தாரை தப்பட்டை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. இளையராஜாவின் 1000மாவது படம் என்ற சிறப்புடன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. படத்திற்க கடும் விமர்சனங்கள் எழுந்து நிலையில் வசூல் ரீதியாக பொங்கல் படங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
பாலா, இளையராஜா, சசிகுமார் ஆகியோர் விமர்சகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டாலும் படத்தில் கதாநாயகியாக நடித்த வரலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒரு கரகாட்டக் கலைஞராக அப்படியே வாழ்ந்து காட்டினார் என்ற பாராட்டு அவருக்கு அதிகமாகக் கிடைத்து வருகிறது. அவருடைய நடிப்பும், கிளாமரும்தான் படத்தைக் காப்பாற்றியது என்று வினியோகஸ்தர்களே தெரிவித்தார்கள்.
திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரஜினிகாந்தும் வரலட்சுமியைப் பாராட்டியுள்ளார். இது குறித்து வரலட்சுமி, “ஓ மை காட், நான் இப்போது மிக மிக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். சூப்பர் ரஜினிகாந்த் தற்போதுதான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சார். மிகவும் அற்புதமாக உணர்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
Tags:
Bala
,
Cinema
,
Rajini
,
Varalaxmi
,
இளையராஜா
,
சசிகுமார்
,
சினிமா
,
தாரை தப்பட்டை
,
பாலா
,
வரலட்சுமி