ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் 2.0. ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிக்கும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். முதல் முறையாக நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் எனலாம்.
இதற்கு முன் கோவிந்தா 3 ரோஸஸ் படத்தில் நடித்தாலும் சிறப்புத் தோற்றத்திலேயே நடித்தார் எனலாம். அந்த வகையில் அக்ஷய் குமார் படு ஹேப்பியாக இருக்கிறார். படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டின் முதல் நடிகராக தமிழ் சினிமாவில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனையோ ஹீரோக்கள் அங்கே போனீர்கள், ஆனால் நீங்கள் இந்த வாய்ப்பைப் பெறவில்லை.
தென்னிந்திய நடிகைகளை மட்டுமே பாலிவுட்டின் படங்களில் பயன்படுத்தினார்கள். ஆனால் நான் தான் அங்கே நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். எனக்குப் படத்தின் கதை மிகவும் பிடித்துப்போனது. மேலும் ஒரே ஒரு சின்ன ஹிண்ட் கொடுக்க விருப்பப்படுகிறேன். தி ரோபாட் 2.0 படம் கண்டிப்பாக உங்களுக்கு மெஸேஜ் கொடுக்கும் படம்.உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லிக்கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்தப் படம் இரு மொழிப் படமா என்பது குறித்து இவ்வளவு சீக்கிரம் பேசுவது சரியாக இருக்காது. படம் வெளியாக இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. இன்னும் ஓரு மாதம் கழித்தே நானும் படப்பிடிப்பில் இணையவிருக்கிறேன். என 2.0 படம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் படத்தின் வில்லன் தோஸ்த் அக்ஷய் குமார்
Tags:
Cinema
,
Enthiran 2 Review
,
Rajini
,
எந்திரன் 2.ஓ ரிலீஸ் எப்போது
,
சினிமா