சவுகார்பேட்டை, நம்பியார் என அடுத்தடுத்த படங்களின் ரிலீசுக்கு தயாராகிவிட்டார் நடிகர் ஸ்ரீகாந்த். சமூக வலைதளங்களில் அரங்கேறும் நடிகர்களின் ரசிகர்கள் சண்டை குறித்து இவர் பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டைக் குறித்து கூறுகையில் ‘கண்டிப்பாக இவை மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம் தான், என் பெயரில் கூட போலி ஐடிக்களை வைத்து தவறான தகவல்களை பரப்பினர்.
இதனால், தேவையில்லாத மனஸ்தாபம் ஏற்படுகின்றது, மேலும், அந்த உண்மையான ஐடி தானா என்று பார்த்து கமெண்ட் செய்யுங்கள், வார்த்தையை தவறாக விடாதீர்கள். (சமீபத்தில் ஸ்ரீகாந்த் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் அஜித், சிம்புவை ஒரு போலி ஆசாமி திட்டி எழுதப்பட்டது).
இது குறித்து சம்மந்தப்பட்ட நடிகர்களே விரைவில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டும், சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.
Tags:
Ajith
,
Cinema
,
simbu
,
அஜித்
,
சிம்பு ஒரு போலி ஆசாமிகள்
,
சினிமா
,
ஸ்ரீகாந்த்