தெறி தயாரிப்பாளர் தாணு கைது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

10:48 PM |
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் தாணு. இவர் தயாரிப்பில் அண்மையில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு மீது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் டேவிட் என்பவர் 2 லட்சம் கடனை திருப்பி தரக்கோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தாணு பணத்தை திருப்பி தராததால் சென்னை நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வரும் 28ம் தேதிக்குள் தாணுவை கைது செய்ய போலீசுக்கு நீதிபதி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க…

Theri unseen video Theri Bloopers..!!

12:30 AM |
மேலும் வாசிக்க…

தெறியில் விஜய்யுடன் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது - பிரபல காமெடி நடிகர்

1:55 AM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தெறி. இப்படம் தான் விஜய் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் தந்த படம்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் யோகி பாபு, கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

இதை யோகி பாபு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், மேலும், எப்படியும் மீண்டும் அட்லீ சார் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

வில்லங்கத்தில் முடிந்தது விஜய் படம் அஜீத்தோடு இணையும் அட்லீ..!!

10:19 PM |
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன்… இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது.

அஜீத்தின் ஆடிட்டர்தான், அட்லீயின் அப்பா!

தெறி படம் வெளி வருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்தார் விஜய். “என் பிறந்த நாள் கிஃப்ட் இதுதான். சீக்கிரம் ஒரு கதையை சொல்லுங்க. உங்களுக்கு என் கால்ஷீட் எப்பவும் உண்டு!” கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஒரு படைப்பாளிக்கு இதுதானே பேரின்பம்? நிஜமாகவே ஆனந்த நிலைக்கு ஆளானார் அட்லி.

தெறி படம் இருவரும் நினைத்தது போலவே செம ஹிட். நடுவில் பரதன் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அட்லி இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப் போகிறார் என்று ஊர் உலகமே நினைத்திருக்க, யாருக்கும் தெரியாமல் சைலன்ட்டாக நடந்தது அந்த பேச்சு வார்த்தை.

அட்லீயை வரச்சொல்லி கதை கேட்டிருக்கிறார் அஜீத். அந்தக் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, தற்போது சிறுத்தை சிவா இயக்கப் போகும் படம் முடிந்த கையோடு இந்த படத்தை ஸ்டார்ட் பண்ணலாம் என்று கூறிவிட்டாராம்.

விஜய், அவரை விட்டால் அஜீத், இவர்கள் இருவரையும் விட்டால் ரஜினி என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் உட்சபட்ச கனவாக இருக்க முடியும். அட்லீக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்புக்கு பின்னால் என்ன இருக்கிறது. அவர் வைத்திருந்த கதையா? அல்லது அதையும் தாண்டிய சிபாரிசா? அல்லது… அட்லி மீது விஜய் வைத்திருந்த நம்பிக்கையா?

எதுவும் புரியவில்லை. “இதெல்லாம் பொய்… தவறான தகவல்” என்று இப்போதைக்கு மறுப்பு வரலாம். ஆனால் உண்மை, எல்லா சமாளிப்ஸ்களையும் விட வலிமையானதாச்சே?
மேலும் வாசிக்க…

நைனிகாவை தொடர்ந்து தளபதி-60யிலும் கலக்கவிருக்கும் ஒரு சுட்டி பாப்பா- புகைப்படம் உள்ளே

11:53 PM |

தெறி படத்தில் விஜய்யை தாண்டி நம் அனைவரையும் கவர்ந்தது தெறி பேபி நைனிகா தான். விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நைனிகா போல் இந்த படத்திலும் நடிக்க ஒரு சுட்டி பாப்பா தேவைப்பட்டாராம், இதற்காக பேபி மோனிகா சிவா என்பவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் இதுமட்டுமின்றி சங்குசக்கரம், கட்டப்பாவை காணோம் படத்திலும் நடித்து வருகிறாராம்.

மேலும் வாசிக்க…

விஜய் வீட்டில் குட்டி பேபி நைனிகா என்ன செய்ரார் தெரியுமா???

11:45 PM |
விஜய்யுடன் தெறி படத்தில் நடித்ததன் மூலம் ஒரே நாள் பிரபலம் என்ற ரேஞ்சில் வலம் வருகிறார் பேபி நைனிகா. சுட்டிதனமான இவருடைய நடிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.

இதனால் அடுத்தடுத்த பல பேர் கால்ஷீட் வேணும் என்று நடிகை மீனா வீட்டில் தவம் கிடக்கிறார்களாம். அவர்களுக்கு எல்லாம் மீனா சொல்லும் ஒரே பதில், அவ படிக்கணும்.

