கடந்த சில தினங்களாக அஜித் மகன் ஆத்விக்கின் புகைப்படம் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆத்விக்கை ‘குட்டி தல’ என செல்லமாக பெயரிட்டு அஜித் ரசிகர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி வருகின்றனர். குட்டி தலயை தங்களுக்கு பிடித்தவாறு டிசைன்களில் வடிவமைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கும் ஒருபடி மேல் சென்று, அஜித் ரசிகர்கள் ‘குட்டி தல’ முகத்தை தங்களின் கைகளில் பச்சைக் குத்தியுள்ளனர். தங்களது அபிமான நடிகர்களைத்தான் இதுவரை தங்களது உடம்பில் பச்சை குத்திக் கொண்ட ரசிகர்கள், தங்களது அபிமான நடிகரின் மகன் உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
அஜித் மகன் ஆத்விக் பிறந்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த புகைப்படமும் வெளிவராமல் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அஜித் வந்துவிட்டு சென்றபிறகுதான் ஆத்விக்கின் புகைப்படம் வெளிவரத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Ajith
,
Ajith Fans
,
அஜித்
,
ஆத்விக்
,
குட்டி தல
,
சினிமா