ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தின் வெற்றியால் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து கமலை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலாவி வருகிறது. சிம்பு நடிக்கும் இந்த படத்தை மெல்லிசை, ஆக்கோ ஆகிய படங்களை தயாரித்த ரேபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
இப்படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், சிம்பு இதில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக மூன்று முன்னணி கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யவும் முடிவு செய்துள்ளார்களாம்.
மேலும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.30 கோடி என்றும் கூறப்படுகிறது. சிம்பு நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வருகிற மே 1-ந் தேதி அஜித் பிறந்தநாளில் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் அவருடைய பிறந்தநாளில் தன்னுடைய படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிவிப்பார்கள் என தெரிகிறது.
Tags:
Ajith
,
Cinema
,
simbu
,
அஜித்
,
சிம்பு
,
சினிமா