ஸ்ரேயாவுடன் டேட்டிங் சென்ற போது மாட்டிக்கொண்ட நடிகர்..!!

11:03 PM |
நடிகை ஸ்ரேயா என்று சொன்னால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தியிலும் பலருக்கு தெரியும். ஒரு காலத்தில் கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுசுடன் நடித்தவர் பிறகு பல நாளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் மற்ற மொழிகளில் நடித்திருந்தார்.

தற்போது சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருக்கும் இவர் பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் போனாராம்.

ராணாவுக்கு த்ரிஷாவுக்கும் ஏற்கனவே காதல் என நிறைய செய்திகள் அடிபட்டது. தற்போது அப்படி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஸ்ரேயா அவரோடு வெளியே செல்லும் போது பப்ளிக்காக ரசிகர்களுடைய கேமரா, பத்திரிக்கையாளர்களுடைய போட்டோவில் சிக்கிகொண்டாராம்.

அப்போது ஸ்ரேயா மட்டும் சிரித்து கொண்டே போஸ் கொடுக்க, ராணா முறைத்துக்கொண்டே போஸ் கொடுத்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் வாசிக்க…

தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 விஜய் தான்- நிரூபித்த சர்வே..!!

11:51 PM |
இளைய தளபதி விஜய் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கும் முன்னணி நடிகர். வசூலில் ரஜினிக்கு பிறகு நம்பி கட்டும் பந்தய குதிரையாக பயணிக்கின்றார்.

இந்நிலையில் யு-டியூப் பொறுத்த வரை கபாலி டீசர், பாடல்கள் செய்த ராஜ்ஜியம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், ரஜினியே செய்ய முடியாத ஒரு சாதனையை விஜய் செய்துவிட்டார். ஆம், தெறி டீசர், ட்ரைலர், பைரவா டீசர் என மூன்றுமே 1 கோடி ஹிட்ஸை தொட்டுவிட்டது.

ஒரு லட்சம் லைக்ஸுகளை தாண்டிவிட்டது, தென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை இதன் மூலம் விஜய் நிகழ்த்திவிட்டார்.
மேலும் வாசிக்க…

தனுஷ்- ஐஸ்வர்யா பற்றிய ரகசியம் இதோ..!!

1:04 AM |
தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தபோது, ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்தனர். ஆனால், திடீரென இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தங்களது காதல் குறித்து தனுஷ் கூறியதாவது, லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன்.

அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடுபடிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும்நட்பாகத்தான் பழகினோம்.

 படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள்சந்திக்கவில்லை. துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க.

ஒவ்வொருகாட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்கவந்தபோது, என்னுடனும் நிறைய நேரம் பேசுவார்கள்.

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டுபாராட்டினாங்க.

அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத்தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம். பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க…

குடி, போதை ஊசி, பெண்கள்…! வீழ்ந்த அபார நடிகர்..!!

10:32 PM |
சிவந்த நடிகர்கள் மட்டுமே சினிமாவில் வெற்றி பெற முடியும் என்று ஒரு காலகட்டம் இருந்தது..!

அதை உடைத்து கருப்பு நடிகர்களும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தவர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரைத் தொடர்ந்து பூ விலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் முரளி..!

தனது ஆழமான நடிப்பால் தமிழ் திரையைக் கட்டிபோட்டவர்..! ஆனால் இவருக்கு  குடிப் பழக்கம் ஆரம்பித்தது.

இதனால் நல்ல படங்கள் இவர் கை விட்டுப் போக படங்கள் இல்லாமல் வீட்டில் அடைந்தார்..! மீண்டும் புது வசந்தம் படத்தின் மூலம் மறு பிறவி எடுத்தார்.

தொடர்ந்து அற்புதமான கதைகள் தேடி வர மீண்டும் பிசி ஆனார். தொடர்ந்து வெற்றிப் படங்கள்..! மீண்டும் ஜால்ராக்கள் இவரை திசை மாற்றி குடி, பெண்களை பழக்கப் படுத்தினார்கள்..!!

