அந்த ஹீரோவிற்கு அது முதல் படம்..! பதினேழு வயது. அவரது அப்பாவும் நடிகர் மிக மிக பண்பானவர். பெரிய பாரம்பரியம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்ற முப்பெரும் ஹீரோக்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலத்தில் முத்துராமன் தனக்கென்று நல்ல படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்திருந்தார்.
முத்துராமனின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. சூரிய காந்தி, தீர்க்க சுமங்கலி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்கமுடியுமா..?
அவரது மகனை அந்த இமயம் தனது காதல் படத்தில் அறிமுகம் செய்தார். நடிகை ராதாவும் அந்த படத்தில் தான் அறிமுகம் ஆனார்.படம் வெள்ளிவிழா கண்டது.
ஆனால் அந்த படம் சூட்டிங் துவங்கியது அப்போது அதில் ஒரு நடிகை அம்மா வேடத்தில் நடித்தார். அவருக்கு என்ன தோன்றியதோ அந்த இளம் ஹீரோவை ‘ரொம்பவே’ பிடித்துப் போனது.
அன்பு காட்டினார். ஆதரித்தார். அரவணைத்தார். அந்த காலகட்டத்தில் ஜெமினி சினிமா போன்ற பத்திரிகைகள் இதை பெரிய கிசுகிசுக்களாக எழுதின.
முழுக்க அந்த ஹீரோவை ஆக்ரமித்துக் கொண்டார் அந்த அம்மா நடிகை. அதிலிருந்து ஹீரோ மீளவே முடியவில்லை என்கிறார்கள்.
அந்த ஹீரோவின் வாழ்க்கை அன்று முதல் மாற ஆரம்பித்து இப்பொது வரை வெளிவர முடியாமல் இதோ இப்போது சினிமாவில் இருந்தே ஒதுங்க வேண்டிய பரிதாப நிலை..!
இந்த விசயங்களை கேள்விப் பட்ட அப்பா மிகவும் மனம் உடைந்து போனாராம். ஊட்டியில் படபிடிப்பில் மகனுக்கு துணையாக போன அந்த அற்புத நடிகர் மனம் வெறுத்துப் போய் சுரண்டு விழுந்து ஹார்ட்அட்டாக்கில் பரிதாபமாக இறந்தும் போனார்..!
கொடுமை கொடுமை..!!
Tags:
Cinema
,
அம்மா
,
சிவாஜி
,
சினிமா
,
நடிகை
,
முத்துராமன்
,
ராதா
,
ஜெமினி