அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம்
‘வேதாளம்’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர். சிறுத்தை சிவா- அஜித் கூட்டணி இணைந்த இரண்டாவது படம் இது.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக, இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த
‘ஆலுமா டோலுமா’ பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்த பாடல் தற்போது புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது, இப்பாடலின் வரிகளை அமைத்து வெளியிடப்பட்ட வீடியோ, தற்போது 1 கோடி பார்வையார்களை கவர்ந்துள்ளது. ஒரு பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று இந்தளவுக்கு பெரிய அளவில் ஹிட்டாவது தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
ஏற்கனெவே, இப்படத்தின் டீசர், டிரைலர்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளன. அந்த இடத்தை இந்த பாடலும் பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.
Tags:
Cinema
,
அனிருத்
,
அஜித்
,
சினிமா
,
லட்சுமி மேனன்
,
வேதாளம்
,
ஸ்ருதிஹாசன்