அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் லட்சுமிமேனன். முன்னணி ஹிரோயின்கள் வரிசையில் இருந்த லட்சுமிமேனன், திடீரென்று தங்கை கதாபாத்திரத்தில் நடித்தது தமிழ் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அஜித் என்ற பெரிய நடிகரின் படம் என்பதால் லட்சுமிமேனன் இந்த படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அஜித்துக்காக இந்த படத்தில் தங்கை வேடத்தில் நடிக்கவில்லை என்று லட்சுமிமேனன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, வேதாளம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்ததற்கான காரணம் அஜித் என்பதற்காக அல்ல. இப்படத்தின் கதைதான் காரணம். ஒரு தங்கை கதாபாத்திரம்கூட பெரிய அளவில் பேசப்படும்படியாக இந்த கதை இருந்தது.
இந்த படத்தின் முழுக்கதையையும் இயக்குனர் அஜித் சாரிடம்கூட சொல்லவில்லை. என்னிடம் மட்டும்தான் முழுக் கதையையும் கூறினார். அந்த கதையில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் வலுவாக இருந்ததை உணர்ந்து இதில் நடிக்க சம்மதித்தேன்.
இனிவரும் படங்களில் தங்கை வேடத்தில் என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக மறுத்துவிடுவேன் என்று கூறினார்.
Tags:
Ajith
,
Cinema
,
Laxmimenon
,
அஜித்
,
சினிமா
,
லட்சுமிமேனன்
,
வேதாளம்