தனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு பிரச்சனை இருந்ததாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
ஜோடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா. அந்த படத்தில் ரிச் கேர்ளாக வந்த த்ரிஷா மவுனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். 15 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நயன்தாரா.நானும், நயன்தாராவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் உள்ளோம். எங்களுக்கு இடையே நிறைய பிரச்சனை உள்ளது என்று கூறப்படுவது எல்லாம் மீடியா உருவாக்கியது என்கிறார் த்ரிஷா.
எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அது குறித்து நான் பேச விரும்பவில்லை.
அந்த பிரச்சனைக்கு தொழில் காரணம் அல்ல என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். எனக்கும், நயன்தாராவுக்கும் நன்கு தெரிந்த பொதுவான நண்பர்கள், நபர்களால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அப்படி இருந்தும் நாங்கள் மோதிக்கொள்ளவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பட ரிலீஸின்போது வாழ்த்துவோம் என்று த்ரிஷா கூறியுள்ளார்.
த்ரிஷா முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்த கொடி படம் ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா ராணியாக நடித்த காஷ்மோரா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Tags:
Cinema
,
ஐயா
,
சினிமா
,
திரிஷா
,
நயன்தாரா
,
பரபரப்பு
,
பிரச்னை
,
ஜோடி