முடிந்தது கதை. மீண்டும் சூட்டிங் சரியாகச் செல்லாமல் பெயரைக் கெடுத்துக் கொண்டார். இவருக்கு இதே வேலையாகப் போய் விட்டது என்று வெறுத்துப் போன இயக்குனர்கள் இவரை ஒதுக்கினர்.

படங்கள் இல்லாமல் வீட்டில் முடங்கினார். இவரின் உடல் நிலையை குடும்பத்தினர் சரி செய்தனர். பி ஆர் ஓ மூலம் மீண்டும் வாய்ப்புத் தேட.. காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் மூன்றாவது முறையாக மறு பிறவி எடுத்தார்.

படம் வெள்ளிவிழா கண்டது. தினந்தோறும் என்கிற படமும் பெரிய வெற்றி பெற தனது பழக்கங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒரு ரவுண்டு வந்தார்..!

சமுத்திரம், ஆனந்தம், வானத்தைப்போல போன்ற படங்கள் பட்டையைக் கிளப்பின.அன்பான மனைவி இவரை நல்வழிப் படுத்தினார். கூடவே சென்றார்.

இயக்குனர்களுக்கும் புது முரளியைக் கண்ட மகிழ்ச்சியில் நிறைய வாய்ப்புகளை கொடுத்தனர்.

இப்போது தான் கேடு கேட்ட நண்பர்கள் மூலம் போதை ஊசிப் பழக்கம் வந்தது என்கிறார்கள். இது அவரது குடும்பதிற்கே கொஞ்ச நாள் தெரியாதாம்.

அப்படி தெரிந்த போது அதிர்ந்து போனார்கள். ஆனால் நிலைமை கைமீறிப் போய் விட்டதாக கூறுகிறார்கள்.

திரும்பவும் பெயர் கெட்டது.. பல படங்கள் பாதி சூட்டிங்கில் நின்றது. தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

நல்ல படங்கள் எல்லாம் பாதியில் நிற்க இயக்குனர்கள் கண்ணீர் சிந்தினர். வாழ்க்கையை இழந்து தவித்தனர். ஆனால் இது பற்றி எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் நடிகர் இல்லை.

வீட்டோடு முடங்கிக் கிடந்தார். கோபுரக் கலசம் விஷயத்திலும் இவர் பெயர் அடிபட்டது. அதில் ஒரு பெரிய கர்நாடக அரசியல் வாதி முரளியை மிரட்டி அச்சுறுத்தியாக அப்போது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பானது…!

அதில் மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளானாராம் முரளி. எப்படி மீள்வது என்று தெரியாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தார்.

ஆனாலும் அந்த ஊசி விஷயம் மட்டும் தொடர்ந்தது என்கிறார்கள்.அவர் இறந்த அன்று இரவு மீண்டும் ஒரு கொலை மிரட்டல்வந்ததாம்..

கடும் அதிர்ச்சிக்கு ஆளான நடிகர் அதிக அளவில் மருந்து எடுத்துக் கொண்ட தாகவும் அதனால் அது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்று இப்போது பேசுகிறது கோடம்பாக்கம்.

எது உண்மை என்பது மறைந்த அந்த அபார நடிகருக்கு மட்டுமே தெரியும்..!!! கொடுமை.
மேலும் வாசிக்க…

மச்சினிச்சியின் கணவரை பற்றி படம் எடுக்க போகும் தனுஸ்..!!

1:06 AM |
தனுஷ் ஒரு மாஸ் நியூஸ் தரப்போறேன்னு தன் டிவிட்டரில் சொல்லிட்டே இருந்தார். அடுத்த விஜய் படத்தை தயாரிக்கப்போகிறாரா? ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனுஷ் படத்தில் நடிக்கப்போகிற செய்தியா என்றெல்லாம் மக்கள் ஆவலாக எதிர்பார்த்த இந்த சூழலில் …அந்த மாஸ் செய்தியை சொல்லிட்டார் .
வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதும், அனிருத் இசை என்பது தான் அந்த செய்தியாம்.

சௌந்தர்யாவுக்கும் அவரது கணவருக்கும் மன வேறுபாடு வந்தபோது, வேலையில்லா பட்டதாரி படம் வந்தது. அந்த படத்தில் அஸ்வின் என்று வில்லனுக்கு பேர் வைத்தது, அப்போது ரஜினி சம்பந்தி வீட்டில் பெரிய கடுப்பை ஏற்படுத்தியது.

