அந்த நேரத்தில் என் உயிர் பிரியவேண்டும் நடிகை திரிஷா உருக்கம்..!!

12:19 AM |
திரிஷா அஜித், விஜய் , சூர்யா, விக்ரம், கமல் என பெரிய நடிகர்களோடு படங்களில் நடித்து விட்டார்.

நயன்தாரா வந்தபோது தமிழ் சினிமாவிற்கு வந்தாலும் இருவருமே நல்ல நண்பர்கள்.

சமீபத்தில் தனுசுடன் கொடி படத்தில் நடித்து ஹிட்டானதால் மிக மகிழ்ச்சியான அவர் திருமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் தந்திருந்தார்.

எனக்கு திருமண ஆசை இல்லை. சினிமாவில் தொடந்து நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியிருந்ததார்.

தற்போது அவர் சினிமாதான் உயிர்மூச்சு எனவே நடித்து கொண்டிருக்கும் போதே உயிர் பிரியவேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருமணம் நின்று போனது கூட சினிமாவில் நடிப்பதற்காகத்தான் என கூறினார்.

மேலும் வாசிக்க…

கீர்த்தி சுரேஷ்-ற்கு போட்டியாக வந்த நடிகைக்கு அடித்த யோகம்..!!

11:56 PM |
கீர்த்தி சுரேஷ் தான் தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோயின். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பல படங்களில் கமிட் ஆகியும் வருகிறார். தற்போது இவருக்கு போட்டியாக ஒரு இளம் நடிகை களம் இறங்கியுள்ளார்.

சசிகுமார் நடிக்கும் பலே வெள்ளையத்தேவா படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கும் லீசா, அதற்குள் 7 படங்களில் ஹீரோயினாக கமிட் ஆகிவிட்டாராம்.

கீர்த்தி போல் இவரும் கலக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

2019-ல் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா..!!

11:29 PM |
நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்த போது நாயகி நயன் தாராவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானதால் அது உண்மை தான் என்று எல்லோரும் நம்பினார்கள்.

இருவரையும் சைமா விருது விழா உட்பட பல திரையுலக விழாக்களில் ஒன்றாக பார்க்க முடிந்தது. அவ்வளவு ஏன் சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைகளுக்கு கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு விக்னேஷ் சிவனை அழைத்து பண்டிகையை சீறும் சிறப்புமாக கொண்டாடியதெல்லாம் நடந்தது.

இப்படி இருவரும் காதலில் கண்டுண்டு கிடப்பது உலகமறிந்த விஷயமாகி விட சூர்யாவை வைத்து புதுப்படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ்சிவனுக்கு வாங்கிக் கொடுத்ததே நயன் தான் என்கிற ஒரு சீக்ரெட் செய்தியும் உண்டு.

இப்படி தனது காதலர் விக்னேஷ்சிவனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் கூடவே இருந்த நயன்தாராவை தனது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

நயனுக்கும் வயதாகிக் கொண்டே போவதால் வருகிற 2019-ம் ஆண்டில் எங்கள் திருமணம் என்று தனது நண்பர்களிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

முதல் இரண்டு காதலும் புட்டுக் கொண்டதில் ரொம்பவே அப்செட்டாகியிருந்த நயனுக்கு விக்னேஷ் சிவனின் இந்த முடிவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.
மேலும் வாசிக்க…

நான் என்ன அப்படிப்பட்டவளா? ஸ்ருதிஹாசன் உருக்கம்..!!

12:24 AM |
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி கொண்டிருக்கின்றார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘நான் முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது லக் படத்தின் மூலம் தான்.

அந்த படம் தோல்வியடைய எல்லோரும் என்னை ராசி இல்லாதவள் என்றார்கள். அதை தொடர்ந்து நடித்த எந்த படம் சரியாக போகவில்லை.

ஆனால், தற்போது நான் நடிக்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள் எனைத்துமே ஹிட் ஆகி வருகின்றது.

மேலும், தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

நிராகரிக்கபட்ட சூர்யா படம் அதிர்ச்சியில் திரையுலகம்..!!

10:31 PM |
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். பல ஹிட் படங்கள் கொடுத்தவரும் அவரின் படம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று கெட்டப்பில் நடித்து கடந்த மே மாதம் வெளியான படம் 24. இதில் சமந்தா, நித்யா மேனன் என முன்னணி நடிகைகள் நடிக்க டைம் ட்ராவல் வாட்சை வைத்து வித்யாசமான கதையுடன் எடுக்கப்பட்டது.

படம் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கபட்டாலும், படம் தற்போது தேர்வாக வில்லை என்பதே தற்போதைய தகவல்.

