Thala Anthem | Happy Birthday Ajith | One Man Show | Trend Music

10:27 PM |
மேலும் வாசிக்க…

அஜித் விமான நிலைய ஊழியருடன் நடந்து கொள்ளும் முறையைப் பாருங்கள்! வீடியோ..!!

12:02 AM |
மேலும் வாசிக்க…

அஜித்தை தாக்கிய விஷால் அதிர்ச்சியில் திரையுலகம்..!!

3:10 AM |
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வரமாட்டேன் என கூறியதாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது.

விஷால் தரப்பில் இருந்து இன்று ஒரு தகவல் வந்தது. இதில் ‘நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இத நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொது குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலை துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களை முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே’(நீண்ட அறிக்கையில் குறிப்பிட்ட சில முக்கிய கருத்துக்கள் மட்டுமே இவை) என ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டனர். இதில் இவர்கள் அஜித் மற்றும் சிம்புவை தான் கூறியிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.
மேலும் வாசிக்க…

விஜய்யின் ‘தெறி’ விழாவில் அஜித் வந்தது எப்படி தெரியுமா???

10:52 PM |
விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஆடியோ விழாவில் நேற்று ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்த நிலையில் இதில் அஜித்தும் இடம்பெற்றிருந்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த விழாவில் ஒவ்வொரு முக்கிய செலிபிரிட்டியும் பேசுவதற்கு முன்னர் அவர்களை பற்றிய ஒரு ஆடியோ-வீடியோ தொகுப்பு ஒன்று திரையிடப்பட்டது. இதன்படி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முறை வந்தபோது அவர் தயாரித்த படங்கள் குறித்த தொகுப்பு அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது.

இதில் கடந்த 2000ஆம் ஆண்டு தாணு தயாரித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் ஸ்டில் வெளிவந்தது. இதில் அஜித்தும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அஜித் பெயரும் ‘தெறி’ ஆடியோ விழாவில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா விஜய் பட விழாவாக இருந்தபோதிலும் அஜித் பட ஸ்டில் திரையில் தோன்றியபோது கைதட்டல் சத்தம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விஜய், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் பேசுவதற்கு முன்பும் ஒரு சிறப்பு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

மேலும் வாசிக்க…

அஜித் குடும்ப உறுப்பினரின் போலி கண்டுபிடிப்பு...!!

4:01 AM |
அஜித் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாம்லி தற்போது விக்ரம்பிரபுவுடன் ‘வீரசிவாஜி’ என்ற தமிழ்ப்படத்திலும் மேலும் ஒரு தெலுங்கு, ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகின்றார்.

தனுஷின் கொடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் ஷாம்லி பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவரை பற்றிய மற்றும் அவர் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், ஷாமிலி இதுவரை எந்த சமூக வலைத்தளங்களிலும் கணக்கு வைத்திருக்கவில்லை என்றும், அவ்வாறு கணக்கு ஆரம்பித்தால் அவரே அதை அதிகார்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவரது தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஷாமிலி பெயரில் இருக்கும் போலி டுவிட்டர் அக்கவுண்டின் ஃபாலோயர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய், அஜித் யாருமே கண்டுக்கொள்ளவில்லையா? பிரபல தயாரிப்பாளர் வருத்தம்..!!

12:33 AM |
தமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவரையுமே தன் தயாரிப்பில் பல படங்களில் நடிக்க வைத்தவர் ஏ.எம்.ரத்னம்.

இவரின் தந்தை சமீபத்தில் இறந்தது அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் ஆந்திரா செல்ல, ஒருவர் கூட தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறவில்லையாம்.

அதிலும் கடைசியாக வெளிவந்த அஜித்தின் 3 படங்களையும் இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

அஜித் எப்படிப் பட்ட நபர் என்பதை இந்த வீடியோவை பாருங்கள்..!!

12:11 AM |
மேலும் வாசிக்க…

அஜித்தோடு நடிச்சிட்டா சினிமாவில் இருந்து விலகிடுவேன். சொல்வது யார் தெரியுமா????

9:13 PM |
சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரே ஒரு வெற்றி கொடுத்தவுடன் அவர்களுடைய பேட்டியில் சொல்லும் முதல் வார்த்தை அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான். அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி பண்பான மனிதர் என்பதால் அவருடன் நடிக்க அனைத்து நடிகர், நடிகைகளும் விரும்புவதுண்டு.