இப்போ இரண்டாம் பாகம்…செஞ்சிடுங்க….
மேலும் வாசிக்க…

அரை நிர்வாண கோலத்தில் மீண்டும் நடிகை எமி ஜாக்சன்..!!

1:58 AM |
நடிகை எமி ஜாக்சன், அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், 2.0 படத்தை, 350 கோடி ரூபாய் செலவில், லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.

ஷங்கர் பட நாயகி என்றாலே படம் வெளிவரும் வரை, நாயகி குறித்த படமோ, செய்தியோ வெளியே வராது. ஆனால், எமி ஜாக்சனோ, அரை நிர்வாண கோலத்தில் உள்ள தன் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். படுத்த நிலையில், தன் அரை நிர்வாண படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு வெளியிட்ட அவர்,

நேற்று முன்தினம், நின்ற நிலையிலான அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு உள்ளார். அந்த படத்திற்கு, டாப் போட சோம்பேறித்தனமான நாள்…ஞாயிற்றுக்கிழமை என, விளக்கமும் அளித்துள்ளார். பீட்டா ஆதரவாளரான எமி ஜாக்சனுக்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து,

அவரை, 2.0 படத்திலிருந்து நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இந்தச் சூழலில், எமி ஜாக்சன் நடித்த, பீட்டா ஆதரவு வீடியோ மற்றும் அரை நிர்வாண படங்கள் வெளியாகி, ஷங்கர் உள்ளிட்ட, 2.0 படக்குழுவினரை டென்ஷனாக்கி உள்ளது.
மேலும் வாசிக்க…

அஜித்,விஜய்,ரஜினிக்கு இனிமேல் ஆப்பு!! வருகிறது வெள்ளை அறிக்கை..!!

12:30 AM |
ஒவ்வொரு கிழமையும் ஒரு தயாரிப்பாளர் தெருவுக்கு வரும் அளவுக்குத்தான் சினிமாவின் நிலைமை உள்ளது என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனாலும் சினிமா தயாரிப்பு மட்டும் குறைந்த பாடில்லை.

நடிகர்களின் சம்பளம், பெப்சி ஊழியர்களின் அடாவடி, திருட்டு வி.சி.டி என்று பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கும் சினிமா உலகில், நாயகர்களின் சம்பளம் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. ஒரு படம் கொஞ்சம் ஓடினாலே கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கும் நிலையே இருக்கிறது. இதற்கு கடிவாளம் போட தயாரிப்பாளர் சங்கம் முயற்சி செய்து வருகிறது.

இனி ஒவ்வொரு மாதமும் கூடும் பெடரேஷன் மீட்டிங்கில், அந்தந்த மாதம் ரிலீஸ் ஆன படங்களின் வசூல் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். முதலீட்டிலிருந்து எத்தனை சதவீதம் வசூல்? எத்தனை சதவீதம் லாபம்? அல்லது நஷ்டம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர, தீவிர ஆலோசனையில் இருக்கின்றனர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.வெள்ளை அறிக்கை வெளிவந்தால், ஹீரோக்களில் கொள்ளை முடிவுக்கு வரும் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
மேலும் வாசிக்க…

மச்சினி சவுந்தர்யாவுடன் மும்பைக்கு பறந்த தனுஷ்..!!

12:27 AM |
தனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்துடன் மும்பைக்கு சென்றுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்த பிறகு படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் அந்த படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் புதுமுகங்கள் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

தனுஷ்

கதையை கேட்ட ரஜினிகாந்த் ஹீரோவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கேம்மா. நம்ம மாப்பிள்ளை தனுஷையே நடிக்க வை கரெக்டாக இருக்கும் என்று சவுந்தர்யாவிடம் கூறினாராம்.

