Kabali Tamil Movie | Official Teaser | Rajinikanth | Radhika Apte | Pa Ranjith

10:46 PM |
மேலும் வாசிக்க…

சரியாக படம் பிடிக்காததால் மீண்டும் படமாகும் கபாலி..!!

11:03 PM |
ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. இதில் மலேசியா சிறையில் ரஜினி இருப்பதுபோல் ஒரு முக்கியமான போர்ஷன் படமாக்கப்பட்டது.

தற்போது இதன் ரஷ் பார்த்த இயக்குனருக்கு இதில் திருப்தியில்லையாம். எனவே இந்த போர்ஷனை மட்டும் அவர் மீண்டும் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். எனவே இதற்காக கபாலி படக்குழு விரைவில் மீண்டும் மலேசியா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

நான்தான் எனக்கு பிடித்தவற்றை நான் பன்னுறன் உங்களுக்கு என்ன -ரதிகா ஆப்தே..!!

1:34 AM |
தோனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரதிகா ஆப்தே. சமீபத்தில் வலைதளங்களில் இவரது ஆபாச படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதில் இருப்பது நான் இல்லை என்று ராதிகா ஆப்தே மறுப்பு தெரிவித்தார். தற்போது ஹாலிவுட் படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து கோடம்பாக்கத்தை அதிர வைத்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறும் போது, ஹாலிவுட் படம் ஒன்றில் காட்சிக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாக நடித்தது உண்மைதான். அந்தப் படம் இந்தியாவில் வெளியாகும்போது, நிர்வாணக் காட்சிகள் நீக்கப்பட்டு வெளியாகும் என்றார். அப்படியென்றால் இதற்குமுன் வெளியான நிர்வாணப் புகைப்படமும் இவருடையதுதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க…

சூப்பர் ஸ்டார் படத்திற்காக இதுக்கூட செய்யவில்லை என்றால் எப்படி- அதிர வைத்த பிரபல நடிகை..!!

10:14 PM |
சூப்பர் ஸ்டார் படங்களின் எதிர்ப்பார்ப்பு தமிழகத்தில் எப்படியிருக்கும் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவரின் கபாலி படத்திற்கு தற்போதே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது.

இப்படத்தில் தன்ஷிகா தாய்லாந்து நாட்டை சார்ந்த ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார். இப்படத்திற்காக தன் கூந்தலை வெட்டி டாம் பாய் லுக்கிற்கு வந்துள்ளாராம்.

மேலும், இதுப்பற்றி அவரிடம் கேட்க சூப்பர் ஸ்டார் படத்திற்காக இதுக்கூட செய்யவில்லை என்றால் எப்படி என கூலாக சொல்கிறாராம்.
மேலும் வாசிக்க…

இனி ரஜினி படங்கள் வராதாம்..!!

12:17 AM |
ரஜினி நடித்து வரும் கபாலி படம் சென்ற வருடம் மலேசியாவில் படமாக்கியபோது பல்வேறு புகைப்படங்கள் வெளியானதால் படக்குழு கடும் அதிருப்தியில் இருந்தது.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் படங்களை யாரும் வெளியிடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
ரஜினி மீண்டும் சென்ற வாரம் மலேசியா சென்றபோது சில படங்கள் வைரலாக பரவியது.

இப்போது அங்கு எடுக்கவேண்டிய பகுதிகள் அனைத்தும் படமாக்கபட்டுவிட்டதால் படக்குழு நேற்று இந்தியாவுக்கு வந்துவிட்டது.
அதனால் இனி கபாலி படம் பற்றிய புகைப்படங்கள் இனி வராது என தெரிகிறது.

மேலும் ரஜினி அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ள 2.0 படம் அடுத்த வாரம் தொடங்குகிறதாம். கபாலி போல் படங்கள் எதுவும் லீக் ஆக கூடாது என்பதற்காக, கடும் உத்தரவுகளை பிறப்பிதுள்ளாராம் ஷங்கர்.
நடிகர்கள் கூட செல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லையாம்.
மேலும் வாசிக்க…

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி..!!

1:10 AM |
சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க இம்மாதம் 24ம் தேதி கபாலி படத்தின் டீசர் வெளிவருவதாக இருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், படப்பிடிப்பு பிஸியால் தற்போதைக்கு டீசர் வேண்டாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.