இந்நிலையில் நேற்று வெளியான 'பிச்சைக்காரன்' பட நாயகி சாதனா டைட்டசும் அஜித்தின் தீவிர ரசிகையாம். நான் சினிமாவுக்கு வந்ததே அஜித்துடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகதான். அவருடன் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டால் பின்னர் சினிமாவில் இருந்து விலக சொன்னாலும் விலகிவிடுவேன் என்று உணர்ச்சி பொங்க ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சாதனா டைட்டஸின் ஆசை எப்போது நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

அஜித் ஏன் ரசிகர்களை சந்தித்தார்? காரணம் இதோ..!!

10:05 PM |
அஜித் எப்போது தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். அவர்கள் நன்மைக்கு யோசித்து தான், மன்றத்தை கூட வேண்டாம் என்றார்.

இந்நிலையில் சமீபத்தில் தன் ரசிகர்களை சந்தித்தது போல் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது, உடனே அஜித் தன் ரசிகர்களுடன் ஒரு ஸ்பெஷல் சந்திப்பு நடத்தினார் என கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் அஜித் நெல்லூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தான் சென்றுள்ளார். அங்கு இவரின் வருகையை அறிந்த ரசிகர்கள் குவிய, சாமி தரிசனம் முடிந்து ரசிகர்களுடன் பேசி புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க…

இதற்கு கூட இப்படியா? தல ரசிகர்களின் ரகளை..!!

11:21 PM |
அஜித் ரசிகர்கள் அவரின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருடைய மகள், மகன் பிறந்தநாளை கூட போஸ்டர் அடித்து கொண்டாடும் அளவிற்கு அஜித் மீது தீவிர அன்பு கொண்டுள்ளனர்.

அதிலும் மதுரை ரசிகர்கள் அஜித் தும்மினால் கூட அதற்கு போஸ்டர் அடித்து விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் மதுரையை கலக்கும் போஸ்டர் இது தான்.

அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பைக் ஓட்டி வருவது போல், அவருக்கு பின்னால் அஜித் பைக் ஓட்டி வருகிறார். ‘அப்பா உனக்கு Speed போதாது’ என சொல்வது போல் உள்ளது.
மேலும் வாசிக்க…

தல தளபதி மாஸ்அப் வீடியோ..!!

2:00 AM |
மேலும் வாசிக்க…

நடிகர் அஜித் குமாரின் மகள் அனுஷ்காவின் அழகான நடிப்பை பாருங்கள்..!!

1:41 AM |
மேலும் வாசிக்க…

அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாதான் இருந்திருக்கும்! ஷாக் கொடுக்கிறார் லட்சுமிமேனன்..!!

10:43 PM |
அஜீத் பற்றி பேசினால் ஆளுக்கொரு சம்பவம் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அது அவரது எளிமை பற்றியும், ‘‘எடுத்துக்கோ” என்று கொடுத்தது பற்றியுமாகதான் இருக்கும்! நாலு பேருக்கு செய்யறது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் என்று இருப்பவர் அவர். அப்படியிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிற தகவல்கள் பல, அவரது கிரீடத்தில் மேலும் மேலும் சிறகுகளை சொருகிக் கொண்டேயிருக்கும். ஆனால் முதன் முறையாக ஒரு விஷயத்தை லட்சுமிமேனன் மறுத்திருக்கிறார். ஆனாலும் தலைபோகிற சறுக்கல் இல்லை அது.

வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்த லட்சுமிமேனன், அப்படி நடிக்கும் போது அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பாரா தெரியாது. ஆனால் படம் வந்த பின், “வாம்மா தங்கச்சி” என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். பாசமலருக்கு அப்பால, முள்ளும் மலரும் வந்தது. முள்ளும் மலருமுக்கு அப்பால வேதாளம்தான் என்கிற அளவுக்கு தங்கச்சி சென்ட்டிமென்ட் தாறுமாறாக கொப்பளித்த படம் அது. படத்தின் முதல் பிரதியை பார்த்த அஜீத், லட்சுமிமேனனுக்கு பேசியதை விட ஐந்து லட்சம் எக்ஸ்ட்ரா கொடுக்கச் சொன்னதாக ஒரு தகவல் வந்தது அப்போது.

