அஜீத்தைப் போன்று தான் நடிக்கும் எந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றி வருகிறார் நயன்தாரா. ஆனபோதும், அவர் நடித்தால் போதும் என்கிற ரீதியில் அவரை போட்டா போட்டியில் படங்களுக்கு புக் பண்ணி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். மேலும், அப்படி விளம்பர நிகழ்ச்சிகளுக்கே வராத நயன்தாராவை முன்னிறுத்திதான் தற்போது அவர் நடிக்கும் படங்களின் பப்ளிசிட்டிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நானும் ரவுடிதான் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் நயன்தாரா பப்ளிசிட்டிகளில் முதன்மைப்படுத்தப்பட்டது போன்று, வல்லவனுக்கு பிறகு சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் விளம்பரங்களிலும் இப்போது நயன்தாராவே போஸ்டர்களில் முக்கியத்துவம் பெற்று வருகிறார். மற்ற படங்களைப்போலவே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் தான் வருவதில்லை என்பதை முன்மொழிந்து விட்டாராம் நயன்தாரா. ஆக, ஆடியோ நிகழ்ச்சிக்கு எப்படியேனும் நயன்தாராவை அழைத்து வந்து விட வேண்டும் என்கிற சிம்புவின் திட்டமும் ஒர்க்அவுட்டாக வில்லையாம்.
Tags:
Cinema
,
Nayanthara
,
simbu
,
அஜீத்
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சினிமா
,
நானும் ரவுடிதான்