தற்போது சம்மர் வெக்கேஷனுக்கு நைனிகாவின் ஜாலி ஸ்பாட் எது தெரியுமா? விஜய்யின் வீடுதானாம். என்னை விஜய் அங்கிள் வீட்ல விட்ருங்க என்று அடம் பிடித்து ஓடிவிடுகிறாராம் நைனிகா.
மேலும் வாசிக்க…

வியப்பில் ஆழ்த்தி தெறிக்கவிட்ட 'தெறி' Action காட்சிகளின் பின்னணி ரகசியம் வெளியாகியது..!!

10:24 PM |
மேலும் வாசிக்க…

தெறி ஸ்டைலை விஜய் 60-யிலும் தொடரும் விஜய்..!!

10:16 PM |
பரதன் இயக்கும் விஜய் 60 படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இதில் ஒரு கெட்டப்பில் தெறி படத்தில் வரும் போனி ஸ்டைலில் வருகிறாராம் விஜய்.

தெறியில் இந்த கெட்டப்புக்கு கிடைத்த வரவேற்பு தான் அவரை விஜய் 60-யிலும் இதே கெட்டப்பில் வர வைக்கிறதாம். இதன் படப்பிடிப்பு விரைவில் திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும் வாசிக்க…

விஜய்க்கு என்ன ஆச்சு?? ட்ரீட்மெண்டுக்காக வெளிநாடு செல்கிறார்..!!

11:49 PM |
விஜய்60 படம் துவங்கி படப்பிடிப்பு அமர்களமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் வெளிநாடு செல்லவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் இருக்குன்னு யோசிக்கிறவங்க அடுத்த பாராவையும் படிச்சிட்டு ஷாக் ஆகுங்க..!

தெறி படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் தோன்றும் விஜய்யின் தலைமுடியில் பெரிய மாற்றம் இருக்கும். இது படம் பார்த்தவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஷார்ட் ஹேர் உடன்தான் விஜய்யின் அடுத்த படம் என்று அவரது ரசிகர்கள் மற்றும் பலர் நினைத்தார்கள். விஜய்60 படத்தின் பூஜையிலும் விஜய் அதே கெட்டப்பில்தான் இருந்தார். ஆனால் உண்மை இது அல்ல என்று கூறுகிறார்கள்.

பெரிய பெரிய ஸ்டார்கள் அவர்களது இளமையை பாதுகாக்க பல லட்சங்கள் செலவு செய்து பல ட்ரீட்மெண்ட் செய்து கொள்வார்கள். விஜய்க்கும் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் நடந்ததாம் அதுவும் தலைமுடி சம்பந்தமான ட்ரீட்மெண்ட்தானாம் அது.

ஆபரேஷன் தோல்வியில் முடிந்ததால்தான் விஜய்யின் தலைமுடி அப்படி ஒட்ட வெட்டப்பட்டதுபோல் இருக்கிறது என்றும், விஜய்60 படப்பிடிப்பில் ஸ்பெஷல் விக் அணிந்து கொண்டுதான் நடிக்கிறாராம். இதற்கு ஆதாரமாக சமீபத்தில் ஒரு புகைப்படமும் வெளியானது.

இதே பிரச்சனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கும் ஏற்பட்டதாம் அதன்பின் மீண்டும் சென்று சிகிச்சை மேற்கொண்ட பின்னரே பிரச்சனை சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க…

‘விஜய் 60’ படம் குறித்து இதுவரை வெளிவராத சில முக்கிய தகவல்கள்..!!

12:53 AM |
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது.

இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியில் நடப்பதுபோல் உருவாக்கப் பட உள்ளதாம்.

எனவே சென்னை பின்னி மில்லில் திருநெல்வேலியில் உள்ள வீடுகளை போல் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். மேலும் இந்தபடம் ஆக்சன் கலந்த குடும்பம் சார்ந்த ஒரு படமாக உருவாக்க பட உள்ளதாம்.
மேலும் வாசிக்க…

பேருந்தில் விஜய்யின் தெறி- டிரைவர் மீது புகார் கொடுத்த விஷால்..!!

