சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரே ஒரு வெற்றி கொடுத்தவுடன் அவர்களுடைய பேட்டியில் சொல்லும் முதல் வார்த்தை அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான். அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி பண்பான மனிதர் என்பதால் அவருடன் நடிக்க அனைத்து நடிகர், நடிகைகளும் விரும்புவதுண்டு.
இந்நிலையில் நேற்று வெளியான 'பிச்சைக்காரன்' பட நாயகி சாதனா டைட்டசும் அஜித்தின் தீவிர ரசிகையாம். நான் சினிமாவுக்கு வந்ததே அஜித்துடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகதான். அவருடன் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டால் பின்னர் சினிமாவில் இருந்து விலக சொன்னாலும் விலகிவிடுவேன் என்று உணர்ச்சி பொங்க ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சாதனா டைட்டஸின் ஆசை எப்போது நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Tags:
Ajith
,
Cinema
,
pichaikaran
,
அஜித்
,
சாதனா
,
சினிமா
,
பிச்சைக்காரன்