ஹீரோ

அப்பா ரஜினியே சொன்ன பிறகு சவுந்தர்யா மறுக்கவா போகிறார். இதையடுத்து தனது படத்தின் ஹீரோவாக தனுஷை சவுந்தர்யா தேர்வு செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

சவுந்தர்யா

புதுப்பட வேலைகளில் பிசியாக இருக்கும் சவுந்தர்யா மாமா தனுஷுடன் மும்பைக்கு சென்றுள்ளார். தனுஷுக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூரை ஜோடியாக்க சவுந்தர்யா நினைக்கிறார். இந்நிலையில் அவர்கள் மும்பைக்கு சென்றுள்ளனர்.

சோனம்

சோனம் கபூரை சந்தித்து படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சவுந்தர்யாவும், தனுஷும் மும்பைக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோனமும், தனுஷும் ராஞ்ஹனா இந்தி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

ரஜினி பேசுவதை யாரையும் கேட்கவிடாமல் செய்வேன்: பாகுபலி இயக்குனர் ராஜமௌலி..!!

1:43 AM |
கடந்த ஆண்டு வெளியான மாபெரும் வெற்றி படமான 'பாகுபலி' படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை அவருடைய பாணியில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஒரே ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், அந்த படம் ரிலீஸ் ஆனவுடன் முதல் பத்து நாட்களுக்கு அவர் பேசும் வசனங்கள் யார் காதிலும் விழக்கூடாது. அந்த அளவுக்கு கைதட்டல் சத்தமும், விசில் சத்தமும் கேட்க வேண்டும். அப்படி ஒரு படம் இயக்குவேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் யார்? ஷாக் ரிசல்ட்

11:29 PM |
செய்திகள் தொடங்கி, ஷாப்பிங் வரை அனைத்துமே தற்போது ஆன்லைனில் செய்துவிடலாம். அப்படி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் யார் என்பது பற்றிய புள்ளி விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா தான்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி தான் முதலிடத்தில் இருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. தமிழ் சினிமாவில் முதலிடத்தை நடிகை நிக்கி கல்ராணி பிடித்துள்ளார். சென்ற வருடம் அமலா பால் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

முதலில் உங்கள் உடலை நிர்வாணமாக பாருங்கள் - நிருபரிடம் கோபமடைந்த நடிகை ராதிகா ஆப்தே

1:02 AM |
ராதிகா ஆப்தே, 'வெற்றி செல்வன்' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் 'தோனி,' கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ' ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

ராதிகா ஆப்தே, 'பர்சேட்' என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆனது. அதில், ராதிகா ஆப்தேவும், அதில் ஹுசைனும் ஆடைகள் இல்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இது, ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி' என்ற பெயரில் இணையத்தில் வைரலாக பரவியது.

தற்போது இந்த சர்ச்சை தணிந்து வந்த நிலையில்  தற்போது  பத்திரிகையாளர் சந்திப்பில்   நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு  ராதிகா ஆப்தே கோபமாக பதில் அளித்தார்.

நிருபர் ஒருவர் படம் வெளியாவதற்கு முன் அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி வெளியிடபட்டு படத்தை வெற்றிபெற வைக்க இந்த சர்ச்சைக்குரிய காட்சி வெளியிடபட வேண்டுமா? என கேட்டார்.

இதனால் ராதிகா ஆப்தே மிகுந்த கோபமடைந்து அவர் நிருபரிடம் கூறியதாவது:-

மன்னிக்கவும், ஆனால் உங்கள் கேள்வி அபத்தமானது. சர்ச்சைகள் உங்களை போன்றவர்களால் மக்கள் மூலம் செய்யபட்டுகின்றது.நீங்கள் அந்த வீடியோவை பார்கிறீர்கள் பின்னர் அதை அடுத்தவர்களுக்கு வழங்குகிறீர்கள்,உங்களைபோன்ற நபர்களால் தான் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுகிறது.

நான் ஒரு நடிகை, நான் எனக்குரிய வேலையை சிறப்பாக செய்து உள்ளேன்.நீங்கள் உங்கள் கூடாரத்தை விட்டு வெளியே வாருங்கள் உலக சினிமாவை பாருங்கள். வெளிநாட்டு மக்கள் என்ன செய்கிறார்கள் என பாருங்கள், எந்த மக்கள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என பாருங்கள்.அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்கபடுவது இல்லை.

