சமீபகாலமாக நடிகர், நடிகைகள் தங்களது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக உள்ளனர். மேலும், ஒருசில நடிகைகள் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசனும் தனது பிறந்தநாளை கண்பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
ஸ்ருதிஹாசனுக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்த நாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் கண்பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஏராளமான குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர், அவர்களுக்கு மதிய உணவும், பரிசு பொருட்களும் அளித்தார். காப்பகத்தில் இருந்த அனைவரும் ஸ்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.
ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் சூர்யாவுடன் இணைந்து எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் இரண்டு இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கமல் நடிக்கும் அப்பா அம்மா விளையாட்டு படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
Tags:
Cinema
,
எஸ் 3
,
சினிமா
,
சூர்யா
,
ஸ்ருதிஹாசன்