அது பற்றிதான் சமீபத்தில் சென்னை வந்த லட்சுமிமேனனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஆமாம்… நானும் அந்த செய்தியை படிச்சேன். அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாயிருந்துருக்கும். ஆனா அவர் சொன்னாரான்னு தெரியல. எனக்கு யாரும் பணம் கொடுக்கலையே?” என்றார் லட்சுமிமேனன்.
மேலும் வாசிக்க…

அஜித்தின் மாஸ் வசனங்கள் இப்படி தான் உருவாகின்றதாம்-ஸ்பெஷல் தகவல்..!!

3:18 AM |
அஜித் படங்களில் எப்போது மாஸ் வசனங்களுக்கு பஞ்சமே இருக்காது. அஜித் ‘அது’ என்று இரண்டு எழுத்தில் சொன்னாலும் திரையரங்கில் விசில் பறக்கும்.

அந்த வகையில் வீரம், வேதாளம் என அஜித்துடன் இணைந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் இயக்கிய படத்தில் பல வசனங்கள் அஜித்திற்காகவே எழுதியது போல் இருக்கும்.

இந்த வசனங்கள் எப்படி உருவாகின்றது குறித்து இயக்குனர் சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் ‘நாங்க வீரம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்ற போது அஜித் சாரிடம் நிறைய விஷயம் குறித்து பேசினோம்.

அப்போது அவர் வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அஜித் வீடு கட்டி கொடுத்தது தெரிய வந்தது, அதை வைத்து தான் ‘நம்ம கூட இருக்கவங்கள் நம்ம பார்த்தால், நம்மை மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ வசனம் உருவானது’ என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

வேதாளம் படத்தில் அஜித்துக்காக நடிக்கவில்லை லட்சுமிமேனன்..!!

11:46 PM |
அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் லட்சுமிமேனன். முன்னணி ஹிரோயின்கள் வரிசையில் இருந்த லட்சுமிமேனன், திடீரென்று தங்கை கதாபாத்திரத்தில் நடித்தது தமிழ் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அஜித் என்ற பெரிய நடிகரின் படம் என்பதால் லட்சுமிமேனன் இந்த படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அஜித்துக்காக இந்த படத்தில் தங்கை வேடத்தில் நடிக்கவில்லை என்று லட்சுமிமேனன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, வேதாளம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்ததற்கான காரணம் அஜித் என்பதற்காக அல்ல. இப்படத்தின் கதைதான் காரணம். ஒரு தங்கை கதாபாத்திரம்கூட பெரிய அளவில் பேசப்படும்படியாக இந்த கதை இருந்தது.

இந்த படத்தின் முழுக்கதையையும் இயக்குனர் அஜித் சாரிடம்கூட சொல்லவில்லை. என்னிடம் மட்டும்தான் முழுக் கதையையும் கூறினார். அந்த கதையில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் வலுவாக இருந்ததை உணர்ந்து இதில் நடிக்க சம்மதித்தேன்.

இனிவரும் படங்களில் தங்கை வேடத்தில் என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக மறுத்துவிடுவேன் என்று கூறினார்.
மேலும் வாசிக்க…

தெறியாக தெறிக்கும் இணையத்தில் பட்டையை கிளப்பும் தலயின் தெறி..!!

10:10 PM |
மேலும் வாசிக்க…

ஓடி வந்து உதவிய அஜித்..!!

11:06 PM |
அஜித் எப்போதும் தன் உடன் இருப்பவர்களுக்கு எந்த உதவினாலும் கேட்டு செய்யக்கூடியவர். அந்த வகையில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பு வழியில் ஒரு சிறுவன் சுவரில் அமர்ந்திருப்பதை அஜித் பார்த்துள்ளார்.

திடிரென்று அந்த பையன் சுவரில் இருந்து கீழே விழ, அஜித் உடனே தன் காரில் இருந்து இறங்கி அந்த பையனை பார்க்க சென்றுள்ளார்.

