கொலவெறி நடிகர் பால் நடிகையை தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தது பால் நடிகையின் கணவருக்கு பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது. கொலவெறி நடிகரின் மச்சினி அவரது கணவரை பிரிந்து வாழ்வதற்கும் கொலவெறி நடிகர்தான் என்று ஒரு செய்தியும் கோலிவுட்டில் காட்டுத் தீயாய் பரவியது.
இந்நிலையில், இன்னுமொறு நடிகையின் பிரிவுக்கும் கொலவெறி நடிகர்தான் காரணம் என்று ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது. அவர் வேறு யாருமல்ல, ருத்ரமான நடிகைதான். ருத்ரமானவர் தனது கணவரை பிரிந்து உலக நாயகருடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார். தற்போது உலக நாயகரையும் பிரிந்து தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
உலக நாயகருடனான இருந்த உறவை ருத்ரமான நடிகை முறித்துக் கொண்டதற்கு காரணம் கொலவெறி நடிகர்தானாம். கொலவெறி நடிகர் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறாராம். இவருடைய இயக்கத்தில் ருத்ரமான நடிகை தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தாராம்.
ஆனால், உலக நாயகரோ இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாராம். எனவே, தனது மகளின் வாழ்க்கைக்காக ருத்ரமான நடிகை அவரை பிரிந்து வந்துவிட்டாராம். தற்போது உலக நாயகரை பிரிந்து தனியாக வந்துவிட்டதால் கூடிய விரைவில் ருத்ர நடிகையின் மகளை நடிகையாக பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.
Tags:
Cinema
,
உலக நாயகன்
,
ஒல்லி நடிகர்
,
சினிமா
,
பால் நடிகை
,
ருத்ரமான நடிகை