12:38 AM |
சமீபகாலமாக திருட்டு விசிடி கும்பலை பிடிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார் விஷால். தான் அவுட்டோர்களில் முகாமிட்டு நடித்து வரும்போது அந்த ஏரியாக்களில் திருட்டு விசிடிக்கள் விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது கேபிள் டிவிக்களில் புதிய படங்கள் ஒளிபரப்பப்பட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை போலீசில் பிடித்துக்கொடுத்து நடவடிக்கை எடுத்து வரு கிறார்.

மேலும், விரைவில் தனது மருது படம் திரைக்கு வர இருப்பதால் திருட்டு விசிடி விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது ரசிகர் படையை உஷார்படுத்தி வைத்துள்ளார்.இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் விஜய் நடித்துள்ள தெறி படம் போடப் பட்டதாம்.

 அதை அறிந்த விஷாலுக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு தெரியப்படுத் தினாராம். அதையடுத்து திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு விஷால் தகவல் கொடுத்ததை அடுத்து பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டதோடு, அந்த பேருந்தில் இருந்து பல புதிய படங்களின் திருட்டு விசிடிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாம்.
மேலும் வாசிக்க…

விஜய் குறித்து இப்படியா சொன்னார் சமந்தா???

11:14 PM |
கத்தி, தெறி பட வெற்றியால் விஜய், சமந்தா இருவரும் வெற்றி ஜோடிகளாக ரசிகர்களால் கருதப்படுகின்றனர். அண்மையில் வெளியான தெறி படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் வெகுவாக பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று சமந்தா #AskSam என்ற டாக்கில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர்கள் விஜய்யை பற்றி கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா தெறி டா என்று ஒரு வரியில் விஜய்யை விவரித்துள்ளார்.


மேலும் வாசிக்க…

மீண்டும் காதல், காதலன் யார்? சமந்தாவின் அதிரடி பதில்..!!

11:04 PM |
சமந்தா தெறி, 24 வெற்றியில் சந்தோஷத்தில் உள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்தை காதலிக்கின்றார் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரின் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இவர் ‘நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னேனா..?, ஆனால், இதுப்பற்றி எனக்கு பேசவிருப்பம் இல்லை’ என கூறியுள்ளார். எது எப்படியோ சமந்தா காதலில் விழுந்தது உறுதியாகிவிட்டது.
மேலும் வாசிக்க…

அஜித்துக்கு ‘எஸ்’, விஜய்க்கு ‘நோ’… சந்தானத்தின் புது பாலிஸி..!!

4:03 AM |
‘இயக்குநர் எம்.ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின், சிம்பு இவங்க மூணு பேரைத்தவிர வேற யாரு கூப்பிட்டாலும் காமெடியனா நடிக்க மாட்டேன். இனிமே, ஒன்லி ஹீரோ தான்’ என சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாகச் சொன்னார் சந்தானம்.

ஆனால், அவர்கள் கூப்பிட்ட போதும் கூட, ‘நான் இப்போ ரெண்டு படங்கள்ல பிஸி, ஸாரி பிரதர்’ என டேக்கா கொடுத்தார். இந்தநிலையில், ‘தெறி’ படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்க சந்தானத்திடம் கேட்டாராம் அட்லி. ஆனால், ஒரே வார்த்தையாக ‘நோ’ சொல்லிவிட்டாராம் சந்தானம்.

இத்தனைக்கும் தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி’யில் சந்தானத்துக்கு நல்ல ரோல் தான் கொடுத்திருந்தார் அட்லி. இருந்தாலும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது என சந்தானம் சொல்ல, அவருக்குப் பதிலாக மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்தனர்.

தற்போது, ‘சிறுத்தை’ சிவா இயக்க இருக்கும் அஜித்தின் அடுத்த படத்தில் காமெடியனாக நடிக்கிறார் சந்தானம் என்கிறார்கள். அஜித்தே நேரடியாகக் கேட்டதால், கொள்கையைத் தூக்கிக் கொல்லையில் போட்டுவிட்டு, வாசக்கதவை அகலமாகத் திறந்து விட்டாராம். இது விஜய் ரசிகர்களுக்குத் தெரிஞ்சா என்னாகுமோ?
மேலும் வாசிக்க…

Theri - Trailer | Mr.Bean Version

2:36 AM |
மேலும் வாசிக்க…

விஜய், அஜித் டீசரை கிண்டல் செய்த ரோபோ ஷங்கர்..!!

