சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10ம் தேதி (நேற்று) வெளியாகியுள்ள திரைப்படம் வேதாளம்.
பாக்ஸ் ஆபீஸ் பிரமுகர் ஸ்ரீதர் பிள்ளை தனது டுவிட்டர் தகவலில்
"வேதாளம் தமிழகத்தில் மட்டும் (வரி தவிர்த்து) தீபாவளி தினத்தில் ரூ.15.5 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலில் இது ஒரு புது சாதனை" என குறிப்பிட்டு உள்ளார்.
Sreedhar Pillai
"#Vedalam TN - Gross (Tax free), Diwali Day - Nov 10 - Rs 15.5 Cr (approximate). A new record for a day 1
கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த கத்தி திரைப்படம், தமிழகத்தில் முதல் நாளில், ரூ.12.5 கோடியை வசூலித்தது. ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் முதல் நாளில் ரூ.12.8 கோடி வசூல் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடிப்பில் அதே நாளில் தூங்காவனம் திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Tags:
Cinema
,
அஜித்தின் வேதாளம்
,
சினிமா
,
வேதாளம் வசூல்