சிம்பு பாடி, வெளியான பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு அந்த பாட்டுக்கு இசை அமைத்தது அனிருத் என்று கூறியதால் அனிருத் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் முதன் முறையாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் அனிருத்தை போலீஸ் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்போது அனிருத் கனடாவில் இருந்தார்
.நேற்று முன்தினம் கனடாவிலிருந்து ரகசியமாக திரும்பிய அனிருத் விமான நிலையத்திலிருந்து காரிலேயே ரகசியமாக தனது வழக்கறிஞருடன் கோவை சென்று போலீசில் ஆஜராகி உள்ளார். அதுவும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் செல்வராஜை காவல் நிலையத்துக்கு வெளியே காரில் சந்தித்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அனிருத் மீது புகார் கொடுத்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். "குற்றம் சாட்டப்பட்ட அனிருத்துக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். இரவு நேரத்தில் இன்ஸ்பெக்டரை தனியாக சந்தித்துது சட்டப்படி செல்லுமா? சாதாரண பொதுமக்கள் இதுபோன்று நள்ளிரவில் ஆஜரானால் ஒத்துக் கொள்வார்களா? இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்" என்று கூறுகிறார்கள். மாநகர உளவு பிரிவுக்குகூட தெரியாமல் அனிருத் ஆஜராக வேண்டிய அவசியம் என்ன? அப்படி ஆஜராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துக் கொண்டது எப்படி? என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது அனிருத்துக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.
Tags:
Beep song
,
Cinema
,
simbu
,
சினிமா
,
புதிய சர்ச்சையில் அனிருத்