இந்தியாவின் கோவாவில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் பல மொழிகளை சேர்ந்த படங்கள் இடம் பெறுவது வழக்கம்.

ஆனால் இதில் சூர்யாவின் 24 படம் நிறைய அயல்நாட்டு விஷயங்களோடு இருப்பதால் இதை கமிட்டி தேர்ந்தெடுக்கவில்லை.

மேலும் இதில் மாதவன், ரித்திகாசிங் நடித்த இறுதிச்சுற்று படம் தேர்வாகியுள்ளது.
மேலும் வாசிக்க…

சிங்கம்-3 படத்தில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்..!!

12:48 AM |
சிங்கம்-3 படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கின்றார், இவர் தான் கடந்த இரண்டு பாகத்திலும் ஜோடி.

இந்நிலையில் சமீபத்தில் வந்த சிங்கம்-3 போஸ்டரில் ஸ்ருதிஹாசன் கழுத்தில் தாலியுடன் சூர்யாவின் அருகில் நிற்கின்றார்.

இதைப்பார்த்த பலரும் அனுஷ்கா இறந்துவிடுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் ஆடியன்ஸை குழப்புவதற்காகவும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என கூறியுள்ளனர்.
மேலும் வாசிக்க…

விஜய் சூர்யாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ் பண்ணபோகும் ஹீரோ..!!

12:15 AM |
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ரெமோ வசூல் வேட்டை நடத்திவிட்டது.

தற்போது இவர் விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடிக்க, அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக தானா சேர்ந்து கூட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் சண்டக்கோழி-2வில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

இப்படத்தை லிங்குசாமி இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
மேலும் வாசிக்க…

சூர்யாவின் "24" படத்தில் இடம் பெற்ற தொழில்நுட்ப மேஜிக்கை பாருங்கள்! வீடியோ

1:47 AM |
மேலும் வாசிக்க…

முன்னணி நடிகர்களில் விஜய்க்கு மட்டும் இது நடக்கவில்லை..!!

11:53 PM |
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் அம்மா என்றால் அது சரண்யா பொன்வண்ணன்தான். அந்தளவுக்கு அஜித், சூர்யா முதல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை எல்லோருக்கும் இவர் அம்மாவாக நடித்துவிட்டார்.

ஆனால் ‘இளையதளபதி’ விஜய்க்கு மட்டும் இவர் அம்மாவாக இதுவரை நடித்ததில்லை. விஜய்யுடன் குருவி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் விஜய்க்கு அம்மாவாக இவர் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

காதலரை கழட்டிவிட்ட நடிகை..!!

12:33 AM |
நயன நடிகை காதலித்து வருவதாக கூறப்படும் சிவமான இயக்குனர் தற்போது சூர்யாமானவரை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஜோடியாக நடிக்க தனது காதலியான நயன நடிகையை நடிக்கவைக்கலாம் என முடிவு செய்திருந்தாராம்.

தனது விருப்பத்தை காதலியிடமும் அவர் தெரிவித்தாராம். ஆனால், காதலியோ இவரது படத்தில் நடிக்க முடியாது என கைவிரித்துவிட்டாராம். இதனால், இயக்குனர் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டாராம்.

காதலி கழட்டிவிட்ட நிலையில், தற்போது வேறொரு நடிகையை தேடி அலைந்து வருகிறாராம் இயக்குனர்.
மேலும் வாசிக்க…

நயன் – விக்னேஷ் சிவன் ரகசியமாக கோவிலுக்கு சென்றது ஏன்? – விபரம் உள்ளே..!!

12:08 AM |
நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்-நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக கோலிவுட்டில் பரவலாக செய்தி பரவி வந்தது. அந்த படப்பிடிப்பின்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதையெல்லாம் உறுதிப்படுத்தும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் திடீரென கும்பகோணம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளனர்.

இருவரும் கோவிலுக்கு சென்றது பல்வேறு தரப்பிலும் வெவ்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இருவரும் எதற்காக கும்பகோணம் கோவிலுக்கு சென்றார்கள் என்று விசாரிக்கையில், விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நல்ல வெற்றியை பெற இருவரும் சேர்ந்து கும்பகோணம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் வாசிக்க…

சாய் பல்லவியின் விபரீத ஆசை அதிர்ச்சியில் திரையுலகம்..!!

10:51 PM |
பிரேமம் என்ற ஒரே ஒரு படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் மலர் (சாய் பல்லவி).

இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதில் தமிழில் தனக்கு நடிகர் சூர்யா, அவரை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அவருடன் நடிப்பேனா என்று தெரியவில்லை, ஆனால் அவரை ஒருமுறையாவது சந்தித்து I Love You என்று சொல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜய்-அமலா பால் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து..!!

