கபாலி படத்தில் ரஞ்சித் விட்ட சின்னச் சின்ன தவறுகள் பாருங்கள்! வீடியோ

1:53 AM |
மேலும் வாசிக்க…

Kabali Making Video | Rajinikanth | Radhika Apte | Ranjith | Santhosh Narayanan

10:41 PM |
மேலும் வாசிக்க…

ரஜனியை வெறுப்பவர்கள் மட்டும் இந்த வீடியோவைப் பாருங்கள்! கண்ணீர் வரவைக்கும் வீடியோ

2:10 AM |
மேலும் வாசிக்க…

ரஜினிக்கு உதவிய நடிகர் விபத்தில் சிக்கினார்..!!

10:31 PM |
உழைப்பாளி படத்தில் சிவன் வேஷத்தில் ரஜினி ஓடிக்கொண்டிருக்கும் போது, ஒரு ஐயர் அவருக்கு லிப்ட் கொடுத்து காப்பாற்றுவாறே, அந்த ராமகிருஷ்ணனை நினைவிருக்கிறதா.

அதே நடிகர் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த வாகனம் ஒன்று மோதியதில் கீழே விழுந்துள்ளார்.

தலையில் அடிபட்டதால் சற்று தடுமாற்றமான நிலையில் இருந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இப்போது, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.



மேலும் வாசிக்க…

இனி ரஜினி படங்கள் வராதாம்..!!

12:17 AM |
ரஜினி நடித்து வரும் கபாலி படம் சென்ற வருடம் மலேசியாவில் படமாக்கியபோது பல்வேறு புகைப்படங்கள் வெளியானதால் படக்குழு கடும் அதிருப்தியில் இருந்தது.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் படங்களை யாரும் வெளியிடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
ரஜினி மீண்டும் சென்ற வாரம் மலேசியா சென்றபோது சில படங்கள் வைரலாக பரவியது.

இப்போது அங்கு எடுக்கவேண்டிய பகுதிகள் அனைத்தும் படமாக்கபட்டுவிட்டதால் படக்குழு நேற்று இந்தியாவுக்கு வந்துவிட்டது.
அதனால் இனி கபாலி படம் பற்றிய புகைப்படங்கள் இனி வராது என தெரிகிறது.

மேலும் ரஜினி அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ள 2.0 படம் அடுத்த வாரம் தொடங்குகிறதாம். கபாலி போல் படங்கள் எதுவும் லீக் ஆக கூடாது என்பதற்காக, கடும் உத்தரவுகளை பிறப்பிதுள்ளாராம் ஷங்கர்.
நடிகர்கள் கூட செல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லையாம்.
மேலும் வாசிக்க…

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி..!!

1:10 AM |
சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க இம்மாதம் 24ம் தேதி கபாலி படத்தின் டீசர் வெளிவருவதாக இருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், படப்பிடிப்பு பிஸியால் தற்போதைக்கு டீசர் வேண்டாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.

இதனால், டீசர் சொன்ன தேதியில் வருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இச்செய்தி ரஜினி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

ரஜினி முதன் முதலாக செய்த விஷயம்- ஆச்சரியத்தில் கோலிவுட்..!!

9:44 PM |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காட்சிகளுக்காக சமீபத்தில் மலேசியா சென்றார்.

அங்கு அப்துல் மாலிக் என்பவரின் ஷோரூம் ஒன்றை ரஜினிகாந்த் தன் கையால் திறந்து வைத்துள்ளார். இதுநாள் வரை ரஜினி எந்த ஒரு கடையையும் திறந்து வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்துல் மாலிக் தான் கபாலி படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

கமல் சார்னா பயம்... ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிடி

10:31 PM |
மேலும் வாசிக்க…

ரஜினிக்கு லாரன்ஸ் காட்டிய நன்றி விசுவாசம் இப்படியா இருக்கணும்..!!

10:59 PM |
மனித நேயர், மக்கள் பண்பாளர் என்றெல்லாம் ராகவேந்திரா லாரன்ஸ் பற்றி பக்கம் பக்கமாக புகழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் ரஜினியால்தான் அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை அவரும் மறந்திருக்க மாட்டார். அவரை அறிந்தவர்களும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏதோ ஒரு சினிமா ஆபிசில் கார் துடைத்துக் கொண்டிருந்தவரின் டான்ஸ் திறமையை அறிந்த ரஜினி, அவருக்கு தன் சொந்த செலவில் டான்சர் யூனியனில் கார்டு எடுத்துக் கொடுத்து, தனது தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் சங்கத்தில் சேர்த்தும் விட்டார். மெல்ல வளர்ந்து ஆலமரமாகி நிற்கும் லாரன்ஸ் குறித்து ரஜினிக்கும் மகிழ்ச்சிதான்.

