ரஜினிமுருகன் வெற்றி நாயகி கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் மற்றும் சூர்யாவிற்கு செல்லப்பெயர் வைத்திருக்கிறார்.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் ரசிகர்களை மாயம் செய்யத் தவறினாலும் ரஜினிமுருகன் வெளியாகி அவரை வெற்றி நாயகியாக மாற்றி விட்டது.
தற்போதைய நிலவரப்படி முன்னணி நடிகைகளுக்கு இணையான ஒரு வரவேற்பை ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு அளித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை குஷ்பூ நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் குஷ்பூவின் பல கேள்விகளுக்கு கீர்த்தி சுவாரஸ்யமாக பதிலளித்தார். இதில் விஜய், அஜீத் மற்றும் சூர்யாவிற்கு பொருத்தமான பெயர்களை சொல்லும்படி குஷ்பூ கேட்டார்.
இதற்கு பதிலளித்த கீர்த்தி,
அஜீத்திற்கு
ரொமாண்டிக் ஹீரோ,
விஜய்க்கு
டான்ஸிங் ஹீரோ மற்றும்
சூர்யாவிற்கு
செண்டிமெண்ட் ஹீரோ என பெயர் வைக்கலாம். அவர்களுக்கு இந்த பெயர்கள் பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பதில் மேற்கண்ட நடிகர்களின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Tags:
Ajith
,
Cinema
,
Keerthi Suresh
,
Vijay
,
அஜித்
,
சினிமா
,
சூர்யா
,
ரஜினிமுருகன்
,
விஜய்