நடிகை எமி ஜாக்சன், அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், 2.0 படத்தை, 350 கோடி ரூபாய் செலவில், லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.
ஷங்கர் பட நாயகி என்றாலே படம் வெளிவரும் வரை, நாயகி குறித்த படமோ, செய்தியோ வெளியே வராது. ஆனால், எமி ஜாக்சனோ, அரை நிர்வாண கோலத்தில் உள்ள தன் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். படுத்த நிலையில், தன் அரை நிர்வாண படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு வெளியிட்ட அவர்,
நேற்று முன்தினம், நின்ற நிலையிலான அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு உள்ளார். அந்த படத்திற்கு, டாப் போட சோம்பேறித்தனமான நாள்…ஞாயிற்றுக்கிழமை என, விளக்கமும் அளித்துள்ளார். பீட்டா ஆதரவாளரான எமி ஜாக்சனுக்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து,
அவரை, 2.0 படத்திலிருந்து நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இந்தச் சூழலில், எமி ஜாக்சன் நடித்த, பீட்டா ஆதரவு வீடியோ மற்றும் அரை நிர்வாண படங்கள் வெளியாகி, ஷங்கர் உள்ளிட்ட, 2.0 படக்குழுவினரை டென்ஷனாக்கி உள்ளது.
Tags:
Cinema
,
அரை நிர்வாணம்
,
எமி ஜாக்சன்
,
சினிமா
,
பரபரப்பு
,
ரஜினி
,
ஷங்கர்