அவ்வாறு நிருந்தால் ஒரு வேளை நீங்கள் என்னிடம் இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.அவர்களின் உடல்களை பார்த்து வெட்கப்படும் மக்கள் மற்றவர்களின் உடல்களைபற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.நீங்கள் ஒர் உடலை நாளை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் உடலை கண்ணாடியில் பார்த்து கொள்ளுங்கள் அல்லது  மாறாக என் வீடியோவை உங்களைபோன்று பாருங்கள். என கூறினார்.

பின்னர் அந்த நிருபர் தங்கள் மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும் என மன்னிப்பு கோரினார். அதற்கு ராதிகா ஆப்தே எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது.நீங்கள் உங்களைபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் முதலில் அதை செய்யுங்கள் என கூறினார்.
 
மேலும் வாசிக்க…

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்..!!

11:06 PM |
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை 'மெட்ராஸ் மூவிஸ்' எனும்  நிறுவனம் பெற்றுள்ளது. ரஜினி படங்களை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களின் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள்.

ஆனால் முதன் முறையாக, ரஜினிக்கு அடுத்து நகோயா (Nagoya) எனும் மூன்றாவது ஏரியாவில் ‘ரெமோ’ படம் வெளியாகிறது. ரஜினி படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படமே இந்த ஏரியாவில் வெளியிடப்படுவதால், ரஜினிக்கு பிறகு ஜப்பான் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கௌரவம் வழங்கியதாக கருதப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தனுஷ் எங்கள் மகன். உரிமை கொண்டாடும் திருப்புவனம் தம்பதி..!!

12:34 AM |
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகவும் ரஜினியின் முத்த மருமகனாகவும் இருக்கும் நடிகர் தனுஷை தங்களது மகன் என சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

சிவகெங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் கதிரேசன் - மீனாள் தம்பதியினர்தான் இந்த பிரச்சனையை கிளப்பியுள்ளனர். கதிரேசன் சிவகெங்கை அரசு போக்குவரத்து கழகத்தில் டைம் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியினர்களுக்கு பிறந்த கலையரசன் என்ற மகன் கடந்த 2002ஆம் ஆண்டு பிளஸ் 1 படிக்கும்போது தங்களை விட்டு பிரிந்து சென்னை சென்று தனுஷ் என்ற பெயரில் நடிகராகி உள்ளதாகவும், நடிகரான பின்னர் இதுவரை தங்களை அவர் பார்க்க வரவில்லை என்றும் கூறுகின்றனர்.

சென்னைக்கு சென்று தனுஷை பார்க்க முயற்சித்தபோது கஸ்தூரிராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருவதாகவும் இதுகுறித்து காவல்நிலையத்திலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளதாகவும் இந்த தம்பதியினர் கூறுகின்றனர்.

 
மேலும் வாசிக்க…

சௌந்தர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் அஸ்வின்..!!

1:47 AM |
சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து வாழ்வதாக அவரே கூறிவிட்டார்.

மேலும் இனி தனது மகன் வேத் தான் தனக்கு எல்லாமே என்கிற ரீதியிலும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் விவாகரத்து விஷயத்தில் அஸ்வின் தற்போது மனம் மாறிவிட்டாராம். சௌந்தர்யாவுடன் சேர்ந்து வாழவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் சௌந்தர்யா விவாகரத்து விஷயத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கிறார்.
மேலும் வாசிக்க…

ராதிகா ஆப்தேவை படுக்கைக்கு அழைத்த நடிகர் யார்? பரபரப்பு தகவல்..!!

12:39 AM |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்த ராதிகா ஆப்தே, சமீபத்தில் இந்தி படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பான செய்தி வெளிவந்தது. இந்நிலையில் தன்னை பிரபல நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் 'தென்னிந்திய நடிகர் ஒருவர் தனக்கு இரவு நேரத்தில் போன் செய்து தவறான நோக்கத்திற்கு அழைத்த்தாகவும், தான் கடுப்பாகி அந்த நடிகரை திட்டிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதேபோல் இந்தி படம் ஒன்றில் நடிக்க ராதிகாவை ஒருவர் அணுகியதாகவும் ஆனால் இந்த படத்தில் நடிக்க வேண்டுமானல் ஒரு முக்கிய புள்ளியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாகவும், அந்த நபரிடம் தான் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் ராதிகா ஆப்தே சபித்துள்ளார்.,

திரையுலகிற்கு வரும் பல நடிகைகளுக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருந்தாலும் ராதிகா ஆப்தே துணிச்சலுடன் இதை வெளியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

அமலாபால் தனுஷ்க்கு சொந்தமான பங்களாவில்.. பத்ரகாளியான ஐஸ்வர்யா..!!

