சர்ச்சை என்ற வார்த்தையின் மறுபெயர் சிம்பு என்ற அளவிற்கு பெயர்போனவர் சிம்பு. அவர் ரசிகர்கள் செய்த செயல் இப்போது பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது.
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் மிமிக்ரி சேது. ஒரு பகுதியில் சிம்புவை அவர் அதிகமாக கலாய்த்து விட்டார் என கூறி அவரை சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்து தரக்குறைவாக திட்டியுள்ளனர்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் விரைவில் போலீசில் புகார் அளிக்க போவதாக கூறியுள்ளார். மேலும் தான் தீவிர சிம்பு ரசிகன் என்றும், எப்போதும் சிம்புவை பற்றி தவறாக பேசியதில்லை என்றும் கூறியுள்ளார்.
அப்படி ஒரு சம்பவமே நடக்காத நிலையில், தன்னை பற்றி யாரோ வதந்தி பரப்பிவிட்டார்கள், என தெளிவுபடுத்தியுள்ளார் அவர்.
Tags:
Cinema
,
simbu
,
Simbu Fans
,
சிம்பு
,
சினிமா
,
மிமிக்ரி சேது