தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் அது ரஜினியின் கபாலியும் விஜய்யின் வெற்றி படமும்தான்.
இந்த இரண்டு படஙக்ளும் தற்போது பாதி கிணறை தாண்டிவிட்டது இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இந்த படங்கள் எப்போது ரிலீஸ் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் கலைப்புலி எஸ்.தாணு தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஹிரோக்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் பெருமையும் இவருக்கு உண்டு.
ரஜினியின் கபாலி படம் சென்னையில் ஷூட்டிங் முடிந்து தற்போது மலேசியாவில் முக்கிய காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அது முடிந்ததும் சீனா சிங்கப்பூர் என படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார் படத்தின் இயக்குநர் ரஞ்சித்.
விஜய்யின் வெற்றி படமும் தற்போது முடியும் தருவாயில்தான் இருக்கிறது. இப்படத்தின் விஜய்க்கும் இரண்டு நாயகிகள் சமந்தா எமி ஜாக்சன் ஏற்கனவே சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்துவிட்டார் இயக்குநர் அட்லீ தற்போது எமி ஜாக்சன் விஜய்59 படத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த இரண்டு படங்களும் ஜனவரியில் படப்பிடிப்பு முடிந்துவிடுவதால் ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம் மேலும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தால் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் தற்போது கபாலி படத்தை முதலில் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவு இறுதியாக எடுக்கப்பட்டிருக்கிறதாம் திரையரங்கு உரிமையாளர்கள் விஜய் படத்தை கொஞ்சம் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்று கேட்டுக் கொண்டதால்தான் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 14ம் தேதி கபாலி படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது அப்போ விஜய் படம் என்று கேட்பவர்களுக்கு இப்போதைக்கு பதில் கிடையாது என்பதுதான் பதில்.
Tags:
ஒரே நாளில் ரிலீஸ்
,
சினிமா
,
ரஜினி
,
ரஜினியின் கபாலி
,
விஜய்
,
விஜய்யின் வெற்றி