பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ரஜினிமுருகன் இன்னும் நான்கு நாட்களில் வெளியாகவுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அதற்கேற்ப சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் புரோமோ வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Tags:
Cinema
,
Rajini Murugan Trailer
,
Sivakarthikeyan
,
சினிமா
,
ரஜினிமுருகன்