராம் அதற்கான செலவுகளுக்கும் அந்த நடிகரையே நம்பியுள்ளார்.
சபர்ணா இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு அந்த நடிகர் நண்பர்களோடு சபர்ணா வீட்டிற்கு வந்துள்ளார். விடிய விடிய மது விருந்து அமர்க்களப்பட்டது என்கின்றனர் அக்கம் பக்கத்தினர்.
போலீஸ் அந்த நடிகரை நெருங்கி விட்டது என்கின்றனர். சபர்ணா செத்துப் போவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக ஒரு போன் வந்துள்ளது.
அதன் பின்னர் தான் சபர்ணா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
பரிதாபம் தான்.!
Tags:
Cinema
,
சபர்ணா
,
சினிமா
,
தற்கொலை
,
பகீர் தகவல்
,
மரணம்
,
ஸ்டண்ட் நடிகர்