விஜய் நடிக்கும் தெறி, ரஜினி நடிக்கும் கபாலி என இரு பெரிய நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார், தயாரிப்பாளர் தாணு.
தெறி முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. கபாலியின் இரண்டாம்கட்ட மலேசிய படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிப்ரவரி 1 முதல் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சோழிங்கர் நகரில் ரஜினி ரசிகர்கள் நடத்திய, ’மலரட்டும் மனிதநேயம்’ நிகழ்ச்சியில் தாணு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ’எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் பரவாயில்லை, கபாலியின் அமெரிக்க உரிமை மட்டும் 8.50 கோடிகளுக்கு விலை போயுள்ளது’ என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. என்னுடைய தயாரிப்பில் நடிக்கும் பிற நடிகர்களின் படங்கள் 2 கோடிக்குகூட விலை போகவில்லை என்றும் கூறினார்.
தாணு தயாரிப்பில் தற்போது நடித்துவரும் இன்னொரு நடிகர் விஜய். அவரது ’தெறி ’ அமெரிக்காவில் இரண்டு கோடிக்குக் கூட, வொர்த் இல்லை என்று தாணுவே பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உண்மையா இளைய தளபதி…?
Tags:
Cinema
,
Kabali
,
Rajini
,
Theri
,
Vijay
,
கபாலி
,
சினிமா
,
தெறி
,
ரஜினி
,
விஜய்