ஒவ்வொரு கிழமையும் ஒரு தயாரிப்பாளர் தெருவுக்கு வரும் அளவுக்குத்தான் சினிமாவின் நிலைமை உள்ளது என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனாலும் சினிமா தயாரிப்பு மட்டும் குறைந்த பாடில்லை.
நடிகர்களின் சம்பளம், பெப்சி ஊழியர்களின் அடாவடி, திருட்டு வி.சி.டி என்று பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கும் சினிமா உலகில், நாயகர்களின் சம்பளம் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. ஒரு படம் கொஞ்சம் ஓடினாலே கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கும் நிலையே இருக்கிறது. இதற்கு கடிவாளம் போட தயாரிப்பாளர் சங்கம் முயற்சி செய்து வருகிறது.
இனி ஒவ்வொரு மாதமும் கூடும் பெடரேஷன் மீட்டிங்கில், அந்தந்த மாதம் ரிலீஸ் ஆன படங்களின் வசூல் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். முதலீட்டிலிருந்து எத்தனை சதவீதம் வசூல்? எத்தனை சதவீதம் லாபம்? அல்லது நஷ்டம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர, தீவிர ஆலோசனையில் இருக்கின்றனர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.வெள்ளை அறிக்கை வெளிவந்தால், ஹீரோக்களில் கொள்ளை முடிவுக்கு வரும் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
Tags:
Cinema
,
அஜித்
,
ஆப்பு
,
சினிமா
,
ரஜினி
,
விஜய்
,
வெள்ளை அறிக்கை