காஞ்சனாவின் பொல்லா பொல்லா கலெக்ஷனுக்கு பிறகு, ரஜினியிடமே கால்ஷீட் கேட்ட லாரன்ஸ் “எத்தனை கோடி வேணும்னாலும் சம்பளம் கேளுங்க தர்றேன். ஆனால் ஒன்று… அந்த படம் என்னோட பேனர்ல தயாரிக்கிற படமா இருக்கணும்” என்று கண்டிஷன் வைத்ததாகவும் ஒரு பேச்சு இருக்கிறது கோடம்பாக்கத்தில். அதோடு “படத்தில் நானும் ஒரு ஹீரோவாக நடிப்பேன்” என்றும் அடம் பிடித்தாராம். இதெல்லாம் சில மாதங்களுக்கு முன் நடந்த கதை. போகட்டும்… இப்போது என்னவாம்?

அண்மையில் வேலூரில் ரஜினிக்காக அவரது ரசிகர்கள் ஓன்று கூடி மனிதநேய மாநாடு ஒன்று நடத்தினார்கள் அல்லவா? அதை நடத்திய வேலூர் ரவி, சமீபத்தில் ரஜினியை சந்தித்தாராம். அப்போது இந்த நிகழ்ச்சி பிரமோஷனுக்காக சில வார்த்தைகள் பேசித்தரும்படி லாரன்சிடம் கேட்டதாகவும் அவர் தங்களை இங்கு வா அங்கு வா என்று பல நாட்கள் அலைகழித்ததாகவும் கூறினாராம். அதற்கு ரஜினியின் ரீயாக்ஷன்?

அண்ணாந்து வானத்தை பார்த்து சிரித்ததை தவிர அவர் வேறென்ன செய்திருக்கப் போகிறார்? எல்லாம் அவன் செயல்!
மேலும் வாசிக்க…

ரஜினியால் பாதியில் நின்ற விஜய் படம்..!!

10:16 PM |
தமிழ் சினிமாவில் இன்று எல்லோரும் விரும்பும் ஓர் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் தான். ஆனால், இன்றும் அதை ரஜினி விட்டுக்கொடுப்பதாக இல்லை.

இந்நிலையில் இந்த இடத்தில் பல கருத்துக்கணிப்பில் வென்றவர் இளைய தளபதி விஜய், இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஐ படத்திற்கு பிறகு விரும்பியுள்ளார்.

அப்படத்தின் முதற்கட்ட வேலைகள் கூட தொடங்க, ரஜினி, ஷங்கரை அழைத்து ஒரு படம் செய்யலாம் என கேட்க, மறுக்க முடியாமல் ஷங்கர் விஜய் படத்தை ட்ராப் செய்துள்ளார். இந்த தகவலை தமிழகத்தில் முன்னணி ஆங்கில் நாளிதழ் ஒன்று அதன் இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

Kabali - Official Teaser Superstar Rajinikanth

12:33 AM |
 இணையத்தில் பரவி வரும் கபாலி திரைப்படத்தின் டீசர்..!!

மேலும் செய்திகள் 

'GV பிரகாஷ் 36 டேக் வாங்கிய உதட்டு முத்தக் காட்சி இதுதான்! வீடியோ 

0.57-0.59 செக்கன் காட்சியில் கண் தெரியாத குழந்தையை கோப்பையால் தள்ளிய சுருதி

விஜய், அஜித் யார் முதல் சாய்ஸ்? கீர்த்தி சுரேஷ் அதிரடி பதில்..!!

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய் படம்..!!






மேலும் வாசிக்க…

ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

11:39 PM |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் ரஜினியின் மீது ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

சென்னையில் ரஜினிக்கு ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளி இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பள்ளி நிலம் விவகாரமாக சென்னை வெங்கடசவரலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி ரஜினி மற்றும் லதா ரஜினி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

ரஜினி, ராஜமௌலி ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..!

8:50 PM |
பத்ம விருதுகளை அறிவிக்கும் குழு, பாகுபலி இயக்குனர் எஸ். ராஜமௌலி, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை இன்று அறிவித்துள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

விஜய்யை மட்டம் தட்டிய தாணு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

1:53 AM |
விஜய் நடிக்கும் தெறி, ரஜினி நடிக்கும் கபாலி என இரு பெரிய நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார், தயாரிப்பாளர் தாணு.