அங்கு அவன் கையில் அடிப்பட்டு இரத்தம் கொட்டியுள்ளது, அஜித் தன் காரிலேயே அந்த சிறுவனை ஏற்றி மருத்துவமனைக்கு சென்று அனுமதித்து, அனைத்து செலவுகளை ஏற்று, சிறிது பணமும் கொடுத்து அவர்கள் பெற்றொர்களிடம் அந்த சிறுவனை ஒப்படைத்தாராம். இதை தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

மாஸ் முகமூடியை கழட்டி வைத்த அஜித்- ட்ரண்டிங்கில் தல..!!

1:05 AM |
அஜித் நீண்ட நாட்களாக மாஸ் வகை படங்களை மட்டுமே நடித்து வந்தார். இதிலிருந்து கொஞ்சம் விலகி மாஸ் மட்டுமில்லாமல் கிளாஸ் என இரண்டிலும் இரட்டை சவாரி செய்து ஹிட் அடித்தார் என்னை அறிந்தால் படத்தின் மூலம்.

எப்போதும் இணையும் இந்த கூட்டணி என ஆவலுடன் காத்திருந்த கௌதம்-அஜித்-ஹாரிஸ் இப்படத்தின் மூலம் இணைந்தே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது.

அஜித் மாஸ் முகமூடியை கழட்டி வைத்து, கதைக்கு தேவையான கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார், பல வருட உழைப்பிற்கு பரிசாக அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லானது என்னை அறிந்தால்.

எந்த விழா காலம் எல்லாம் சாதரண நாளில் வந்து ரூ 11 கோடி, முதல் நாள் தமிழகத்தில் வசூல் செய்து சாதனை புரிந்தது. ஏன், தற்போது சம்மந்தம் இல்லாமல் என்னை அறிந்தால் பழைய கதையை சொல்கிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது.

அது, வேறு ஒன்றும் இல்லை என்னை அறிந்தால் படம் வந்து இன்றுடன் 1 வருடம் முடிகின்றது, இதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் #1YearOfBBYennaiArindhaal என்ற டாக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர். Thediko சார்பாக என்னை அறிந்தால் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க…

அஜித், விஜய், சூர்யா- இளம் இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

3:23 AM |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு முன்னணி நடிகர்கள் என்றால் அஜித், விஜய், சூர்யா தான். இவர்கள் கால்ஷிட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் காத்திருக்கின்றது.

இந்நிலையில் ஒரு இளம் இயக்குனர் இந்த மூன்று பேரிடமும் கதை கூறியிருக்கிறாராம், இந்த கதை அவர்களுக்கும் பிடித்துவுள்ளதாம்.
அவர் வேறு யாரும் இல்லை, சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் தான், இவர் முன்பே சூர்யாவிடம் ஒரு கதையை கூறியுள்ளார், அவர் பிறகு நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்ததாக கூறப்பட்டது.

தற்போது விஜய், அஜித்தையும் சமீபத்தில் சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளாராம், இந்த மூவரில் யாருடைய கால்ஷிட் வினோத்திற்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

அஜித், விஜய், சூர்யாவிற்கு செல்லப்பெயர் சூட்டிய கீர்த்தி சுரேஷ்..!!

10:51 PM |
ரஜினிமுருகன் வெற்றி நாயகி கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் மற்றும் சூர்யாவிற்கு செல்லப்பெயர் வைத்திருக்கிறார்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் ரசிகர்களை மாயம் செய்யத் தவறினாலும் ரஜினிமுருகன் வெளியாகி அவரை வெற்றி நாயகியாக மாற்றி விட்டது.
தற்போதைய நிலவரப்படி முன்னணி நடிகைகளுக்கு இணையான ஒரு வரவேற்பை ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு அளித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை குஷ்பூ நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் குஷ்பூவின் பல கேள்விகளுக்கு கீர்த்தி சுவாரஸ்யமாக பதிலளித்தார். இதில் விஜய், அஜீத் மற்றும் சூர்யாவிற்கு பொருத்தமான பெயர்களை சொல்லும்படி குஷ்பூ கேட்டார்.

இதற்கு பதிலளித்த கீர்த்தி, அஜீத்திற்கு ரொமாண்டிக் ஹீரோ, விஜய்க்கு டான்ஸிங் ஹீரோ மற்றும் சூர்யாவிற்கு செண்டிமெண்ட் ஹீரோ என பெயர் வைக்கலாம். அவர்களுக்கு இந்த பெயர்கள் பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பதில் மேற்கண்ட நடிகர்களின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com