10:41 PM |
‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் விஜய் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்தார் அமலா பால். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இளம் நடிகர்களுடன் நடித்து வந்த அமலாபால் அப்போதுதான் நடிகர் விஜய், விக்ரம் போன்றவர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.

முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்கும் முன்னரே இயக்குனர் விஜய், அமலா பால் காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. சுமார் 1 வருடம் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இல்லறத்தில் கவனம் செலுத்தினார். பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

சூர்யாவுடன் ‘பசங்க 2’ படத்தில் நடித்தவர் தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்தார். அமலாபால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதையடுத்து விஜய்யுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு அடிக்கடி இருவரும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்ததுடன் அப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் ஜோடியாக வருவதை தவிர்த்து வருகின்றனர்.

 தவிர அமலாபால், சுமார் 2 வருடம் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கும் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இது விஜய்யுடன் அவருக்கு ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாட்டை காட்டுவதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாமல் விஜய், அமலாபால் இருவரும் மவுனம் காத்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

இணையதளங்களில் பரவும் கவர்ச்சிப் படம்: நடிகை சமந்தா அதிர்ச்சி..!!

12:58 AM |
நடிகை சமந்தாவின் கவர்ச்சிப் படம் இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

திருமணம்
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. செப்டம்பர் 23-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

சமந்தா, நாக சைதன்யா இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் வீடியோ மற்றும் அவர்கள் ஜோடியாக வெளியே சென்று வரும் படங்கள் இணையதளங்களில் வெளிவந்து ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமந்தாவின் கவர்ச்சிப் படங்களும் இணையதளங்களில் பரவி அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா சினிமாவில் அறிமுகமான புதிதில் பிரபலமில்லாத சிறிய நடிகர்களுடன் நடித்தார்.
காதல் மற்றும் படுக்கை அறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்து இருந்தார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று ‘மாஸ்கோவின் காவேரி.

கவர்ச்சிப் படங்கள்
இதில் கதாநாயகனாக ராகுல் ரவீந்திரன் நடித்து இருந்தார். இந்த படம் 2010-ல் வெளிவந்து தோல்வி அடைந்தது. அந்த படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்த காட்சிகளை தற்போது இணையதளங்களில் யாரோ வெளியிட்டு அவை வேகமாக பரவி வருகின்றன.

அவற்றை ரசிகர்கள் பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். அத்துடன் சமந்தாவின் தற்போதைய மார்க்கெட் உயர்வு நிலவரத்தை கருத்தில் கொண்டு தோல்வி அடைந்த அந்த படத்தை தூசி தட்டி மீண்டும் மறு வெளியீடு செய்து காசு பார்க்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

இதுவும் சமந்தாவை வருத்தப்படுத்தி உள்ளது. அதனை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

மேலும் வாசிக்க…

ஆகஸ்டில் சமந்தாவின் திருமண அறிவிப்பு..!!

3:47 AM |
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்படுகிறது.

இதுவரை இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, தற்போது இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சமந்தா – நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பரில் நடைபெறும் எனவும் இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் வாசிக்க…

நடிகர் சூர்யாவா இப்படி செய்தார்! - இணையத்தில் பரவும் செய்தி..!!

1:31 AM |
நடிகர் சூர்யா தொடர்பாக மலேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தனக்கே தெரியாது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா இடம்பெறவுள்ளதாகவும், இதில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவுள்ளதாகவும், அவர் இதற்கு பணம் கோரியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடிகர் சூர்யா தனது டிவிட்டர் தளத்தில், "இப்படிபட்ட தகவல் கூட எனக்கு தெரியாது. இதில் கலந்துகொள்ளும்படி என்னை யாரும் அணுகவும் இல்லை. கலைத்துறையில் இருக்கும் நான் மதம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிச்சயம் சம்மதித்து இருக்க மாட்டேன்.

சமூக வளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்து கொள்ளும் நான் அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கி கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற கொள்கையில் வாழ்கின்ற நான் பணம் பெற்றதாக வந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை.

மலேசியாவில் இடம்பெறும் நிகழ்ச்சிக்கும் எனக்கும் எந்தவித சம்மதமும் இல்லை. இது தொடர்பாக மேலும் என் பெயரை பயன்படுத்தினால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.

இது போன்ற செய்திகள் வருவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கறது.என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

இனி இது போன்ற தவறான நோக்கத்தோடு வரும் செய்திகளை புறக்கணிக்க வேண்டும் என நடிகர் சூர்யா மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க…

தனுஷ் ஏன் வாக்களிக்க வரவில்லை – வெளிவந்த உண்மை..!!