11:38 PM |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் தற்போது வந்தது. இதில் கடைசியில் ரோபோ ஷங்கர் ரைம்ஸ் சொல்கிறார். எதற்கு ரைம்ஸ் சொல்கிறீர்கள் என்று ஒருவர் கேட்க ‘தற்போதெல்லாம் ரைம்ஸ் சொன்னால் தான் டீசர் ஹிட் ஆகும்’ என்று கூறுகிறார்.

வேதாளம், தெறி இந்த இரண்டு டீசர்களிலும் அஜித், விஜய் இருவரும் ரைம்ஸ் சொல்வது போல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

இளையதளபதி விஜய்யை பாராட்டிய யூ டியூப் நிறுவனம்..!!

12:44 AM |
தெறி படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்திவரும் இந்த வேளையில் இன்னொரு பக்கம் இப்படத்தின் டீசரும் சத்தமே இல்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அது என்னவென்றால், தெறி படத்தின் டீசரை இதுவரை யூ டியூபில் 300K பேர் லைக் செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த சாதனையை புரியும் முதல் டீசர் தெறி தான். எனவே யூ டியூப் நிறுவனம் தெறி படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க…

தெறியின் சாதனையை முறியடித்த கபாலி..!!

3:12 AM |

சூப்பர்ஸ்டாரின் கபாலி திரைப்படத்தின் டீசர் வௌியாகியிருந்தது. இந்நிலையில் இந்த டீசர் இளைய தளபதியின் தெறி டீசர் சாதனையை முறியடித்துள்ளது.

தெறி டீசர் வௌியாகி 6 1/2 மணித்தியாலத்தில் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டாரின் கபாலி டீசர் வௌியிடப்பட்டு இரண்டு மணித்தியாலத்தில் குறித்த சாதனையை முறியடித்துள்ளது.

தற்போது வரை கபாலி டீசரை பதினாறு இலட்சத்திற்கும் அதிகமானவரகள் பார்வையிட்டுள்ளனர்.

இதன்மூலம் தான் சூப்பர்ஸ்டார் என்பதை ரஜினி மீண்டும் ஒருமுறைநிரூபித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் ரிசல்ட்டால் எமி ஜாக்ஸன் எடுத்த அதிரடி முடிவு..!!

9:46 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் தெறி. இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகின்றது.

அப்படியிருக்க எமிக்கு என்ன கோபம் என்று கேட்கிறீர்களா? அது வேறு ஒன்றும் இல்லை, இப்படத்தில் நடித்த விஜய், சமந்தா ஏன் நைனிகாவின் நடிப்பை கூட ரசிகர்கள் வரவேற்றனர்.

ஆனால், எமி ஜாக்ஸன் எதற்கு இந்த படத்தில்? என்று கேட்கும் அளவிற்கு தான் இவருடைய பங்களிப்பு இருந்தது.

இதனால், இனி முழுக்கதையும் கேட்டு, ஐ படத்தை போன்று தனக்கு முக்கியத்துவம் இருந்தால் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம்.
மேலும் வாசிக்க…

சமந்தாவுக்கு கோபம் வந்தால்..!!

3:44 AM |
படப்பிடிப்பில் இருக்கும் போது ஒரு நாயகிக்கு கோபம் வந்தால் படப்பிடிப்பையே கேன்சல் செய்து விடுவார்கள். பேட்டி எடுக்கும் போது ஒரு நாயகிக்கு கோபம் வந்தால் பேட்டியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். விழாக்கள் நடைபெறும் போது ஏதாவது கோபம் வந்தால் சொல்லாமல் கிளம்பி விடுவார்கள். இப்படித்தான் நாயகிகளின் கோபம் பற்றி காலம் காலமாகப் பார்த்து வருகிறோம்.

ஆனால்,தெறி நாயகி சமந்தாவுக்கு கோபம் வந்தால் இப்படி எதுவும் செய்ய மாட்டாராம். நேராக ஜிம்முக்குப் போய்விடுவாராம். தன்னுடைய மொத்த கோபத்தையும் ஜிம்மில்தான் இறக்கி வைப்பாராம். கடுமையான உடற்பயிற்சிகளை ஆவசேமாகச் செய்து தன்னுடைய கோபத்தைக் குறைத்துவிடுவாராம். வேர்வை சிந்த உடற் பயிற்சி செய்த பின் அந்தக் கோபம் தானாகவே போய்விடுமாம்.

ஒரு வேளை உடற்பயிற்சி செய்து உடலை வலிமையாக்கி, அதன் பின் ஆக்ஷனில் இறங்கி அந்தக் கோபத்தைக் காட்டுவாரோ ?....
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com