கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான தூங்காவனம் படம் முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது.
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல் ஹாஸன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்த தூங்காவனம் படம் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆனது. அன்றைய தினம் தான் அஜீத் நடித்த வேதாளமும் வெளியானது.
யு/ஏ சான்றிதழ் பெற்ற தூங்காவனம் தமிழகத்தில் 370 ஸ்கிரீன்களுக்கு மேல் திரையிடப்பட்டது. படம் வெளியான தியேட்டர்களில் 70 சதவீத இருக்கைகள் நிறைந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அஜீத் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும் கமல் படம் ஓடும் தியேட்டர்களிலும் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது.
இந்நிலையில் தூங்காவனம் ரிலீஸ் ஆன அன்று மட்டும் தமிழகத்தில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது.வார இறுதி நாட்களில் தூங்காவனத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக கமல் நடித்த ரீமேக் படமான த்ரிஷ்யம் ஹிட்டானது. அதே போன்று ரீமேக் படமான தூங்காவனமும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன் அஜீத் ஜோடியாக நடித்த வேதாளம் ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ.15.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
அப்பா கமலை தோற்கடித்த மகள் ஸ்ருதி
,
கமல்
,
சினிமா
,
தூங்காவனம்
,
வேதாளம்