மெகா ஹிட் படத்தில் நடிக்க சிவா சம்பளமே வாங்கவில்லை தயாரிப்பளார் தகவலால் ரசிகர்கள் ஆச்சரியம்

1:14 AM |
ரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுது கொண்டு சில பேரை பற்றி குற்றம்சாட்டியது அனைவரும் அறிந்ததே.

இந்த செய்தி தீயாய் பரவ, இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் பி.எல் தேனப்பன் கூறுகையில், சிவா மீது மூன்று தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அவர் சொல்வது போல் இந்த படத்தினால் எந்த பிரச்சனையம் வந்ததாக தெரியவில்லை, ரஜினிமுருகன் ரிலீஸ் நேரத்தில் பெரும் பிரச்சனை இருந்ததால் அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்தார்.

சம்பளமே வாங்காமல் நடித்த படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்ற வலி அவருக்கு இருந்தது, எங்களுக்கு தெரியும். மேலும் தற்போது எழுந்துள்ள பிரச்சனையை பற்றி சிவாவை அழைத்து விசாரிக்கவுள்ளோம் என்றார்.
மேலும் வாசிக்க…

கீர்த்திசுரேஷின் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு..!!

12:13 AM |
கடந்த 2013ஆம் ஆண்டு பிர்யதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் 'கீதாஞ்சலி. சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படம் தற்போது தமிழில் வெளியாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'வெண்ணிலா மின்னலா" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றி, விஜய் 60 படத்தின் நாயகி ஆகியவற்றால் கீர்த்திசுரேஷின் கோலிவுட் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரும் உருகி உருகி காதலிக்கிறார்களாம்..!!

11:56 PM |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை படங்களில் சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யாவின் ரொமான்ஸ் பேசப்பட்டு வந்தது.

ஆனால் ரஜினிமுருகன் வந்த பிறகு அந்த நிலை மாறி விட்டது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் அதிக இயல்பாக இருந்ததாக பேசப்பட்டது.

இதை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கும் கீர்த்தி சுரேஷை கமிட் செய்து ரொமான்ஸ் காட்சிகளை கூடுதலாக இணைக்கிறார்களாம்.

தங்களது ரொமான்ஸ் காட்சிகளுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு காரணமாக, இன்னும் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர வேண்டும் என்று சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரும் இப்படத்தில் உருகி உருகி காதலித்துக்கொண்டிருக்கிறார்களாம்.
மேலும் வாசிக்க…

சம்பளத்தை ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் ஏற்றி விட்டாரா கீர்த்தி சுரேஷ்..!!

6:29 PM |
கீர்த்தி சுரேஷ் அடுத்து படத்தில் இளைய தளபதியுடன் ஜோடியாகும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ரஜினிமுருகன் தான்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய் சம்பளம் ரூ 50 லட்சம் என கூறப்பட்டது,

ஆனால், முன்னணி நாளிதழ் ஒன்று இவரின் சம்பள உயர்வு குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.இதில் ஒரே மாதத்தில் தன் சம்பளத்தை ரூ 25 லட்சம் உயர்த்தி ரூ 75 லட்சமாக்கி விட்டாரம்.
மேலும் வாசிக்க…

இலங்கைக்கு பணம் கொடுத்து உதவிய சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்..!!

11:18 PM |
இலங்கையில் கல்முனை என்ற இடத்தில் ஒரு மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது.

இதில் முக்கிய அம்சமாக அங்குள்ள ஜிகே சினிமிக்ஸ் படமாளிகையில், பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படம் 3 காட்சிகளாக திரையிடப்பட்டது.

மருத்துவமனை நிதிக்காக அங்கு திரண்ட மக்கள் அனைவரும் டிக்கெட் வாங்கி படத்தை பார்த்தனர். நிதி திரட்டிய குழு தங்களது மனமார்ந்த நன்றிகளை படத்தை பார்த்த அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட 3 காட்சிகளும் அரங்குகள் நிறைந்து காணப்பட்டது.

அதில் வந்த பணத்தை வைத்து மருத்துவமனையை மறுசீரமைக்கவுள்ளனர்.
மேலும் வாசிக்க…

அஜித், விஜய், சூர்யாவிற்கு செல்லப்பெயர் சூட்டிய கீர்த்தி சுரேஷ்..!!

10:51 PM |
ரஜினிமுருகன் வெற்றி நாயகி கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் மற்றும் சூர்யாவிற்கு செல்லப்பெயர் வைத்திருக்கிறார்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் ரசிகர்களை மாயம் செய்யத் தவறினாலும் ரஜினிமுருகன் வெளியாகி அவரை வெற்றி நாயகியாக மாற்றி விட்டது.
தற்போதைய நிலவரப்படி முன்னணி நடிகைகளுக்கு இணையான ஒரு வரவேற்பை ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு அளித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை குஷ்பூ நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் குஷ்பூவின் பல கேள்விகளுக்கு கீர்த்தி சுவாரஸ்யமாக பதிலளித்தார். இதில் விஜய், அஜீத் மற்றும் சூர்யாவிற்கு பொருத்தமான பெயர்களை சொல்லும்படி குஷ்பூ கேட்டார்.

இதற்கு பதிலளித்த கீர்த்தி, அஜீத்திற்கு ரொமாண்டிக் ஹீரோ, விஜய்க்கு டான்ஸிங் ஹீரோ மற்றும் சூர்யாவிற்கு செண்டிமெண்ட் ஹீரோ என பெயர் வைக்கலாம். அவர்களுக்கு இந்த பெயர்கள் பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பதில் மேற்கண்ட நடிகர்களின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் வாசிக்க…

வசூல் ராஜாவாக மாறிய ரஜினிமுருகன்..!!

12:58 AM |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படம் ரிலீஸான நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.19.5 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு தல, தளபதி, சூப்பர் ஸ்டார் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், விஷாலின் கதகளி, சசிகுமாரின் தாரை தப்பட்டை, உதயநிதி ஸ்டாலினின் கெத்து ஆகிய நான்கு படங்கள் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸாகின. நான்கு படங்களுமே ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ரஜினிமுருகன்
பொங்கலுக்கு நான்கு படங்கள் ரிலீஸானபோதிலும் பொன்ராம் இயக்கத்தில் சிவா, கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினிமுருகன் தான் வெற்றியாளராக ஆகியுள்ளது.

வசூல்
ரஜினிமுருகன் ரிலீஸான நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 19.5 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து தனது வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது.

சென்னை
ரஜினிமுருகன் சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் ரூ.96.21 லட்சம் வசூலித்துள்ளது. ரஜினிமுருகனை அடுத்து சென்னையில் தாரை தப்பட்டை ரூ. 79.73 லட்சம் வசூல் செய்துள்ளது.

குடும்ப படம்
ரஜினி முருகன் படத்தை மக்கள் குடும்பம், குடும்பமாக சென்று பார்த்து வருகிறார்கள். அதனால் படம் நிச்சயம் பல கோடிகளை வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

பல தடைகளை தாண்டி சரித்திரம் படைக்க ரஜினிமுருகன் இன்னும் நான்கு நாட்களில்..!!

11:02 PM |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ரஜினிமுருகன் இன்னும் நான்கு நாட்களில் வெளியாகவுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதற்கேற்ப சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் புரோமோ வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com