ஐஸ்வர்யா தனுஷ் ஒரு திரைப்பட இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும்..! ஆனால், அவர் ஒரு சிறந்த பரத நாட்டிய கலைஞர் என்பது பலருக்கு தெரியாது..!
பின்னணிப்பாடகர் என்பது கூட பலருக்கு தெரியாது.! அதே நேரம் தன்னை சிறந்த எழுத்தாளராகவும் நிரூபிக்க முடிவு செய்து விட்டார்.
ஆமாம். தனது சுய சரிதை ஒன்றை எழுதி முடித்து விட்டார். அந்த நூலுக்கு ‘ஸ்டேன்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்’ என்று பெயர் இட்டுள்ளார்.
அதில் தனது திருமண வாழ்க்கை வரை கடந்து வந்த பாட்டை பற்றியும் நல்லவர்கள்..கெட்டவர்கள்..நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்..அப்பா,அம்மா தங்கையின் அளப்பரிய பாசம்..என தனது அனுபவங்களை அவரது நடையில் எழுதியுள்ளார்.
கேள்விப்பட்ட ‘அந்த’ வில்லங்க நடிகர் ஆடிப் போய் இருகிறாராம்.! புத்தகம் வருகிற டிசம்பர் 12 சூப்பர்ஸ்டார் பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது.
Tags:
Cinema
,
ஐஸ்வர்யா
,
சினிமா
,
சுய சரிதை
,
தனுஷ்
,
துரோகம்
,
வில்லங்க நடிகர்