இதனால், டீசர் சொன்ன தேதியில் வருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இச்செய்தி ரஜினி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

சென்னை விமான நிலையத்தில் தவித்த ரஜினிகாந்த்..!!

1:45 AM |
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை நாளை முதல் சிங்கப்பூரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக ரஜினி இன்று சென்னை விமான நிலையம் வந்திருந்தார். ஆனால் வரும் அவசரத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை வீட்டிலேயே வைத்து விட்டு வந்துள்ளார். இதனால் சிறிது நேரம் அவர் விமான நிலையத்திலேயே தவித்து போனார். பிறகு அவரது உதவியாளர் சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்துள்ளார்.
மேலும் வாசிக்க…

Kabali - Official Teaser Superstar Rajinikanth

12:33 AM |
 இணையத்தில் பரவி வரும் கபாலி திரைப்படத்தின் டீசர்..!!

மேலும் செய்திகள் 

'GV பிரகாஷ் 36 டேக் வாங்கிய உதட்டு முத்தக் காட்சி இதுதான்! வீடியோ 

0.57-0.59 செக்கன் காட்சியில் கண் தெரியாத குழந்தையை கோப்பையால் தள்ளிய சுருதி

விஜய், அஜித் யார் முதல் சாய்ஸ்? கீர்த்தி சுரேஷ் அதிரடி பதில்..!!

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய் படம்..!!






மேலும் வாசிக்க…

விஜய்யை மட்டம் தட்டிய தாணு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

1:53 AM |
விஜய் நடிக்கும் தெறி, ரஜினி நடிக்கும் கபாலி என இரு பெரிய நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார், தயாரிப்பாளர் தாணு.

தெறி முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. கபாலியின் இரண்டாம்கட்ட மலேசிய படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிப்ரவரி 1 முதல் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில் சோழிங்கர் நகரில் ரஜினி ரசிகர்கள் நடத்திய, ’மலரட்டும் மனிதநேயம்’ நிகழ்ச்சியில் தாணு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ’எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் பரவாயில்லை, கபாலியின் அமெரிக்க உரிமை மட்டும் 8.50 கோடிகளுக்கு விலை போயுள்ளது’ என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. என்னுடைய தயாரிப்பில் நடிக்கும் பிற நடிகர்களின் படங்கள் 2 கோடிக்குகூட விலை போகவில்லை என்றும் கூறினார்.

 தாணு தயாரிப்பில் தற்போது நடித்துவரும் இன்னொரு நடிகர் விஜய். அவரது ’தெறி ’ அமெரிக்காவில் இரண்டு கோடிக்குக் கூட, வொர்த் இல்லை என்று தாணுவே பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 உண்மையா இளைய தளபதி…?
மேலும் வாசிக்க…

ரஜினியின் ஈர்ப்பால் மட்டுமே சினிமாவுக்கு வந்தேன்: சிவகார்த்திகேயன்..!!

11:29 PM |
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ரஜினி முருகன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் தான் தற்போது வெளியாகியுள்ள படத்திற்கு ரஜினி முருகன் பெயரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. தற்போது ரஜினியை பற்றி மேலும் சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது,நான் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயதில் இருந்து ரஜினி படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வர முக்கிய காரணமே ரஜினிதான்.

என் வாழ்க்கையில் என் அம்மா எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு ரஜினியும் என் மனதில் இருக்கிறார். தற்போது ரஜினி நடிக்கும் படங்களான கபாலி, 2.ஓ படங்கள் வெளியாகும் போது எங்கிருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேன் என்றார்.
மேலும் வாசிக்க…

Kabali New Title

10:09 AM |
Superstar Rajinikanth’s Kabali is progressing at a rapid pace in Malaysia and soon, the team will be leaving to Singapore and Thailand.

Just like how Kabali is doing great pre-business in Tamil Nadu, the Telugu version too has great expectations. If sources from insiders are to be believed, the Telugu version of Kabali has been titled as Mahadev.

The reason said that Kabali is an alternative name of Lord Shiva, similarly Mahadev means Shiva in both Telugu and Sanskrit. Kabali is directed by Ranjith, which also has Radhika Apte, Dhanshikaa, Dinesh, John Vijay Mime Gopi and Kalaiarasan in important roles.
மேலும் வாசிக்க…

இதுதான் "கபாலி" கதையா???