10:56 PM |
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. சினிமா பிரபலங்களில் ரஜினி, அஜித், விஜய், கமல், சிம்பு என எல்லோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டனர்.

அமெரிக்காவில் இருப்பதால் தன்னால் ஓட்டு போட வர முடியாது என சூர்யா ஏற்கனவே கூறிவிட்டார். ஆனால் தனுஷ் மட்டும் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் அவர்கள் ஓட்டு போட வரவில்லையாம்.
மேலும் வாசிக்க…

24 விமர்சனம் - 24 Review

1:15 AM |
காலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

கதைக்களம்

1990 இல் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும்,

அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.

பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா? மகன் சூர்யா பெரியப்பாவை பழி வாங்கினாரா? என்பதை பல சுவராஷ்யங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

இரண்டு கதாபாத்திரத்தில் நிறைய நடித்திருந்தாலும் சூர்யா மூன்று கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதன்முறை குறிப்பாக வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில்

ஆங்காங்கே சற்று பயத்தை ஏற்படுத்துகிறார். இளமை காலத்தில் வரும் போதும் சரி வயதான காலத்தில் வீல் சேரில் வரும் போதும் தனது கதாபாத்திருத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார்.

சமந்தாவிற்கும், நித்யா மேனனுக்கும் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரத்திரம் இல்லையென்றாலும் தங்களுடைய பங்கை சரியாக செய்துள்ளனர்.
குறிப்பாக சமந்தா அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.

வேல் படத்திற்கு பிறகு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.

ஒரு கலகலப்பான அம்மாவாகவும் சரி, சூர்யா தன்னுடைய மகன் இல்லை என்பதை சொல்லும் போதும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

சத்யன், அப்புகுட்டி, சார்லி இவர்கள் படத்தில் அவ்வப்போது வந்து சென்றாலும் தங்களுடைய பங்குக்கு கலகலப்பூட்டுகின்றனர். குறிப்பாக அஜய்(மித்ரன்) ஆத்ரேயாவுடன் வரும் போது அவரும் சேர்ந்து மிரட்டுகிறார்.

யாவரும் நலம், மனம் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்ரம்குமாருக்கு இதுதான் அடுத்த படம் என்பதால் பல நாட்கள் கதையை யோசித்து எடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹுமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு இன்னும் ஒரு பலத்தை சேர்த்திருக்கிறது. காலம் என் காதலி, நான் உன் அருகினிலே பாடல்கள் மனதில் தங்கி
விடுகின்றன. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் காட்சிகளை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.

க்ளாப்ஸ்

சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் நிறைய ரசிகர்ளை சூர்யாவிற்கு கொடுக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆய்வு கூடம் 1990களுக்கு ஏற்றார் போல் தத்ரூபமாக இருக்கிறது.

பல்ப்ஸ்

படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது. அதை சற்று குறைத்திருக்கலாம். படத்தின் இரண்டாம் பாதியில் கதை நன்றாக செல்லும் நேரத்தில் வரும் காதல் காட்சிகள் படத்தின் ஓட்டத்தை குறைக்கிறது.

மொத்தத்தில் 24 இந்த கோடை காலத்திற்கு ஏற்ற படம்.. விக்ரம் குமார்-சூர்யாவின் புது விதமான முயற்சிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்

ரேட்டிங்: 3.25/5
மேலும் வாசிக்க…

’டிடி’யை அதிர்ச்சியாக்கிய நித்யா மேனன்..!!

1:37 AM |
சின்னத்திரை தொகுப்பாளர்களில் தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் டிடி. இவர் சமீபத்தில் 24 படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார்.

இதில் சூர்யா, நித்யா மேனன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நித்யா மேனனிடம், டிடி ‘உங்களை பற்றி ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்’ என கேட்டார்.

அதற்கு நித்யா மேனன் ‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என கூறுவேன்’ என கூற டிடி ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டார்.
மேலும் வாசிக்க…

எனக்கும் விக்ரமிற்கும் சண்டையா? சூர்யா ஓபன் டாக்..!!

11:55 PM |
சூர்யா நடிப்பில் இந்த வாரம் 24 படம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட சூர்யாவிடம், ‘உங்களுக்கு நடிகர் விக்ரமிற்கும் ஏதும் சண்டையா’ என கேட்டனர்.

சூர்யா சிரித்துக்கொண்டே ‘யார் இப்படியெல்லாம் கூறுவது, நான் அவரின் ஐ படம் பார்த்து முடித்த பிறகு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினேன், தற்போது கூட அவர் இயக்கிய ஆல்பத்தில் நான் நடித்தேன், அப்படியெல்லாம் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com