தீபாவளி தினமான நேற்று வெளிவந்த 'வேதாளம்' திரைப்படம் முதல் நாளிலேயே சுமார் 20 கோடி வசூல் செய்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளிவந்த அஜித் படங்களை விட இந்தப் படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முன் பதிவு ஆரம்பமான நாளிலிருந்தே விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
நேற்று விடுமுறை தினம் என்பதாலும், தீபாவளி தினம் என்பதாலும் தமிழ்நாடு முழுவதிலும் பெரும்பாலான திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடந்திருக்கிறது.
பல திரையரங்குகளில் காலை 5 மணி காட்சியும் 8 மணி காட்சியும் நடந்துள்ளது. அவையனைத்தையும் கணக்கில் சேர்த்தால் நேற்று மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம் என்கிறார்கள். உலகம் முழுவதும் வசூலான தொகையையும் சேர்த்தால் அது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கலாம்.
தமிழ்த் திரையுலகில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை அஜித் செய்திருக்கிறார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போதுமே அஜித் படம் என்றாலே ஓபனிங் அசத்தலாக இருக்கும். இந்தப் படத்திற்கு அசத்தலோ அசத்தலாக இருந்தது என்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தின் முதல் நாள் வசூலான 12 கோடி ரூபாயை 'வேதாளம்' முறிடியத்து, ரஜினிகாந்த் சாதனையையும் அஜித் முறிடியத்து விட்டார் என்றே சொல்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் சாதனை அதிகமாகவே வாய்ப்புண்டு.
Tags:
Cinema
,
Rajini Record Breaking Ajith
,
அஜித்
,
சினிமா
,
ரஜினி