தெறி முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. கபாலியின் இரண்டாம்கட்ட மலேசிய படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிப்ரவரி 1 முதல் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில் சோழிங்கர் நகரில் ரஜினி ரசிகர்கள் நடத்திய, ’மலரட்டும் மனிதநேயம்’ நிகழ்ச்சியில் தாணு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ’எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் பரவாயில்லை, கபாலியின் அமெரிக்க உரிமை மட்டும் 8.50 கோடிகளுக்கு விலை போயுள்ளது’ என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. என்னுடைய தயாரிப்பில் நடிக்கும் பிற நடிகர்களின் படங்கள் 2 கோடிக்குகூட விலை போகவில்லை என்றும் கூறினார்.

 தாணு தயாரிப்பில் தற்போது நடித்துவரும் இன்னொரு நடிகர் விஜய். அவரது ’தெறி ’ அமெரிக்காவில் இரண்டு கோடிக்குக் கூட, வொர்த் இல்லை என்று தாணுவே பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 உண்மையா இளைய தளபதி…?
மேலும் வாசிக்க…

வரலட்சுமிக்கு ரஜினிகாந்த் பாராட்டு..!!

1:19 AM |
தாரை தப்பட்டை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. இளையராஜாவின் 1000மாவது படம் என்ற சிறப்புடன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. படத்திற்க கடும் விமர்சனங்கள் எழுந்து நிலையில் வசூல் ரீதியாக பொங்கல் படங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பாலா, இளையராஜா, சசிகுமார் ஆகியோர் விமர்சகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டாலும் படத்தில் கதாநாயகியாக நடித்த வரலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒரு கரகாட்டக் கலைஞராக அப்படியே வாழ்ந்து காட்டினார் என்ற பாராட்டு அவருக்கு அதிகமாகக் கிடைத்து வருகிறது. அவருடைய நடிப்பும், கிளாமரும்தான் படத்தைக் காப்பாற்றியது என்று வினியோகஸ்தர்களே தெரிவித்தார்கள்.

திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரஜினிகாந்தும் வரலட்சுமியைப் பாராட்டியுள்ளார். இது குறித்து வரலட்சுமி, “ஓ மை காட், நான் இப்போது மிக மிக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். சூப்பர் ரஜினிகாந்த் தற்போதுதான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சார். மிகவும் அற்புதமாக உணர்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

ரஜினியின் ஈர்ப்பால் மட்டுமே சினிமாவுக்கு வந்தேன்: சிவகார்த்திகேயன்..!!

11:29 PM |
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ரஜினி முருகன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் தான் தற்போது வெளியாகியுள்ள படத்திற்கு ரஜினி முருகன் பெயரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. தற்போது ரஜினியை பற்றி மேலும் சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது,நான் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயதில் இருந்து ரஜினி படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வர முக்கிய காரணமே ரஜினிதான்.

என் வாழ்க்கையில் என் அம்மா எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு ரஜினியும் என் மனதில் இருக்கிறார். தற்போது ரஜினி நடிக்கும் படங்களான கபாலி, 2.ஓ படங்கள் வெளியாகும் போது எங்கிருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேன் என்றார்.
மேலும் வாசிக்க…

எந்திரன் 2.ஓ ரிலீஸ் எப்போது? உண்மையைச் சொன்ன அக்‌ஷய் குமார்

6:03 AM |
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் 2.0. ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிக்கும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். முதல் முறையாக நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எனலாம்.

இதற்கு முன் கோவிந்தா 3 ரோஸஸ் படத்தில் நடித்தாலும் சிறப்புத் தோற்றத்திலேயே நடித்தார் எனலாம்.   அந்த வகையில் அக்‌ஷய் குமார் படு ஹேப்பியாக இருக்கிறார். படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டின் முதல் நடிகராக தமிழ் சினிமாவில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனையோ ஹீரோக்கள் அங்கே போனீர்கள், ஆனால் நீங்கள் இந்த வாய்ப்பைப் பெறவில்லை.

தென்னிந்திய நடிகைகளை மட்டுமே பாலிவுட்டின் படங்களில் பயன்படுத்தினார்கள். ஆனால் நான் தான் அங்கே நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.   இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். எனக்குப் படத்தின் கதை மிகவும் பிடித்துப்போனது. மேலும் ஒரே ஒரு சின்ன ஹிண்ட் கொடுக்க விருப்பப்படுகிறேன். தி ரோபாட் 2.0 படம் கண்டிப்பாக உங்களுக்கு மெஸேஜ் கொடுக்கும் படம்.உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லிக்கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்தப் படம் இரு மொழிப் படமா என்பது குறித்து இவ்வளவு சீக்கிரம் பேசுவது சரியாக இருக்காது. படம் வெளியாக இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. இன்னும் ஓரு மாதம் கழித்தே நானும் படப்பிடிப்பில் இணையவிருக்கிறேன். என 2.0 படம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் படத்தின் வில்லன் தோஸ்த் அக்‌ஷய் குமார்
மேலும் வாசிக்க…
2015 Thediko.com