நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 30 கோடி எனவும் சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியை வைத்து மெல்லிசை படத்தை தயாரித்து வரும் ரேபல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, இப்படத்தின் படப்பிடிப்பை அவரது பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று தொடங்க திட்டமிட்டுள்ளார்.
Tags:
Ajith
,
Ajith Birthday
,
Cinema
,
simbu
,
அஜித்
,
சிம்பு
,
சினிமா
,
த்ரிஷா இல்லனா நயன்தாரா