ஸ்ருதிஹாசன் முதல் முதலாக சல்மான்கான் நடித்த ‘லக்’ இந்தி படத்தில் அறிமுகமானார். இதில் நீச்சல் உடை அணிந்து நடித்தார். தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாகவே வந்தார்.
பின்னர் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார். பூஜை, புலி, வேதாளத்துக்கு பிறகு சூர்யாவுடன் ‘சிங்கம்–3’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஓரளவு கவர்ச்சியை ஸ்ருதிஹாசன் குறைத்துக் கொண்டாலும் கவர்ச்சி உடை அணிவதை பெரிய விஷயமாகவே அவர் கருதுவது இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், சிலர் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பதுதான் கடினம். கவர்ச்சியாக நடிப்பது எளிது என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னை கேட்டால், கவர்ச்சியாக நடிப்பதுதான் கடினமானது. சிரமமானது என்பேன்.
கவர்ச்சி உடை அணிந்து கொண்டு கதாநாயகனுடன் மரத்தை சுற்றி ‘டூயட்’ பாடுவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. நடித்துப் பார்த்தால்தான் அது புரியும்.
எனவேதான் குடும்பப்பாங்கான வேடத்தையும், கவர்ச்சியையும் ஒரே மாதிரி பார்க்கிறேன். இந்த இரண்டு வேடங்களிலும் ஒரே மனநிலையுடன்தான் நடிக்கிறேன்’’ என்றார்.
Tags:
Cinema
,
கவர்ச்சியாக நடிப்பது சிரமம்
,
சினிமா
,
ஸ்ருதிஹாசன்