12:06 AM |
பூதம் ஒவ்வொன்றாக கிளம்புகிறது. ரஜினியின் 2வது மகள் டைவர்ஸ் ஆனது தனுஷே காரணம் என்று கூறப்பட்டது. அமலாபால் விவகாரம் பற்றி எரிகிறது.

சோனியா அகர்வால் விசயமும் வெளியே கசிந்து விட்டது. ஐஸ் அம்மா இருவரையும் கூப்பிட்டு அறிவுரை சொல்லி அனுப்பினார் என்று கூறப்பட்டது.

நேற்று வாட்ஸ்ஆப்களில் ஒரு விஷயம் தீயாக பரவியது. இயக்குனர் விஜயுடன் மனகசப்பு வந்து அமலாபால் வெளியேறியபோது அவர் தங்கியிருந்த சொகுசு பங்களா தனுஷ் வாங்கி கொடுத்தது .

இந்த செய்தி ஐஸ்வர்யாவிற்கும் சென்றதாம். அவ்வளவுதான் கொதித்து எழுந்து விட்டாராம்.கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். ரஜினி மிகவும் மனக்கவலைஅடைந்துள்ளார்.
மேலும் வாசிக்க…

அஸ்வின்-சௌந்தர்யா விவாகரத்திற்கு முக்கிய காரணம்..!!

12:31 AM |
தமிழ் சினிமாவையே நேற்று உலுக்கிய ஒரு தகவல் ரஜினி மகள் விவாகரத்து தான். அஸ்வின், சௌந்தர்யா இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து இருப்பதாக ஒரு செய்தி வந்தது.

இதை சௌந்தர்யாவே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறினார், இதை தொடர்ந்து அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும், இவர்கள் விவாகரத்து வரை செல்ல என்ன காரணம், எதற்காக இந்த முடிவு என பல செய்திகள் உலா வருகிறது.

இதில் சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பு விழா தான் இதற்கெல்லாம் காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது, அந்த விழாவிற்கு சென்று வரும் வழியில் தான் அருண்விஜய் குடித்து வீட்டு போலிஸ் வாகனத்திலேயே மோதிய நிகழ்வு நடந்தது.

அந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற காரணம் தான் சின்ன சண்டை பெரிதாக விவாகரத்து வரை சென்றதாக கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

ரஜினி மகள் விவாகரத்து செய்கிறாரா? அதிர்ச்சி தகவல்..!!

10:39 PM |
ரஜினி மகள்கள் இருவருமே வேலை, குடும்பம் என அழகாக கவனித்து வருகின்றனர். தற்போது சௌந்தர்யா ரஜினியின் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2010ல் இவர் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நான்கு மாதங்களாக அஸ்வின், சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சௌந்தர்யா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் வாசிக்க…

ராதிகா ஆப்தேவின் ஆபாச டிவிடி விற்பனையா? அதிர்ச்சி தகவல்..!!

1:52 AM |
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் 'Parched' என்ற படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் என்றும் அதுகுறித்து ஒருசில காட்சிகள் இண்டர்நெட்டில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்திய செய்தியும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த நிர்வாண காட்சிகள் அடங்கிய டிவிடிக்கள் தற்போது கொல்கத்தா மார்க்கெட்டில் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அஜய்தேவ்கான் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் இம்மாதம் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீசுக்கு முன்பே இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

மாமனாரின் ஜோடியை வளைத்துப்போட்ட தனுஷ்..!!

11:43 PM |
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ், அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில்தான் ராதிகா ஆப்தேவை கதாநாயகியாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகவிருக்கிறது. வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை இயக்கப்போவதாக தெரிகிறது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதன்பிறகு, கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com