நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளது தயாரிப்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.
10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளிலும் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வருகிறார்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் 40 மற்றும் 50 லட்சங்களாகதான் இருந்தது. சில படங்களிலேயே அது ரூ.1 கோடியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த ‘மாயா’,‘நானும் ரவுடிதான்’, ‘தனி ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ உள்ளிட்ட படங்கள் வசூலை குவித்தன. கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா, ஜீவாவாவுடன் நடிக்கும் திருநாள் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நயன்தாராவை அணுகி முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர கால்ஷீட் கேட்டதாகவும் அந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பதறி போன தயாரிப்பாளர் நடிகையை மாற்றும் யோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற நடிகைகளின் அதிகபட்ச சம்பளம் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அஜித்
,
ஐயா
,
சிம்பு
,
சினிமா
,
தனுஷ்
,
நயன்தாரா
,
விஜய்