6:39 PM |
கபாலி படத்தில் மகளைத் தேடி அலையும் வயதான தாதா வேடத்தில், ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.

இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் மலேசியாவில் நடத்தத் திட்டமிட்ட படக்குழுவினர், அதே போன்று தற்போது மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் வயதான தாதாவாக நடிக்கும் ரஜினி இந்தப் படத்தில் காணாமல் போன தனது மகளைத் தேடி அலைபவராக நடிக்கவிருக்கிறாராம்.

தாதா வாழ்க்கையை விட்டு விலகியிருக்கும் ரஜினி மீண்டும் தனது மகளுக்காக அந்த இருட்டு உலகத்திற்குள் போகிறார். காணாமல் போன மகளை மீட்டாரா, மீண்டும் தாதாவாக மாறினாரா போன்ற கேள்விகளுக்கான விடையாக கபாலி உருவாகி வருகிறது.

ஏற்கனவே படத்தின் இயக்குநர் ரஞ்சித் இந்தப் படத்தில் ரஜினிக்கு பன்ச் வசனங்களோ, காதல் காட்சிகளோ கிடையாது என்று தெரிவித்து இருந்தார்.

ரஞ்சித் சொல்லியதையும் தற்போது வெளியாகி இருக்கும் தகவலையும் வைத்துப் பார்த்தால் ரஜினி, கபாலியில் தனது முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் படத்தின் கதையை மட்டுமே நம்புகிறார் என்று தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டு பன்ச் வசனங்கள், காதல்  காட்சிகள் இல்லாமல் நடிக்கும் ரஜினியைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கபாலி ரஞ்சித்திற்கு ஹாட்ரிக்கை அருள்புரிவாரா?

Tags: Kabali Movie Online , Kabali Vetri Poster , Kabali Poster , கபாலி விமர்சனம் , Kabali Movie Review , Kabali Movie Teaser , Kabali Movie Teaser , Kabali Movie Online HD , கபாலி திரை விமர்சனம்
மேலும் வாசிக்க…

கபாலிக்கு ஃபோட்டோ ஷுட்..!!

8:27 PM |
சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் காலை முதல் நடைபெற்று வரும் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜனி நடிக்கும் கபாலி படத்திற்கான ஃபோட்டோ ஷுட் நடைபெற்று வருகின்றன.
இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபெறும் இந்த ஃபோட்டோ ஷுட் ரசிகர்களும், மற்றவர்களும் நுழைந்து விட முடியாதபடி சிறப்புப் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

இன்று நடைபெறும் ஃபோட்டோ ஷுட்டில் எடுக்கப்படும் புகைப்படங்களுடன் கூடிய கபாலி படத்தின் முதல் பார்வை அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. முதல் படப்பிடிப்பு மலேசியாவில் செப்டம்பர் மாதம்  தொடக்க உள்ளது. ரஜினிகாந்த் வயதான தாதாவாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ரஞ்சித், தான் பார்த்த, கேட்டுப் பழகிய சில விஷயங்களை வைத்தே இந்தக் கதையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

ரஜினி படத்தின் தலைப்பு கபாலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

8:11 AM |
ரஜினி, ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க படக்குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு தலைப்புகளை தேர்வு செய்து வந்தனர்.


இந்நிலையில், முதலில் இப்படத்திற்கு ‘காளி’ என்று பெயர் வைக்கப்போவதாக கூறப்பட்டது. பின்னர், ‘கண்ணபிரான்’ என்ற தலைப்பு தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த இரண்டு தலைப்பையும் புறக்கணித்துவிட்டு ‘கபாலி’ என்று தலைப்பு வைக்கப்போவதாக கூறப்பட்டது.


கடைசியில், இந்த தலைப்பையே ரஜினியின் புதிய படத்திற்கு வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். இதை இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிபடுத்தியுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் இந்த தலைப்பை வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, ரஜினி படம் ‘கபாலி’ என்ற தலைப்புடன் உருவாகவுள்ளது. இப்படத்தில் ரஜினி பிரபல தாதாவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும், தன்ஷிகா, கலையரசன், தினேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com