அஜித் போன் ஸ்விட்ச் ஆப்- அதிரடி முடிவு..!!

10:08 PM |
அஜித் எப்போதும் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியே இருப்பார். இந்நிலையில் நாளை மறுநாள் குட்டிதல பிறந்தநாள் என்பது அனைவரும் அறிந்ததே.

இதனால், தமிழகமெங்கும் பல இடங்களில் ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஏதும் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பலரும் அஜித்தை தொடர்பு கொண்டு கேட்க, அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம்.
மேலும் வாசிக்க…

அஜித் ஏன் ரசிகர்களை சந்தித்தார்? காரணம் இதோ..!!

10:05 PM |
அஜித் எப்போது தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். அவர்கள் நன்மைக்கு யோசித்து தான், மன்றத்தை கூட வேண்டாம் என்றார்.

இந்நிலையில் சமீபத்தில் தன் ரசிகர்களை சந்தித்தது போல் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது, உடனே அஜித் தன் ரசிகர்களுடன் ஒரு ஸ்பெஷல் சந்திப்பு நடத்தினார் என கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் அஜித் நெல்லூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தான் சென்றுள்ளார். அங்கு இவரின் வருகையை அறிந்த ரசிகர்கள் குவிய, சாமி தரிசனம் முடிந்து ரசிகர்களுடன் பேசி புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க…

இதற்கு கூட இப்படியா? தல ரசிகர்களின் ரகளை..!!

11:21 PM |
அஜித் ரசிகர்கள் அவரின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருடைய மகள், மகன் பிறந்தநாளை கூட போஸ்டர் அடித்து கொண்டாடும் அளவிற்கு அஜித் மீது தீவிர அன்பு கொண்டுள்ளனர்.

அதிலும் மதுரை ரசிகர்கள் அஜித் தும்மினால் கூட அதற்கு போஸ்டர் அடித்து விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் மதுரையை கலக்கும் போஸ்டர் இது தான்.

அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பைக் ஓட்டி வருவது போல், அவருக்கு பின்னால் அஜித் பைக் ஓட்டி வருகிறார். ‘அப்பா உனக்கு Speed போதாது’ என சொல்வது போல் உள்ளது.
மேலும் வாசிக்க…

விஜய், அஜித் ரசிகர்களை கண்டால் மனதிற்கு கஷ்டமாக உள்ளது- விஜய் சேதுபதி

11:56 PM |
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இளம் நடிகர் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போடுவது குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் நடிகர்கள் விஜய் சேதுபதி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளிக்கையில் ‘ரசிகர்கள் இரண்டு நடிகர்களுக்காக சண்டைப்போடுவது மனதிற்கு சங்கடமாக உள்ளது.

குடும்பம் வரை இழுத்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர், இதே ஆர்வத்தை ஒரு அரசியலில் காட்டலாம், என்னை பொறுத்துவரை ஒவ்வொரு இளைஞனும் 18வயது வந்தவுடன் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்’ என ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும் வாசிக்க…

தெறி டீசர் பஞ்சாயத்து! அஜீத் ரசிகர்கள் மீது சந்தேகம்..!!

2:30 AM |
நேற்றிரவு வெளியான ‘தெறி’ படத்தின் டீஸரை இதுவரை முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததால் கன ஜோராக காலரை உயர்த்திக் கொண்டு கிளம்ப வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. அதுவும் வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேர் டீசரை பார்த்ததால், இந்த முறை திருவிழா கோலம்தான் என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தில் கல் விழுந்தது சிறிது நேரத்திலேயே! இதில் காப்புரிமை பிரச்சனை இருப்பதாக கூறி, யூ ட்யூப் தளம் அந்த வீடியோவை உடனே நீக்கிவிட்டது. இதனால், ‘கண்ணுக்கு எட்டியது, கருத்துக்கு எட்டலையே?’ என்று கவலையால் தவித்தார்கள் விஜய் ரசிகர்கள்.

வெகு காலமாகவே விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் ஒருவர் சட்டையை மற்றவர் பிடித்துக் கொண்டு இழுபறி நடத்திக் கொண்டிருப்பதால், இந்த காப்புரிமை பிரச்சனை அஜீத் ரசிகர்களால் எறியப்பட்ட கல்லா? அல்லது வேறு ஏதாவது சதியா? என்ற கோணத்தில் தயாரிப்பாளர் தாணுவும் இயக்குனர் அட்லீயும் களத்தில் இறங்க… இந்த நிமிஷம் வரை உருப்படியாக ஒரு க்ளுவும் கிடைக்கவில்லையாம் அவர்களுக்கு.

இதற்கிடையில் இவ்விரு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் வார்த்தைகளால் மோதிக் கொண்டது இன்டஸ்ட்ரியை மேலும் திகைக்க வைத்தது. உதயநிதி போன்ற இரு ஹீரோக்களின் அபிமானிகள் “அடிச்சுக்காதீங்கப்பா…” என்று கெஞ்சியும் கூட்டத்தில் சிக்கிய வாழைப்பழம் போலதான் ஆனது அவரது நிலைமை.

தெறி படத்தின் டைரக்டர் அட்லீக்கு அஜீத்திடம் நேரடி பழக்கம் இருந்தாலும், அது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “இந்த வேலையை செய்தது அஜீத் ரசிகர்களாகதான் இருக்கும்” என்று சில இடங்களில் வாயை விட்டதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அஜீத் பெயரில் சமூக வலைதளங்களில் செயல்படும் தீவிர அபிமானிகளின் செயல்பாடுகளை கண்டறிய தொழில் நுட்ப வல்லுனர்களின் உதவியை நாடியிருக்கிறாராம் அவர்.

“எவ்வளவு செலவானாலும் பரவால்ல தம்பி. தப்பு செஞ்சவங்களை விடக் கூடாது” என்று தயாரிப்பாளர் தாணுவும் கூறி வருவதால், இந்த சண்டை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது!
மேலும் வாசிக்க…

குட்டி தல முகத்தை உடம்பில் பச்சை குத்திய அஜித் ரசிகர்கள்..!!

10:26 PM |
கடந்த சில தினங்களாக அஜித் மகன் ஆத்விக்கின் புகைப்படம் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆத்விக்கை ‘குட்டி தல’ என செல்லமாக பெயரிட்டு அஜித் ரசிகர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி வருகின்றனர். குட்டி தலயை தங்களுக்கு பிடித்தவாறு டிசைன்களில் வடிவமைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கும் ஒருபடி மேல் சென்று, அஜித் ரசிகர்கள் ‘குட்டி தல’ முகத்தை தங்களின் கைகளில் பச்சைக் குத்தியுள்ளனர். தங்களது அபிமான நடிகர்களைத்தான் இதுவரை தங்களது உடம்பில் பச்சை குத்திக் கொண்ட ரசிகர்கள், தங்களது அபிமான நடிகரின் மகன் உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

அஜித் மகன் ஆத்விக் பிறந்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த புகைப்படமும் வெளிவராமல் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அஜித் வந்துவிட்டு சென்றபிறகுதான் ஆத்விக்கின் புகைப்படம் வெளிவரத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

யார் இந்த அஜித்! இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு புரியும்..!!

10:26 PM |
மேலும் வாசிக்க…

Ajith Fans In Vedalam Movie Review

1:06 AM |


Ajith Fans In Vedalam Movie Review
வேதாளம் பார்த்து மனநோயாளிகளாக மாறிய தல ரசிகர்கள் அதிர்ச்சி வீடியோ





மேலும் வாசிக்க…
2015 Thediko.com